உணவில் பெருங்காயம் பயன்படுத்தினால் 'பெரும் காயம்' கூட குணமாகுமாம்!!!

Posted By:
Subscribe to Boldsky

பெருங்காயம், நிறைய பேருக்கு இதன் வாடையே பிடிக்காது. பெரும்பாலும் சமையல் அறைகளை தன் வாசனையால் கட்டிப்போடும் தன்மை கொண்டது பெருங்காயம். உணவில் ருசியை அதிகரிக்கும் குணம் கொண்ட பெருங்காயம் உங்களது உடல்நலனையும் சரி செய்யும் பண்புடையதாம்.

பெண்களின் உடல் சார்ந்த வியாதிகள் மற்றும் ஆண்களின் அந்தரங்க பிரச்சனைகளுக்கு என முக்கியமான உடல்நல கோளாறுகளுக்கு நல்ல தீர்வளிக்கிறது பெருங்காயம். இதில் இருக்கும் ஊட்டச்சத்துகள் உடல்நலத்தை பாதுகாக்கவும், உடற்திறனை அதிகரிக்கவும் வெகுவாக உதவுகிறது. இனி, பெருங்காயத்தை உணவில் உபயோகப்படுத்துவதனால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி விரிவாக தெரிந்துக் கொள்ளலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செரிமானம்

செரிமானம்

வயிற்று கோளாறுகளையும், செரிமான பிரச்சனைகளையும் சரி செய்ய உதவகிறது. இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் எரிச்சலை தீர்க்கும் தன்மை நாடா புழு, வாயு பிரச்சனை, குடல் எரிச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது.

மகளிர் பிரச்சனைகள்

மகளிர் பிரச்சனைகள்

பெண்களுக்கு மாதவிடாய் நாட்கள் தள்ளிப் போவது, வெள்ளை போக்கு, ஈஸ்ட் தொற்று மற்றும் இதர பிறப்புறுப்பு தொற்று பிரச்சனைகளுக்கு பெருங்காயம் நல்ல முறையில் தீர்வளிக்கும்.

ஆண்மையை அதிகரிக்கும்

ஆண்மையை அதிகரிக்கும்

ஆண்மைக் குறைவுள்ள ஆண்கள் பெருங்காயத்தை சிறிதளவு உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இது, ஆண்மை குறைவை போக்கும்.

இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்

இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்

பெருங்காயத்தை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நீங்கள் அடையும் மற்றுமொரு சிறந்த பயன் என்னவெனில், இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.

 சுவாச கோளாறுகள்

சுவாச கோளாறுகள்

கபத்தை நீக்கி சுவாச கோளாறுகளுக்கு தீர்வளிக்கிறது பெருங்காயம். நெஞ்சு சளியை கரைக்கவும் இது உதவுகிறது.

இரத்த சர்க்கரை அளவு

இரத்த சர்க்கரை அளவு

கணையத்தில் இருக்கும் செல்களை தூண்டி, உங்களது இரத்த சர்க்கரை அளவை குறைக்க வெகுவாக உதவுகிறது பெருங்காயம்.

உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் பெருங்காயம் மேலும் இரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்க, இரத்த கட்டிகள் உருவாகாமல் தடிக்க மற்றும் இரத்தத்தின் அடர்த்தியை சீராக வைத்துக் கொள்ள சீரிய அளவில் பயனளிக்கிறது பெருங்காயம்.

வலி நிவாரணம்

வலி நிவாரணம்

தலை வலி, பல் வலி மற்றும் மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் வலிகளை குறைக்க பெருங்காயம் உதவுகிறது.

புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது

புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது

பெருங்காயத்தில் இருக்கும் ஆன்டி- ஆக்ஸிடன்ட் புற்றுநோய் அபாயம் ஏற்படாது பாதுகாக்க உதவுகிறது.

சரும பிரச்சனைகள்

சரும பிரச்சனைகள்

சரும எரிச்சல், சன் பர்ன் பிரச்சனையை சரி செய்ய பெருங்காயம் உதவுகிறது. முகத்தின் சருமத்தில் இருக்கும் நச்சு கிருமிகளையும் அழிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Story first published: Friday, March 20, 2015, 13:28 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter