For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிப்பது எப்படி?

By Maha
|

உங்களின் இரத்தம் சிவப்பாக இருப்பதற்கு காரணம் என்னவென்று தெரியுமா? அதற்கு ஹீமோகுளோபின் என்னும் புரோட்டீன் தான் முக்கிய காரணம். உடலில் ஹீமோகுளோபின் அளவை பராமரிப்ப இரும்புச்சத்து தேவைப்படுகிறது. எலும்பு மஜ்ஜையில் இருந்து உற்பத்தியாகும் இரத்த செல்களானது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் இறந்துவிடும். எனவே உடலில் இரத்த செல்களை அதிகமாக உற்பத்தி செய்ய உதவும் உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம்.

இரத்தத்தில் உள்ள இரத்தத் தட்டுக்களின் அளவை அதிகரிக்கும் உணவுகள்!!!

உடலில் ஹீமோகுளோபின் குறைவாக இருந்தால், இரத்த சோகை ஏற்படும். எனவே ஹீமோகுளோபினை அதிகரிக்க அன்றாடம் 8-10 மிகி இரும்புச்சத்தைப் பெற வேண்டுமென்று உடல்நல நிபுணர்கள் கூறுகின்றனர். அதிலும் 13-45 வயதிற்குட்பட்ட பெண்கள் தினமும் 20 மிகி இரும்புச்சத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுவதற்கு வைட்டமின் சி நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் வழிகள்!!!

இங்கு உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிப்பது எப்படி என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றைப் பின்பற்றினால், இரத்தத்தின் அளவை அதிகரிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரும்புச்சத்துள்ள உணவுகள்

இரும்புச்சத்துள்ள உணவுகள்

ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச்சத்து இன்றியமையாது என்பதால், இரும்புச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளை அன்றாடம் எடுக்க வேண்டியது அவசியம். உதாரணமாக, பேரிச்சம் பழம், மாட்டிறைச்சி, கீரைகள், உலர் திராட்சை, முட்டையின் மஞ்சள் கரு போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.

ஃபோலிக் ஆசிட் உணவுகள்

ஃபோலிக் ஆசிட் உணவுகள்

வைட்டமின் பி9 அல்லது ஃபோலிக் ஆசிட்டுகளும் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு அவசியமானது. எனவே ஃபோலிக் ஆசிட் நிறைந்த உணவுகளையும் தினமும் உட்கொள்ள வேண்டும். இந்த ஃபோலிக் ஆசிட் பசலைக் கீரை, நட்ஸ், பச்சை பட்டாணி, கேல் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

வைட்டமின் பி12 உணவுகள்

வைட்டமின் பி12 உணவுகள்

உடலில் வைட்டமின் பி12 குறைவாக இருந்தாலும், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியில் இடையூறு ஏற்படும். எனவே மீன், முட்டை, ஆட்டு ஈரல் மற்றும் பால் பொருட்களை உட்கொண்டு வந்தால், இந்த குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

பச்சை இலைக் காய்கறிகள்

பச்சை இலைக் காய்கறிகள்

பச்சை இலைக் காய்கறிகளில் இரும்புச்சத்து, புரோட்டீன், வைட்டமின் பி மற்றும் சி ஏராளமாக நிறைந்துள்ளது. எனவே இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு, இரத்தத்தின் அளவும் அதிகரிக்கும்.

ஆரஞ்சு

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி வளமாக நிறைந்துள்ளது. இச்சத்து இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுவதற்கு உதவும். எனவே இதனை அடிக்கடி உட்கொண்டு வந்தால், உடலில் இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதை அதிகரிக்கலாம்.

பயறு வகைகள்

பயறு வகைகள்

பயறு வகைகளான தட்டைப்பயறு, பாசிப்பயறு போன்றவற்றிலும் இரும்புச்சத்து, புரோட்டீன், வைட்டமின் பி மற்றும் சி உள்ளதால், இவற்றை வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்தத்தின் அளவை சீராகப் பராமரிக்கலாம்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

என்ன தான் உணவுகளை உட்கொண்டாலும், உடலுழைப்பு இல்லாவிட்டால் அனைத்தும் வீண் தான். எனவே மேற்கூறிய உணவுப் பொருட்களுடன், தினமும் உடற்பயிற்சியை செய்து வந்தால், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரித்து, உடலில் ஆக்ஸிஜன் அளவும் அதிகரிக்கும்.

மதுவை நிறுத்தவும்

மதுவை நிறுத்தவும்

ஒருவரின் உடலில் இரத்தத்தின் அளவு குறைவதற்கு ஆல்கஹாலும் முக்கிய பங்கினை வகிக்கிறது. எனவே உடலில் இரத்தத்தின் அளவு சீராக இருப்பதற்கு முதலில் மது அருந்துவதை நிறுத்த வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Improve Your Blood

There are certain foods good for blood. When you consume them, your body uses it to produce hemoglobin. Red blood cells have an important role to play.
Desktop Bottom Promotion