Latest Updates
-
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட்
மனிதர்களிடம் அவசியம் இருக்க வேண்டிய அடிப்படை நல்ல குணங்களில் ஒன்று நன்றியுணர்வு. நன்றியுணர்வு உள்ள மனிதரே நல்ல மனிதர் என்று அழைக்கப்படுகிறார்கள். கடினமான காலங்களில் உங்களுக்கு உதவிய அன்புக்குரியவர்கள், நண்பர்கள், சக ஊழியர்கள் மற்றும் பிறருக்கு நீங்கள் எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறீர்கள் என்பதை இது காட்டுகிறது. இக்கட்டான தருணங்களில் உங்களுக்குத் துணையாக நின்றவர்களுக்கு நன்றியைத் தெரிவிப்பது உங்களிடம் அவசியம் இருக்க வேண்டிய குணமாகும்.

நன்றியுணர்வுடன் இருப்பதற்கு அதிக முயற்சி தேவையில்லை. இது எல்லோரிடமும் இருக்க வேண்டிய ஒரு நல்ல பண்பு, ஆனால் சிலர் தங்கள் நன்றியை எப்படி வெளிப்படுத்துவது என்று கூடத் தெரிந்து கொள்வதில்லை. நன்றியுணர்வு இல்லாத மனிதர்கள் இருப்பார்களா என்று நீங்கள் கேட்கலாம், ஆனால் உண்மையில் அப்படிப்பட்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு நன்றியுணர்வை வெளிப்படுத்த தெரிவதில்லை அல்லது வெளிப்படுத்த விரும்புவதில்லை. ஜோதிடத்தின் படி சில ராசிக்காரர்கள் பிறந்தவர்களிடம் நன்றியுணர்வு துளியும் இருக்காது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் ஒழுக்கத்தின் கிரகமான சனிபகவானின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள். அவர்கள் யதார்த்தமானவர்கள், ஒழுக்கமானவர்கள், சுதந்திர மனப்பான்மை கொண்டவர்கள் மற்றும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு செயல்படுபவர்கள் என்று அறியப்படுகிறார்கள். அவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்கள் அல்ல. தங்கள் வார்த்தைகளில் சற்று கடுமையைக் கொண்டிருப்பதால், தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவது அவர்களுக்கு எப்போதும் மிகவும் கடினமாக இருக்கும்.
மற்றவர்களுக்குத் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த அவர்கள் பெரிதாக முயற்சிப்பதில்லை என்பதால், மற்றவர்களுக்கு நன்றி சொல்வதும் மிகவும் கடினமானாக உள்ளது. மக்கள் தங்கள் கனிவான பக்கத்தை தெரிந்து கொள்ள கூடாது என்றும், கடுமையாக நடந்துகொண்டால் மட்டுமே மக்கள் தங்கள் வார்த்தைகளை கேட்பார்கள் என்றும் இவர்கள் கருதுவதால், தங்கள் முரட்டுத்தனமான மற்றும் கடுமையானமுகத்தையே எப்போதும் வெளிப்படுத்துகிறார்கள்.
தங்களோடு இரவும் பகலும் கடுமையாக உழைத்தவர்களிடம் கூட இவர்கள் தங்கள் பாராட்டுக்களைத் தெரிவிப்பதில்லை. இவர்களின் நன்றியுணர்வு, ஆதரவு மற்றும் அனுதாபம் ஆகியவை இவர்களின் இதயத்திற்குள்ளேயே எப்போதும் இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினர் நெருப்பு கிரகமான செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள். இவர்கள் முரட்டுத்தனமான, கடுமையான, பொறாமை குணம் கொண்ட மற்றும் மற்றவர்களைத் தங்கள் விருப்பப்படி கையாளும் இயல்புடையவர்களாக அறியப்படுகிறார்கள். எனவே, தங்களின் கடினமான காலங்களில் உதவியவர்களுக்கு நன்றி தெரிவிப்பது இவர்களுக்கு எப்போதும் கசப்பானதாக இருக்கிறது. அவர்கள் மனதளவில் மிகவும் வலிமையானவர்கள் மற்றும் எளிதில் உணர்ச்சிவசப்படாதவர்கள்.
தங்கள் மனநிலைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப மற்றவர்களைக் கட்டுப்படுத்தும் போக்கு அவர்களிடம் அதிகமாக உள்ளது. தங்களோடு உண்மையாகப் பழகும் நபர்களிடம் கூட கனிவான வார்த்தைகளைப் பேசாததால், அவர்கள் நன்றியற்றவர்களாகவும் ஆணவம் பிடித்தவர்களாகவும் கருதப்படுகிறார்கள். அவர்கள் மற்றவர்களிடமிருந்து உதவியைப் பெறுகிறார்கள், ஆனால் அதற்காக நன்றி தெரிவிக்க மாட்டார்கள். மக்களுடன் நட்பாகப் பழகுவதை இவர்கள் கடினமாக உணர்கிறார்கள். மேலும், தங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் மற்றவர்களிடம் வெளிப்படுத்த அதிக நேரம் எடுத்துக்கொள்கிறார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

