Latest Updates
-
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்!
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது!
Saturn Transit In Revati Nakshatra 2026: வேத ஜோதிடத்தில் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர் சனி பகவான். இதனால் இந்த சனி பகவான் நீதிமான் என்று அழைக்கப்படுகிறார். இப்படிப்பட்ட சனி பகவான் மற்ற கிரகங்களை விட அதிகமாக ஒரு ராசியிலும், நட்சத்திரத்திலும் பயணித்து வரக்கூடியவர். அதில் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ராசியை மாற்றும் சனி பகவான், 5-6 மாதங்களுக்கு ஒருமுறை நட்சத்திரத்தை மாற்றுவார்.

இப்படி சனி பகவானின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அந்த வகையில் தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி சனி பகவான் ரேவதி நட்சத்திரத்தின் முதல் பாதத்திற்குள் நுழையவுள்ளார். இங்கு அக்டோபர் 09 ஆம் தேதி வரை இருப்பார்.
சனியின் இந்த நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், 4 ராசிக்காரர்கள் இந்த பெயர்ச்சியால் வாழ்வில் பெரிய அளவில் நல்ல மாற்றங்களைக் காணவுள்ளனர். குறிப்பாக இதுவரை பிரச்சனையால் சிரமப்பட்டு வந்தவர்கள், அதிலிருந்து விடுபட்டு, சந்தோஷமான வாழ்க்கையை வாழவுள்ளனர். இப்போது சனி நட்சத்திர பெயர்ச்சியால் வாழ்வில் நல்ல மாற்றத்தைக் காணப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
சனியின் நட்சத்திர பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். அதுவும் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. எதிர்பாராத சில நல்ல செய்திகளைப் பெறக்கூடும். நிதி நிலைமை மேம்படும். சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்குஙம்.
மிதுனம்
சனி நட்சத்திர பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களின் வாழ்வில் நல்ல மாற்றங்களைக் கொண்டு வரும். பல வழிகளில் இருந்து நல்ல செய்திகள் தேடி வரும். புதிய வருமான வழிகள் உருவாகும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் இக்காலத்தில் கைக்கு வந்து சேரும். பணியிடத்தில் சந்தித்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
கன்னி
சனி நட்சத்திர பெயர்ச்சியானது கன்னி ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் சிறப்பானதாக இருக்கப் போகிறது. முக்கியமாக மன அழுத்தம் குறைந்து, மனதில் மகிழ்ச்சி பெருகும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். நீண்ட காலமாக ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்து வந்திருந்தால், இப்பெயர்ச்சிக்கு பின் ஆரோக்கியம் மேம்படும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
துலாம்
சனி நட்சத்திர பெயர்ச்சியானது துலாம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வரப்போகிறது. அதுவும் இந்த மாற்றமானது எதிர்பார்த்த ஒன்றாக இருக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். நல்ல நிதி முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மற்றும் குடும்ப சூழல் இனிமையாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
