ஆண்கள் கேரட் சாப்பிட்டால் விந்தணுவின் ஆரோக்கியம் மேம்படுமாம் : ஆய்வில் தகவல்!

Posted By:
Subscribe to Boldsky

வருடம் முழுவதும் கிடைக்கும் காய்கறிகளில் ஒன்று தான் கேரட். பொதுவாக கேரட் சாப்பிட்டால், பார்வை கோளாறுகள் ஏற்படுவது தடுக்கப்பட்டு, கண்களின் ஆரோக்கியம் மேம்படும் என்று தான் தெரியும். ஆனால் தற்போது ஆண்கள் கேரட் சாப்பிட்டால், அவர்களின் விந்தணுவின் தரமும், ஆரோக்கியமும் மேம்படும் என்று ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

கேரட்டை தவறாமல் உணவில் சேர்த்தால் கிடைக்கும் நன்மைகள்!!!

தற்போது பல ஆண்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று விந்தணு உற்பத்தி குறைபாடு மற்றும் அதன் தரம் குறைவாக இருப்பது. இதற்கு முக்கிய காரணம் சுற்றுச்சூழலும், பழக்கவழக்கங்களும் தான். ஆனால் கேரட்டை ஆண்கள் அன்றாடம் சாப்பிட்டு வந்தால், அவர்களின் இனப்பெருக்க உறுப்புக்களின் ஆரோக்கியம் மேம்படும்.

கல்லீரலைத் தூய்மைப்படுத்தும் 15 உணவுகள்!!!

இப்போது எப்படி கேரட் விந்தணுவின் தரம் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆய்வில் 200 ஆண்கள்

ஆய்வில் 200 ஆண்கள்

அமெரிக்காவில் உள்ள ஹார்வார்டு பல்கலைகழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் 200 இளம் ஆண்கள் பல்வேறு வகையான காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொண்டு வந்து, அதனால் விந்தணுவின் ஆரோக்கியத்தை ஆராய்ந்தனர்.

மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற உணவுகள்

மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற உணவுகள்

அந்த ஆராய்ச்சியில் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற உணவுகளை உட்கொண்டவர்களின் விந்தணு ஆரோக்கியமாகவும், வலிமையுடனும் இருப்பது தெரிய வந்தது.

கேரட் சிறந்தது

கேரட் சிறந்தது

ஆரஞ்சு நிற காய்கறிகளிலேயே கேரட்டில் தான் விந்தணுவின் தரத்தை அதிகரிக்கும் கரோட்டினாய்டு அதிகம் உள்ளதால், ஆண்கள் இதனை அன்றாடம் உட்கொண்டு வந்தால், விந்தணு குறைபாடு நீங்கும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரைவள்ளி கிழங்கு மற்றும் முலாம்பழம்

சர்க்கரைவள்ளி கிழங்கு மற்றும் முலாம்பழம்

அதேப்போல் சர்க்கரைவள்ளி கிழங்கு மற்றும் முலாம் பழமும் விந்தணுவின் எண்ணிக்கையையும், தரத்தையும் அதிகரிப்பதாக இந்த ஆய்வு சொல்கிறது. இருப்பினும் கேரட் விந்தணுவின் இயக்கம், அதாவது விந்தணுவானது நீந்தி கருமுட்டையை அடையும் அளவிலான சக்தியை கொண்டுள்ளதாகவும் ஆய்வு கூறுகிறது.

தக்காளி

தக்காளி

சிவப்பு பழங்கள் மற்றும் காய்கறிகளில், அதிலும் லைகோபைன் என்னும் புற்றுநோய் எதிர்ப்பு கெமிக்கல் நிறைந்த தக்காளியானது, வழக்கத்துக்கு மாறான வடிவம் கொண்ட விந்தணுவை சரிசெய்யும் நிகழ்வுடன் தொடர்புடையதாக இருப்பதும் தெரியவந்தது.

கரோட்டினாய்டு மற்றும் லைகோபைன் அவசியம்

கரோட்டினாய்டு மற்றும் லைகோபைன் அவசியம்

ஆகவே ஆண்கள் தங்களின் விந்தணுவின் ஆரோக்கியத்தையும், தரத்தையும், எண்ணிக்கையும் சரியாக பராமரிக்க, அன்றாட உணவில் கரோட்டினாய்டு நிறைந்த கேரட்டையும், லைகோபைன் நிறைந்த தக்காளியையும் சேர்த்துக் கொள்வது நல்லது.

குறிப்பு

குறிப்பு

விந்தணுவின் தரத்தை அதிகரிக்க, கேரட் மற்றம் தக்காளியுடன், நல்ல கொழுப்புக்கள் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டுகள் நிறைந்த மீன்கள் மற்றும் இதர உணவுகளை தேர்ந்தெடுத்து அதிக அளவில் உட்கொண்டு வருவது இன்னும் சிறந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Men Should Eat Carrots For Healthier Sperm

Carrots can not only help men see in the dark – they can also improve the health of their sperm.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter