ஏப்ரல் 1-ல் சொந்த நட்சத்திரம் செல்லும் சந்திரன்: இன்று இந்த 4 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கும்...

Moon Transit In Hasta Nakshatra On 01 April 2026: நவகிரகங்களில் மனதின் காரணியாக கருதப்படுபவர் சந்திரன். இந்த சந்திரன் கடக ராசியின் அதிபதி மற்றும் இவர் 2 1/2 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவதோடு, ஒவ்வொரு நாளும் நட்சத்திரத்தை மாற்றுவார். அப்படி சந்திரனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

அந்த வகையில் 2026 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் நுழைந்துள்ளோம். இம்மாதத்தின் முதல் நாளே மிகவும் சிறப்பு வாய்ந்தது எனலாம். ஏனெனில் முதல் நாளிலேயே பௌர்ணமி மற்றும் பங்குனி உத்திரம் வருகிறது. அத்துடன் இந்நாளில் சந்திரன் ஹஸ்தம் நட்சத்திரத்திற்குள் நுழைகிறார். இந்த ஹஸ்தம் நட்சத்திரத்தின் அதிபதி சந்திரன்.

Moon Transit In Hasta Nakshatra On 01 April 2026 List Of Lucky Zodiac Signs

சொந்த நட்சத்திரத்திற்கு சந்திரன் செல்வதால், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக, அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. அதுவும் சந்திரன் இந்த நட்சத்திரத்திற்கு ஏப்ரல் 01 மாலை வேளையில் நுழைந்து, ஏப்ரல் 02 ஆம் தேதி மாலை வரை இருப்பார். இப்போது சந்திரனின் இந்த நட்சத்திர பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு சந்திரனின் நட்சத்திர பெயர்ச்சியால் சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு நன்றாக இருக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். அலுவலகத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். சிலருக்கு புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். முதலீடுகளின் மூலம் நல்ல லாபத்தைப் பெற வாய்ப்புள்ளது. வாழ்வில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்படியான சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது நல்லது.

விருச்சிகம்

சந்திரனின் நட்சத்திர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். உங்களின் கடின உழைப்பு உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும். வருமானத்தில் திடீர் உயர்வைக் காணும் வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கலாம். முக்கியமாக உங்களின் ஒவ்வொரு திட்டங்களும் வெற்றிகரமாக நடக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் சந்திரனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீண்ட காலமாக தடைபட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இருப்பினும் செலவுகளை கட்டுக்குள் வைத்திருக்க முயற்சிக்க வேண்டும். மனநிலை சந்தோஷமாக இருக்கும். மனதில் உள்ள குழப்பம் நீங்கி, தெளிவு பிறக்கும்.

மீனம்

சந்திரனின் நட்சத்திர பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்கள் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைக் காண்பார்கள். தொழிலில் முன்னேற்றத்திற்கான பாதை திறக்கும். வேலை தேடுபவர்கள் நல்ல செய்தியை இக்காலத்தில் பெறலாம். நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். மன அழுத்தம் குறைந்து, மனதிற்கு அமைதி கிடைக்கும். வியாபாரிகளுக்கு சிறப்பாக இருக்கும். வணிகர்கள் லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெற வாய்ப்புள்ளது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Wednesday, April 1, 2026, 9:01 [IST]
Desktop Bottom Promotion