பலருக்கும் தெரியாத இஞ்சியில் நிறைந்துள்ள நன்மைகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

உணவின் சுவையையும், மணத்தையும் அதிகரிக்க எப்படி ஏலக்காய், பட்டை, கிராம்பு, பூண்டு போன்ற பொருட்கள் பயன்படுகிறதோ, இதேப்போல தான் இஞ்சியும் பயன்படுகிறது. பலருக்கும் இஞ்சியைக் கடித்தால், அதன் காரத்தன்மையால் முகம் பலவாறு செல்லும். ஆனால் அந்த இஞ்சியில் பல நன்மைகள் அடங்கியுள்ளது. இதில் நிறைந்துள்ள மருத்துவ குணத்தால், எண்ணற்ற நோய்களை குணப்படுத்த முடியும்.

மேலும் ஆயுர்வேதத்தில் இஞ்சியும் நோய்களை குணமாக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. அத்தகைய இஞ்சியின் சில ஆரோக்கிய நன்மைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பசியைத் தூண்டும்

பசியைத் தூண்டும்

உங்களுக்கு பசி எடுக்காவிட்டால், உணவை சாப்பிடும் முன் சிறு துண்டு இஞ்சியை சாப்பிட்டால், அவை பசியை நன்கு தூண்டும்.

செரிமானத்தை அதிகரிக்கும்

செரிமானத்தை அதிகரிக்கும்

இஞ்சியில் நிறைந்துள்ள சத்துக்கள், உணவை செரிக்க உதவும் அமிலத்தை அதிகரித்து, உணவை சீராக செரிக்க உதவும்.

சத்துக்களை உறிஞ்ச உதவும்

சத்துக்களை உறிஞ்ச உதவும்

இஞ்சியை உணவில் சேர்த்து வருவதன் மூலம், ஊட்டச்சத்துக்களை உடலானது உறிஞ்ச உதவி புரியும்.

குமட்டல்

குமட்டல்

குமட்டல் வரும் போது, சிறிது இஞ்சியை தேன் தொட்டு வாயில் போட்டு மென்றால், குமட்டல் நின்றுவிடும்.

வயிற்று பிடிப்பு

வயிற்று பிடிப்பு

உங்களுக்கு வயிறு அடிக்கடி ஒரு பக்கமா பிடிக்குதா? அப்படியெனில் அப்போது சிறிது இஞ்சியை வாயில் போட்டு மென்றால், வயிற்றுப் பிடிப்பில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

மூட்டு வலி

மூட்டு வலி

மூட்டு வலியால் அவஸ்தைப்படுபவர்களா நீங்கள்? அப்படியெனில் சிறுதுண்டு இஞ்சியை அவ்வப்போது வாயில் போட்டு மெல்லுங்கள்.

மூக்கடைப்பு

மூக்கடைப்பு

மூக்கடைப்பு இருக்கும் போது, இஞ்சியைக் கொண்டு டீ போட்டு குடித்தால், மூக்கடைப்பு உடனே நீங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Super Benefits Of Ginger You Did Not Know

Ginger is one condiment which not just spices up your food and gives it the punch; it also comes with a lot of health and beauty benefits. Here are some of them.
Story first published: Wednesday, March 25, 2015, 9:04 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter