Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க..
No Gas No Oil No Boil Tomato Onion Pachadi Recipe In Tamil: தற்போது சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அனைவரும் வீட்டில் கேஸ் சிலிண்டரை சிக்கனமாக பயன்படுத்த நினைக்கின்றனர். அதற்காக அடுப்பை பயன்படுத்தாமல் செய்யக்கூடிய ரெசிபிக்களை தெரிந்து கொள்ள அதிக ஆவல் காட்டுகின்றனர்.
நீங்களும் அடுப்பை பயன்படுத்தாமல் சிம்பிளாக செய்யக்கூடிய ரெசிபிக்களை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? அதுவும் சாதத்துடன் சேர்த்து சாப்பிடக்கூடியவாறான ஒரு ருசியான ரெசிபியை தெரிந்து கொள்ள வேண்டுமா?

அப்படியானால் தக்காளி வெங்காய பச்சடியை செய்யுங்கள். இந்த பச்சடி செய்வதற்கு ஒருசில பொருட்களே போதுமானது. இந்த பச்சடியை சூடான சாதத்துடன் சேர்த்து, நெய் ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.
உங்களுக்கு இந்த தக்காளி வெங்காய பச்சடியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி வெங்காய பச்சடி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சை மிளகாய் - 4
* புளி - 1 சிறிய துண்டு
* பெரிய வெங்காயம் - 1
* பூண்டு - 4 பல்
* தக்காளி - 1
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் இடி உரலில் பச்சை மிளகாயை நறுக்கி சேர்த்து, நன்கு
இடிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் சிறு துண்டு புளியை சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு இடிக்க
வேண்டும்.
* பிறகு அதில் பூண்டு பற்களை சேர்த்து மென்மையாகும் வரை இடிக்க
வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை
அரைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் சுவைக்கேற்ப உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து
நன்கு அரைத்தால், சுவையான தக்காளி வெங்காய பச்சடி தயார்.



Click it and Unblock the Notifications
