Latest Updates
-
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்!
அடுப்பில்லாம செய்யக்கூடிய இடிச்ச தயிர் சட்னி - சூடான சாத்துக்கு செமயா இருக்கும்.. ட்ரை பண்ணி பாருங்க..
No Gas No Oil No Boil Idicha Thayir Chutney Recipe In Tamil: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டதால், தற்போது மக்கள் தங்கள் வீடுகளில் இருக்கும் கேஸை மிச்சப்படுத்த, அடுப்பை பயன்படுத்தாமல் சமைக்கக்கூடிய ரெசிபிக்களை தெரிந்து கொண்டு, அவற்றை செய்ய முயற்சிக்கிறார்கள். நீங்களும் அப்படி அடுப்பில்லாமல் செய்யக்கூடிய ரெசிபிக்களை தெரிந்து கொள்ள நினைக்கிறீர்களா?
ஏற்கனவே நாம் அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம், அவல் பாயாசம், தக்காளி வெங்காய பச்சடி போன்ற ரெசிபிக்களைப் பார்த்துள்ளோம். இன்று நாம் பார்க்கப் போவது அடுப்பில்லாமல் செய்யக்கூடிய இடிச்ச தயிர் சட்னியைத் தான். இந்த சட்னியானது சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக சமைக்க பிடிக்காத நேரத்தில், குறிப்பாக கோடைக்காலத்தில் இப்படியான எளிமையான ரெசிபிக்களை தெரிந்து வைத்துக் கொண்டால், அது நிச்சயம் உங்களின் சமையலை எளிதாக்கும்.

உங்களுக்கு இடிச்ச தயிர் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இடிச்ச தயிர் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பூண்டு - 10 பல்
* பச்சை மிளகாய் - 2
* சின்ன வெங்காயம் - 8
* கொத்தமல்லி - சிறிது
* கெட்டி தயிர் - 1/4 கப்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு.. (விருப்பமிருந்தால்)
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் இடி கல்லில் 10 பல் பூண்டு மற்றும் 2 பச்சை மிளகாயை
சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 8 சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு இடித்துக் கொள்ள
வேண்டும்.
* அடுத்து சிறிது கொத்தமல்லியை சேர்த்து அரைக்க வேண்டும்.
* பிறகு அத்துடன் 1/4 கப் கெட்டி தயிரை சேர்க்க வேண்டும்.
* பின்னர் அதில் 1 டீஸ்பூன் மிளகாய் தூள், 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்,
1 டீஸ்பூன் மல்லித் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு
கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அரைத்ததை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டால், இடிச்ச
தயிர் சட்னி தயார்.
* ஒருவேளை உங்கள் வீட்டில் கேஸ் இருந்தால், அத்துடன் தாளிப்பை
சேர்க்கலாம். அதை தாளிப்பதற்கு ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து,
அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.



Click it and Unblock the Notifications
