மாதவிடாயின் போது உடலுறவு கொள்ளலாமா?

Posted By:
Subscribe to Boldsky

நிறைய பேருக்கு வரும் சந்தேகங்களில் ஒன்று தான் மாதவிடாயின் போது உடலுறவு கொள்ளலாமா என்பது. ஏனெனில் மாதவிடாய் காலத்தில் பெண்களை அசுத்தம் என்று ஒதுக்கி வைப்பது தான் காரணம். ஆனால் பலரும் மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொண்டால், கருத்தரிப்பதை தவிர்க்கலாம் என்று நினைக்கின்றனர். ஆனால் அனைத்து பெண்களுக்குமே இந்த நிலை இருக்காது.

கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வது பற்றிய கட்டுக்கதைகளும்... உண்மைகளும்...

சில நேரங்களில் மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபட்டாலும் கருத்தரிக்கக்கூடும். மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால், ஒருசில நன்மைகளும் உள்ளன. அதே சமயம் தீமைகளும் உள்ளன. சரி, இப்போது மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடலாமா இல்லையா என்றும், உடலுறவில் ஈடுபட்டால் விளையும் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன என்றும் பார்ப்போம்.

கர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால் கருத்தரிக்க வாய்ப்புள்ளதா?

மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால் கருத்தரிக்க வாய்ப்புள்ளதா?

ஆம். பலரும் மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால் கருத்தரிக்க முடியாது என்று தவறாக நினைக்கின்றனர். ஆனால், மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால், கருத்தரிக்கும் வாய்ப்பு நிச்சயம் உள்ளது.

அனைத்து இரத்தக்கசிவும் மாதவிடாய் சுழற்சி அல்ல

அனைத்து இரத்தக்கசிவும் மாதவிடாய் சுழற்சி அல்ல

சில நேரங்களில் பெண்களுக்கு ஓவுலேசன் (கருமுட்டை வெளிவரும் நாள்) நடைபெறும் போது லேசாக இரத்தக்கசிவு ஏற்படும். இந்நேரத்தில் கருமுட்டைகள் முதிர்ந்திருக்கும். இக்காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால், கருத்தரிக்கக்கூடும்.

ஓவுலேசன் எப்போதும் ஏற்படலாம்

ஓவுலேசன் எப்போதும் ஏற்படலாம்

அனைத்து பெண்களுக்கும் ஓவுலேசன் மாறுபடும். மேலும் இதனை கண்டறிவது என்பது கடினம். ஏனெனில் விந்தணு கருமுட்டையுடன் இணைய மூன்று நாட்கள் போதும் என்பதால், மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடுவது ஆபத்தானது.

மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால் கிடைக்கும் நன்மைகள்

மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால் கிடைக்கும் நன்மைகள்

மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடும் போது, பெண்கள் உச்ச நிலையை எளிதில் அடைவதோடு, அப்போது வெளிவரும் எண்டோர்பின் என்னும் ஹஹார்மோன் இயற்கை வலி நிவாரணியாக செயல்படுவதுடன், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் மன அழுத்தம், வயிற்றுப் பிடிப்பு, எரிச்சல் போன்றவை ஏற்படாமல் இருக்கும். மேலும் இக்காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால், உணர்ச்சி அதிகம் இருப்பதால், பெண்கள் இன்பத்தை நன்கு அனுபவிக்கலாம்.

தீமைகள்

தீமைகள்

நன்மை என்ற ஒன்று இருந்தால், அதில் தீமையும் இருக்கும். எவ்வளவு தான் காண்டம் பயன்படுத்தி மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபட்டாலும், பாலியல் நோய்கள் மற்றும் இதர நோய்த்தொற்றுகள் எளிதில் தொற்றக்கூடும். ஆகவே முடிந்த வரையில் மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடுவதைத் தவிர்த்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Is It Okay To Have Intercourse During Menstrual Periods?

Is it okay to have intercourse during menstrual periods? Check out...