உங்கள் வாழ்க்கை முறை எவ்வாறு உங்கள் எலும்புகளைப் பாதிக்கிறது என்று தெரியுமா?

Posted By: Srinivasan P M
Subscribe to Boldsky

நீங்கள் ஒரு சாதாரணமான வாழ்க்கை வாழ வலுவான எலும்புகள் அவசியம். ஆனால் வயதுகள் ஓட உங்கள் எலும்புகளின் பலமும் உடம்பின் மற்ற உறுப்புகளைப் போல வலுவிழக்கும். ஆனால் உங்கள் தினசரி வாழ்க்கை முறை நீங்கள் வயதாவதற்கு முன்பே உங்கள் எலும்புகளை பதம் பார்த்துவிட்டால்? ஆம், சில கெட்ட பழக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் எலும்புகளை பாதிக்கும்.

சோடா, புகைப் பழக்கம் ஏன் மதுவும் கூட எலும்புகளைப் பாதிக்கும். இந்த கெட்ட பழக்கங்கள் இல்லை என்றாலும் கூட உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறையும், காப்ஃபைன் உள்ள பானங்களைப் பருகுவதும் கூட எலும்புகளை பலவீனமடையச் செய்கிறது. சூரிய வெளிச்சம் படாத உடம்பிலும் எலும்புகள் பலவீனமடையும். மேலும் பார்க்கலாம் வாங்க.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கால்சியம் குறைபாடு

கால்சியம் குறைபாடு

உங்கள் அன்றாட உணவில் கால்சியம் தேவையான அளவு இல்லையெனில் உங்கள் எலும்புகளை வலுவுடன் வைப்பதில் சிக்கல் ஏற்படும்.

உடலுழைப்பற்ற வாழ்க்கைமுறை

உடலுழைப்பற்ற வாழ்க்கைமுறை

நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்தால் உங்கள் எலும்புகள் நீடித்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் சோம்பேறியாய் இருப்பது எலும்புகளைப் பாதிக்கும்.

காப்ஃபைன்

காப்ஃபைன்

உணவில் காப்ஃபைன் அதிகம் இருக்குமானால், அது உடலானது கால்சியம் சத்தை எடுத்து கொள்வதைத் தடுக்கும். இது எலும்பு பலவீனத்திற்கு வழிவகுக்கும்.

புகைப் பழக்கம்

புகைப் பழக்கம்

ஆம், புகைப்பது உங்கள் எலும்பு அடர்த்தியைக் குறைக்கவும் பிற்காலத்தில் ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்கு வழிவகுக்கவும் செய்யும்.

வெயில் போதிய அளவு படாமல் இருத்தல்

வெயில் போதிய அளவு படாமல் இருத்தல்

கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய சத்துக்களை உறிஞ்ச உடம்பிற்கு வைட்டமின் டி போதிய அளவு தேவை என்பதை நாம் அனைவரும் அறிவோம். வெயிலிலிருந்து கிடைக்கும் இந்த வைட்டமின் டி சத்தை போதிய அளவு நாம் வழங்கவில்லை என்றால் எலும்புகள் வலுவிழக்கும்.

குடிப்பழக்கம்

குடிப்பழக்கம்

அதிக அளவு மது அருந்துவது எலும்புகளைப் பாதிக்கும் என உடல் நல வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். உண்மையில் குடிப்பழக்கம் உள்ள இளம் தலைமுறையினர் பிற்காலத்தில் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்களால் பாதிக்கப்படுவார்கள் என ஒரு ஆராய்ச்சி கூறுகிறது.

உப்பு

உப்பு

ஒரு ஆய்வில் அதிக அளவு உப்பு அல்லது சோடியம் கால்சியம் குறைபாட்டை ஏற்படுத்தும். ஏனென்றால் உடம்பு அதிக அளவு உப்பை வெளியிடும் போது கால்சியத்தையும் சேர்த்தே வெளியிடும் .

சோடா பானங்கள்

சோடா பானங்கள்

பலர் இதை நம்ப மறுத்தாலும் உங்கள் உணவில் கால்சியம் குறைவாக இருந்தால், இந்த பானங்களைப் பருகுவது எலும்புகளைப் பாதிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How Your Lifestyle Affects Your Bones

You need strong bones to lead a normal life. But with age, your bones may lose strength just like any other organ in your body. But what if your lifestyle weakens your bones much before you reach old age? Well, some bad habits gradually affect your bones.