பிஸ்தா சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

பொதுவாக நட்ஸ்களில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன என்பது அனைவரும் அறிந்ததே. அதே சமயம் நட்ஸ்கள் மிகவும் விலை அதிகமானதும் கூட. அதனால் அவற்றை வாங்கி சாப்பிடுவது சற்று கடினம் தான். இருப்பினும் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், நட்ஸ்களை அடிக்கடி இல்லாவிட்டாலும், அவ்வப்போது வாங்கி சாப்பிட வேண்டியது அவசியம்.

பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் 15 நன்மைகள்!!!

அதிலும் பிஸ்தாவை வாங்கி சாப்பிடுவது என்பது மிகவும் நல்லது. தினமும் ஒரு கையளவு பிஸ்தா சாப்பிட்டு வந்தால், சில நாட்களில் உடல் ஆரோக்கியமாக இருப்பதை நீங்களே உணர்வீர்கள். மேலும் பிஸ்தாவில் கலோரிகள் குறைவு மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம். இதனால் இதயம் மற்றும் இரத்த நாளங்களில் பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படும்.

தினமும் சிறிது முந்திரி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

சரி, இப்போது பிஸ்தாவை சாப்பிடுவதன் மூலம் நாம் பெறும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கண்களுக்கு நல்லது

கண்களுக்கு நல்லது

பிஸ்தா சாப்பிடுவதன் மூலம், கண் பார்வை மேம்படுவதோடு, மாகுலர் திசு செயலிழப்பினால் கண் பார்வையை இழப்பதைத் தவிர்க்கலாம்.

ஆரோக்கியமான மூளை

ஆரோக்கியமான மூளை

பிஸ்தாவில் வைட்டமின் பி6 என்னும் மூளைக்கு வேண்டிய அத்தியாவசிய வைட்டமின் நிறைந்துள்ளது. எனவே பிஸ்தா சாப்பிட்டால், மூளையில் இரத்த ஓட்டம் அதிகரித்து மூளை பாதிக்கப்படுவது தடுக்கப்படும். அதுமட்டுமின்றி பிஸ்தா ஞாபக சக்தி மற்றும் கவனத்தை அதிகரிக்கும்.

கொலஸ்ட்ராலைக் குறைக்கும்

கொலஸ்ட்ராலைக் குறைக்கும்

பிஸ்தா இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும். இதன் மூலம் மாரடைப்பு மற்றும் பக்கவாமம் ஏற்படுவது தடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல், பிஸ்தா இரத்த நாளங்களில் கொழுப்புக்கள் தங்குவதைத் தடுத்து, உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதைக் குறைக்கும்.

இளமையை தக்க வைக்கும்

இளமையை தக்க வைக்கும்

பிஸ்தாவை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், இளமையைத் தக்க வைக்கலாம். இதற்கு அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தான் முக்கிய காரணம்.

ஆற்றலை வழங்கும்

ஆற்றலை வழங்கும்

பிஸ்தாவை ஸ்நாக்ஸ் நேரத்தில் எடுத்து வந்தால், உடலின் ஆற்றல் மேம்படும். மேலும் பிஸ்தா உடலளவில் மட்டுமின்றி, மனதளவிலும் சுறுசுறுப்புடன் செயல்பட உதவும். பிஸ்தாவில் நார்ச்சத்துக்கள் மற்றும் அத்தியாவசிய ஃபேட்டி ஆசிட்டுகள் அதிக அளவில் உள்ளன.

நீரிழிவைத் தடுக்கும்

நீரிழிவைத் தடுக்கும்

பிஸ்தாவில் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது. இவை புரோட்டீன்களை உடைத்து அமினோ ஆசிட்டுகளாக மாற்றும். இந்த அமினோ ஆசிட்டுகள் இன்சுலின் உற்பத்திக்கு உதவி, நீரிழிவு வருவதைத் தடுக்கும்.

இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்

இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்

பிஸ்தா சாப்பிடுவதன் மூலம், உடலில இரத்த ஓட்டம் சீராகி, உடலுறுப்புகள் எவ்வித இடையூறுமின்றி சீராக செயல்படும். முக்கியமாக பிஸ்தா சாப்பிடுவதன் மூலம் உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஆக்ஸிஜன் கிடைக்கும். மேலும் பிஸ்தா இரத்தத்தின் அளவையும் அதிகரிக்கும்.

புற்றுநோயை தடுக்கும்

புற்றுநோயை தடுக்கும்

பிஸ்தாவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான ஸீக்ஸாத்தைன் மற்றும் லுடீன் போன்றவை உள்ளதால், இவை உடலில உள்ள நச்சுமிக்க பொருட்களை உடலில் இருந்து வெளியேற்றி, புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைத் தடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health Benefits Of Pistachios

There are many health benefits of pistachios. It is low in calories and good for weight loss. Pistachios is useful for diabetics and promotes heart health.
Story first published: Monday, August 3, 2015, 10:32 [IST]
Subscribe Newsletter