முகத்தில் கரும்புள்ளிகள் அதிகமா இருக்கா? அப்ப இந்த 3 பொருட்களை வெச்சு ஃபேஸ் பேக் போடுங்க..

Summer Skin Care Tips In Tamil: ஒவ்வொருவருமே தங்கள் முகம் பளிச்சென்று பிரகாசமாக இருக்க வேண்டுமென்று விரும்புவோம். அதற்காக சருமத்தில் பல்வேறு பராமரிப்புக்களையும் மேற்கொள்வோம். அதுவும் தற்போதைய கடுமையான வெயிலின் தாக்கம், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் சருமத்தில் பல்வேறு சரும பிரச்சனைகளை வரவழைக்கின்றன. அதில் முகப்பரு, கரும்புள்ளிகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இப்படி முகத்தில் வரும் பருக்கள் மறையும் போது தழும்புகளை விட்டுச் செல்லும். அதுமட்டுமின்றி சருமத்துளைகள் அழுக்குகள் அதிகம் சேர்ந்து கரும்புள்ளிகளை வரவழைக்கும். இப்படி சந்திக்கும் பிரச்சனைகளைப் போக்க பெரும்பாலான மக்கள் இயற்கை வழிகளையே முதலில் மேற்கொள்ள நினைப்பர். ஏனெனில் நம் வீட்டு சமையலறையில் உள்ள பல பொருட்கள் ஏராளமான மருத்துவ பண்புகளைக் கொண்டவை.

Summer Skin Care Tips Top 7 Homemade Face Packs To Remove Dark Spots

இந்த பொருட்களைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்புக்களை கொடுக்கும் போது, சரும பிரச்சனைகள் விரைவில் சரியாவதோடு, சரும செல்களின் ஆரோக்கியம் மேம்பட்டு, முகம் பளிச்சென்று பிரகாசமாக மின்னும். கீழே கரும்புள்ளிகள், முகப்பரு தழும்புகள் போன்ற சரும பிரச்சனைகளைப் போக்க உதவும் சில நேச்சுரல் ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

1. மஞ்சள் மற்றும் கடலை மாவு ஃபேஸ் பேக்

தேவையான பொருட்கள்:

* கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* பால் அல்லது ரோஸ் வாட்டர் - 1 டேபிள் ஸ்பூன்

பயன்படுத்தும் முறை:

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் கடலை மாவு மற்றும் மஞ்சள் தூளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் பால் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வர, கரும்புள்ளிகள் நீங்கி, முகம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.

2. சந்தன மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக்

தேவையான பொருட்கள்:

* சந்தன பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
* ரோஸ் வாட்டர் - 1 டேபிள் ஸ்பூன்

பயன்படுத்தும் முறை:

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் சந்தன பவுடரை எடுத்து, ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி பயன்படுத்தி வந்தால், சருமத்தின் நிறம் அதிகரித்து, சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி, முகம் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

3. முல்தானி மெட்டி மற்றும் தக்காளி ஃபேஸ் பேக்

தேவையான பொருட்கள்:

* முல்தானி மெட்டி - 1 டேபிள் ஸ்பூன்
* தக்காளி ஜூஸ் - 1 டேபிள் ஸ்பூன்

பயன்படுத்தும் முறை:

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பவுடரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் தக்காளி ஜூஸ் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தை இறுக்கமடையச் செய்வதோடு, சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீங்கி, முகத்தை பிரகாசமாக வைத்துக் கொள்ள உதவும்.

4. பாதாம் மற்றும் பால் ஃபேஸ் பேக்

தேவையான பொருட்கள்:

* ஊற வைத்த பாதாம் - 4-5
* காய்ச்சாத பால் - 1 டேபிள் ஸ்பூன்

பயன்படுத்தும் முறை:

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஊற வைத்த பாதாமை காய்ச்சாத பால் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்திற்கு நல்ல நிறத்தை அளிப்பதோடு, கரும்புள்ளிகளை மறைய உதவி புரியும்.

5. வேப்பிலை மற்றும் துளசி ஃபேஸ் பேக்

தேவையான பொருட்கள்:

* வேப்பிலை பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
* துளசி பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
* தயிர் - 1 டேபிள் ஸ்பூன்

பயன்படுத்து முறை:

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் வேப்பிலை பவுடரை எடுத்து, அத்துடன் துளசி பவுடரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் முகத்தில் உள்ள பருக்களைப் போக்குவதோடு, முகப்பரு தழும்புகளையும், கரும்புள்ளிகளையும் அகற்றும்.

6. ஆரஞ்சு தோல் மற்றும் தேன் ஃபேஸ் பேக்

தேவையான பொருட்கள்:

* ஆரஞ்சு தோல் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
* தேன் - 1 டீஸ்பூன்
* தயிர் - 1 டீஸ்பூன்

பயன்படுத்தும் முறை:

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு தோல் பவுடரை எடுத்து, அத்துடன் தேன் மற்றும் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை போடுவதன் மூலம், முகத்தில் உள்ள கருமை நீங்குவதோடு, கரும்புள்ளிகளும் எளிதில் அகற்றப்படும்.

7. பப்பாளி மற்றும் ஓட்ஸ் ஃபேஸ் பேக்

தேவையான பொருட்கள்:

* கனிந்த பப்பாளி - சிறிது
* ஓட்ஸ் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
* எலுமிச்சை சாறு - சிறிது

பயன்படுத்தும் முறை:

* ஒரு பௌலில் கனிந்த பப்பாளியை எடுத்து நன்கு மசித்து விட வேண்டும்.
* பின் அத்துடன் ஓட்ஸ் பவுடரை சேர்த்து கலந்து, சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். எண்ணெய் பசை சருமத்தினர், எலுமிச்சை சாற்றினை சேர்ப்பதைத் தவிர்க்கவும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் முகத்தில் உள்ள கருமையை நீக்குவதோடு, முகத்திற்கு நல்ல பொலிவையும், புத்துணர்ச்சியையும் தரும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Friday, May 16, 2025, 18:30 [IST]
Desktop Bottom Promotion