நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

விலைக் குறைவில் அனைவரும் வாங்கி சாப்பிடும் வகையில் கிடைக்கும் ஒன்று தான் நெல்லிக்காய். இந்த நெல்லிக்காயில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. பலரும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும், தேன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் பல இடங்களில் படித்திருப்பீர்கள். ஆனால் அந்த நெல்லிக்காயை தேனுடன் சேர்த்து ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?

பாலில் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

மூலிகைகளிலேயே அன்றாடம் சாப்பிட்டாலும், எவ்வித பக்க விளைவையும் ஏற்படுத்தாத ஒன்று தான் நெல்லிக்காய். அதிலும் தேனுடன் சேர்த்து தினமும் ஒன்று சாப்பிட்டால், அதனால் கிடைக்கும் நன்மைகளோ அலாதி. சரி, இப்போது நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போமா!!!

பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரத்த சோகை

இரத்த சோகை

தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் ஒன்று என சாப்பிட்டு வந்தால், இரத்தம் சுத்தமாவதோடு, இரத்தணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.

இதயம் வலிமையடையும்

இதயம் வலிமையடையும்

தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வருவதன் மூலம், இதய தசைகள் வலிமையடைந்து, இதய நோய்கள் வருவது தடுக்கப்படும்.

கண் பார்வை மேம்படும்

கண் பார்வை மேம்படும்

கண் பிரச்சனை உள்ளவர்கள், தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால், கண்களில் ஏற்படும் எரிச்சல், கண்களில் இருந்து நீர் வடிதல், கண்கள் சிவப்பாதல் போன்றவை குணமாகும்.

பசி தூண்டப்படும்

பசி தூண்டப்படும்

பசியின்மையால் அவஸ்தைப்படுபவர்கள், தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் உட்கொண்டு வருவதன் மூலம் சரிசெய்யலாம்.

சளி மற்றும் தொண்டைப்புண்

சளி மற்றும் தொண்டைப்புண்

சிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும். அதுமட்டுமின்றி தொண்டையில் புண்ணும் வரும். அத்தகையவர்கள் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால், உடலில் தேங்கிய சளி அனைத்தும் வெளியேறிவிடுவதோடு, தொண்டைப்புண்ணும் குணமாகும்.

வெள்ளைப்படுதல்

வெள்ளைப்படுதல்

சில பெண்களுக்கு வெள்ளைப்படுதல் அதிகம் இருக்கும். அத்தகைய பெண்கள், தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம், வெள்ளைப்படுதலைத் தடுக்கலாம்.

சிறுநீரக பிரச்சனைகள்

சிறுநீரக பிரச்சனைகள்

முக்கியமாக தேனில் நெல்லிக்காயை ஊற வைத்து சாப்பிட்டால், சிறுநீர் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் வருவது தடுக்கப்படுவதோடு, அப்பிரச்சனைகள் இருந்தாலும் குணமாகிவிடும்.

அசிடிட்டி

அசிடிட்டி

அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள், தேனில் ஊறிய நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

பொலிவான சருமம்

பொலிவான சருமம்

தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் காலையில் சாப்பிட்டால், முகத்தின் பொலிவு அதிகரித்து, சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் காணப்படும்.

முடி வளரும்

முடி வளரும்

நெல்லிக்காய் மற்றும் தேனில் நிறைந்துள்ள மருத்துவ குணங்களால், இதுவரை அதிகமாக இருந்த முடி கொட்டும் பிரச்சனை தடுக்கப்பட்டு, மயிர்கால்கள் வலிமையடைந்து, முடியின் வளர்ச்சி அதிகமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health Benefits Of Amla Soaked In Honey

Here are some of the health benefits of amla soaked in honey. Want to know more amla dipped in honey benefits? Take a look...
Story first published: Wednesday, June 24, 2015, 16:51 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter