கோழி முட்டையை விட காடை முட்டையில் தான் சத்து அதிகம் என்பது தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

காடை முட்டை சுவைத்திருக்கிறீர்களா என்று கேட்டாலே, பலருக்கும் முகம் பல கோணங்களில் செல்லும். காடை முட்டையெல்லாம் சாப்பிடுவார்கள் என்று பலரும் கேள்வி எழுப்புவார்கள். ஆனால் உண்மையில் காடை முட்டையில் கோழி முட்டை விட ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன.

காடை முட்டை மிகவும் சிறியதாக, மேலே சற்று கருமையான புள்ளிகளுடன் காணப்படும். கிராம பகுதிகளில் காடை முட்டையை பச்சையாக குடிப்பார்கள். காடை முட்டையை குழம்பு வைத்து சாப்பிட்டால் இன்னும் ருசியாக இருக்கும். மேலும் காடை முட்டை போன்றே அதன் இறைச்சியிலும் நிறைய சத்துக்கள் உள்ளது. சிக்கன், மட்டனுக்கு பின், பல பெரிய ஹோட்டல்களில் காடை இறைச்சி தான் அதிகம் விற்பனையாகிறது.

சரி, இப்போது காடை முட்டையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காடை முட்டை

காடை முட்டை

காடை முட்டையில் வைட்டமின்களும், இதர சத்துக்களும், கோழி முட்டையை விட அதிகம் உள்ளது. அதுவும் கோழி முட்டையில் 11% புரோட்டீன் என்றால் காடை முட்டையில் 13% புரோட்டீன்கள் உள்ளது. கோழி முட்டையில் 50% வைட்டமின் பி1 என்றால், காடையில் 140% உள்ளது என்றால் பாருங்கள்.

அலர்ஜியை எதிர்க்கும்

அலர்ஜியை எதிர்க்கும்

அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள் காடை முட்டையை உட்கொண்டு வந்தால், ஒவ்வாமை பிரச்சனை அல்லது அலர்ஜி தடுக்கப்படும். ஏனெனில் இதில் ஓவோமுகாய்டு புரோட்டீன் உள்ளது. இது அலர்ஜியை எதிர்த்துப் போராடும்.

ஞாபக சக்தி

ஞாபக சக்தி

காடை முட்டையை உட்கொண்டு வந்தால், அது மூளையின் செயல்பாட்டினை தூண்டி, ஞாபக சக்தியை அதிகரிக்கும். மேலும் இது நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டையும் சீராக வைத்துக் கொள்ளும்.

புற்றுநோய்

புற்றுநோய்

காடை முட்டையில் பல்வேறு புற்றுநோயின் வளர்ச்சிதைத் தடுக்கும் கார்சினோஜெனிக் பொருட்கள் அதிகம் உள்ளது. எனவே புற்றுநோய் உள்ளவர்கள் இதனை உட்கொண்டு வர, புற்றுநோயைத் தடுக்கலாம்.

வயிற்று அல்சர்

வயிற்று அல்சர்

அல்சர் உள்ளவர்கள், காடை முட்டையை உட்கொண்டு வந்தால், செரிமான பாதையில் உள்ள காயங்கள் மற்றும் புண்களை ஆற்றிவிடும்.

இரத்த சோகை

இரத்த சோகை

உங்கள் உடலில் இரத்தத்தில் அளவு குறைவாக இருப்பின், காடை முட்டை சாப்பிட்டு வாருங்கள். இதனால் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும். குறிப்பாக கர்ப்பிணிகள் இதை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்தத்தின் அளவை சீராக பராமரிக்கலாம்.

உடல் சுத்தமாகும்

உடல் சுத்தமாகும்

காடை முட்டை உடலில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் கனிமங்களை நீங்கிவிடும். குறிப்பாக பித்தக்கற்கள் மற்றும் சிறுநீரக கற்களை இதை கரைத்து வெளியேற்றிவிடும்.

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

தினமும் காடை முட்டையை உட்கொண்டு வந்தால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்.

இதர நோய்கள்

இதர நோய்கள்

காச நோய், மூச்சுக்குழாய் ஆஸ்துமா, நீரிழிவு போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள், அன்றாட உணவில் காடை முட்டையை சேர்த்து வருவது நல்லது.

குழந்தைகளுக்கு நல்லது

குழந்தைகளுக்கு நல்லது

வளரும் குழந்தைகளுக்கு தினமும் 2 காடை முட்டையைக் கொடுத்து வந்தால், அவர்களின் வளர்ச்சி சீராக இருப்பதோடு, அவர்களது உடல் வலிமையுடனும், நோய்கள் எளிதில் தாக்காமல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Hidden Health Benefits Of Quail Eggs

Here are some hidden health benefits of quail eggs or kaada mutta. Read on to know more.
Subscribe Newsletter