பிறந்த மேனியில் யோகா செய்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!!

By: Babu
Subscribe to Boldsky

இந்தியாவில் தோன்றிய யோகாவின் மகிமை, தற்போது தான் மக்களிடையே பரவி வருகிறது. அதனைத் தொடர்ந்து சமீபத்தில் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, பள்ளிகளில் யோகா வகுப்பு கட்டாயமாக்கப்பட்டது மற்றும் மத்திய போலீஸ் படையினர் தினமும் யோகா செய்ய வேண்டுமென்றும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

விரைவில் தொப்பையைக் குறைக்க உதவும் யோக முத்ரா!

மேலும் இந்த யோகாவை ஒருசில ஹாலிவுட் பிரபலங்களான கிம் கர்தாஷியன், ஜெனீபர் ஆனிஸ்டன் போன்றோர் ஆடையின்றி பிறந்த மேனியில் செய்கின்றனர். இதற்கு காரணம் என்னவென்று கேட்டால், பிறந்த மேனியில் யோகா செய்வதால் தன்னம்பிக்கை அதிகரிப்பதோடு, மன அமைதியும் கிடைக்கிறதாம்.

10 அடிப்படை யோக முத்திரைகளும்... அவைகளின் உடல் நல பயன்களும்...

அதிலும் பிறந்த மேனியில் துணையுடன் யோகா செய்யும் போது, எவ்வித தடையுமின்றி பூமியின் சக்தியை நேடியாக பெறலாமாம். சரி, இப்போது பிறந்த மேனியில் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மனதை அமைதியாக்கும்

மனதை அமைதியாக்கும்

யோகா மனதை அமையாக்கும். தினமும் யோகா செய்வது என்பது மூளைக்கான சிறந்த உடற்பயிற்சியாகும். அதிலும் பிறந்த மேனியில் உடற்பயிற்சி செய்வதால், இன்னும் மனம் ரிலாக்ஸ் ஆகுமாம். மேலும் இந்த நிலையில் செய்வதால், மனதை ஒருமுகப்படுத்த மேலும் உதவியாக இருக்குமாம்.

சுயமதிப்பை அதிகரிக்கும்

சுயமதிப்பை அதிகரிக்கும்

பிறந்த மேனியில் யோகா செய்வதன் மூலம் ஒருவரின் சுயமதிப்பை அதிகரிக்க முடியுமாம்.

பதற்றத்தைக் குறைக்கும்

பதற்றத்தைக் குறைக்கும்

பிறந்த மேனியில் யோகா செய்வதன் மூலம் கிடைக்கும் நன்மைகளில் ஒன்று, அடிக்கடி பதற்றம் அடைவதைக் குறைக்கலாம். மேலும் இந்த வகையான உடற்பயிற்சி புலன்கனை அமைதிப்படுத்த பெரிதும் உதவியாக இருக்கும்.

மனநிலையை மேம்படுத்தும்

மனநிலையை மேம்படுத்தும்

பொதுவாக யோகா செய்தால் மனநிலை மேம்படும். அதிலும் பிறந்த மேனியில் செய்தால், தலை முதல் கால் வரை அனைத்தும் ஆரோக்கியமாக இருப்பதோடு, மனநிலையை மேம்படுத்தும். குறிப்பாக துணையுடன் இம்மாதிரியான பயிற்சியில் ஈடுபட்டால், உறவுகள் சுடர் விட்டு எரியும்.

மன அழுத்தத்தைக் குறைக்கும்

மன அழுத்தத்தைக் குறைக்கும்

மன அழுத்தம் ஒருவரை அமைதியாக கொல்லும் மிகவும் ஆபத்தான ஒன்று. எனவே அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்ததும், சிறிது நேரம் பிறந்த மேனியில் யோகா செய்து பாருங்கள், நிச்சயம் உங்கள் மன அழுத்தம் குறைந்து, மனம் ரிலாக்ஸாக இருப்பதை உணர்வீர்கள்.

எதிர்மறை எண்ணங்கள்

எதிர்மறை எண்ணங்கள்

பொதுவாக ஒருவரை எளிதில் மனம் தளரச் செய்வது அவர்களின் எதிர்மறை எண்ணங்கள் தான். இத்தகைய எதிர்மறை எண்ணங்களை வெற்றிக் கொள்ள, பிறந்த மேனியில் யோகா செய்து வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health Benefits Of Nude Yoga

Nude yoga has a lot of health benefits. It is a good form of exercise for the mind, body and your for your relationship too. Take a look at its benefits.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter