Latest Updates
-
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்!
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா?
Aadi Pooram 2026: ஆடி மாதம் வந்தாலே அடுத்தடுத்து வரிசையாக விஷேசங்கள் வந்தவாறு இருக்கும். அம்மனுக்குரிய ஆடி மாதத்தில் வரும், செவ்வாய், வெள்ளி, ஞாயிற்று கிழமைகள் மட்டுமின்றி, அந்த மாதத்தில் வரும் பூர நட்சத்திர நாளும் மிகவும் விஷேசமான நாளாகும். இந்நாளில் தான் செல்வத்தின் தெய்வமாக கருதப்படும் மற்றும் மகாலட்சுமி தேவியின் அம்சமாக இருக்கும் ஆண்டாளுக்கும், பார்வதி தேவியின் அம்சமான உமா தேவிக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

ஏனெனில் இந்த ஆடி பூரம் நாளில் தான் ஆண்டாள் பிறந்ததாக கூறப்படுகிறது. இதேப் போல் இந்நாளில் தான் பார்வதி தேவிக்கு வளைகாப்பு நடைபெறும். இப்படிப்பட்ட ஆடிப்பூரம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை வருகிறது. அதுவும் இந்த ஆண்டின் ஆடிப்பூரம் இன்னும் விஷேசமானது, ஏனெனில் இது அம்மனுக்குரிய ஆடி வெள்ளி கிழமையில் வருகிறது.
இந்த ஆடிப்பூர நாளில் குழந்தை பாக்கியம் பெறவும், குடும்ப கஷ்டங்கள் குறைந்து செல்வமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கவும், திருமண தடை நீங்கவும் ஒருசில வழிபாடுகள் மற்றும் செயல்கள் மேற்கொள்ளப்படும். இப்போது ஆடிப்பூரம் நாளில் ஒருவர் என்னென்ன செய்ய வேண்டும் என்பதைக் காண்போம்.
1. அம்மன் அல்லது ஆண்டாளை தரிசனம் செய்யுங்கள்
ஆடிப்பூரம் நாள் அம்பாள் அல்லது ஆண்டாளுக்கு உரிய நாளாகும். இந்நாளில் ஆண்டாள் அல்லது அம்மன் கோவிலுக்கு சென்று மனதார வழிபாடு செய்யுங்கள். இதனால் அம்மனின் அருளால் திருமண தடைகள் நீங்கும், குழந்தை பாக்கியம் கிட்டும், குடும்ப பிரச்சனைகள் குறையும். ஒருவேளை உங்களால் கோவிலுக்கு செல்ல முடியாவிட்டால், வீட்டிலேயே அம்மன் படத்திற்கு பூக்களை வைத்து, 2 நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம்.
2. ஆண்டாளுக்கு துளசி மாலை சாற்றுங்கள்
ஆண்டாளுக்கு உரிய ஆடிப்பூரம் நாளில் துளசி, மல்லிகை, தாமரை போன்ற மாலைகளை சாற்றி வழிபாடு செய்யுங்கள். இதன் மூலம் திருமணமாகாதவர்களுக்கு நல்ல வாழ்க்கை துணை அமையும், திருமண வாழ்க்கையில் அன்பும், ஒற்றுமையும் நிலைக்கும்.
3. அம்மனுக்கு வளையலை சாற்றுங்கள்
ஆடிப்பூரம் நாளில் அம்மனுக்கு வளைகாப்பு நடத்துவார்கள். எனவே இந்த நாளில் அம்மனுக்கு கண்ணாடி வளையல்களை வாங்கி சமர்ப்பித்து வழிபாடு செய்யுங்கள். வழிபாட்டிற்கு பின் பிரசாதமாக கொடுக்கப்படும் வளையல்களை பெண்கள் அணிந்து கொண்டால், அது செழிப்பான வாழ்க்கையையும், குழந்தை பாக்கியத்தையும் தரும் என்பது நம்பிக்கை.
4. சுமங்கலி பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு தாம்பூலம் கொடுங்கள்
ஆடிப்பூரம் நாளில் சுமங்கலி பெண்கள், திருமண வயது பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம், வளையல், பூ, கண்ணாடி, முடிந்தால் ஆடை போன்றவற்றை கொடுக்கலாம். ஒருவேளை இத்தனையும் கொடுக்க முடியாவிட்டால் ஏதாவது ஒன்றை கொடுத்தால் போதும். இதனால் வீடு செல்வ செழிப்போடு இருக்கும் என்பது நம்பிக்கை.
5. பிரசாதம் செய்து படைத்து வழிபடுங்கள்
ஆடிப்பூரம் நாளன்று அம்மனை வழிபடும் போது சர்க்கரை பொங்கல், பாயாசம், சுண்டல் போன்றவற்றை பிரசாதமாக படைத்து வழிபாடு செய்யுங்கள். அதன் பின் அதை அனைவருக்கும் பிரசாதமாக கொடுங்கள்.
ஆடிப்பூரம் நாளில் அம்மனின் அருளை இன்னும் எளிய வழியில் பெற விரும்பினால், வீட்டில் அம்மன் படத்தை பூக்களால் அலங்கரித்து, கண்ணாடி வளையலை படத்திற்கு முன் வைத்து, ஏதாவது ஒரு பிரசாதத்தை செய்து படைத்து, நெய் தீபம் ஏற்றி, முடிந்ததை தாம்பூலமாக கொடுத்தாலே போதும்.



Click it and Unblock the Notifications
