Just In
- 38 min ago
கண்ணாடி அணிபவா்களுக்கு கொரோனா தாக்கம் 3 மடங்கு குறைவாம் - ஆய்வில் தகவல்
- 58 min ago
பெண்களின் கருவுறுதல் திறனை அதிகரிக்க எடுத்துக்கொள்ள வேண்டிய அத்தியாவசிய உணவுகள் என்ன தெரியுமா?
- 7 hrs ago
இன்றைய ராசிப்பலன் (26.02.2021): இன்று இந்த ராசிக்காரங்க ஆரோக்கியத்துல ரொம்ப கவனமா இருக்கணும்...
- 17 hrs ago
இந்த அறிகுறிகள் உங்க கணவன் அல்லது காதலனிடம் இருந்தால் அவர் உங்களுடன் வாழும் ஆர்வத்தை இழந்துட்டாராம்!
Don't Miss
- News
அதிமுக எம்எல்ஏ இன்பதுரை மீது பகீர் புகார்.. டிஐஜி வரை சென்ற மோசடி புகார்.. நெல்லையில் பரபரப்பு..!
- Automobiles
தீப்பிடிக்கும் அபாயம்... கோனா எலெக்ட்ரிக் கார்களில் பேட்டரியை மாற்றுவதற்கு ஹூண்டாய் முடிவு!
- Sports
இதுதான் காரணம்.. புலம்பும் இங்கிலாந்து.. அணிக்குள்ளேயே ஏற்பட்ட குழப்பம்.. பின்னணியில் சிஎஸ்கே!
- Movies
அன்பு ஒன்றுதான் அனாதை.. முகென் டயலாக்கை வாங்கியடித்த அனிதா.. பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்!
- Finance
1,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ்.. நிஃப்டியும் பலத்த சரிவு.. என்ன காரணம்?
- Education
ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தேன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
மலர்களின் மகரந்தங்களை கொண்டு தேனீக்களால் சேகரிக்கப்பட்டு, மனிதர்களால் தேனீக்களிடம் இருந்து பறிக்கப்படும் அருமருந்தே தேன். அதனை அருமருந்து என்று சொல்வதற்கு காரணம் இல்லாமல் இல்லை. நிறைய மருத்துவ குணங்களை உள்ளடக்கிய பழுப்பு நிற திரவமே தேன் ஆகும். தேனை பரவலாக வயிற்றின் நண்பன் என்று கூட சொல்வார்கள். இதற்கு காரணம் வயிறு, பித்தப்பை சம்மந்தமான நோய்களுக்கெல்லாம் மருந்தாக விளங்குவதே ஆகும்.
தேனில் நோய் தீர்க்கும் பண்புகள் மற்றும் இயற்கை வளங்கள் நிறைந்து உள்ளதால், தேன் சரும பாதுகாப்பு மற்றும் பல மருத்துவ பயன்பாடுகளுக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. கீழே தேனின் பல்வேறு நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் தேனை அதிகம் பயன்படுத்துங்கள்.

மாய்ஸ்சுரைசர்
தேன் ஒரு நல்ல மாய்ஸ்சுரைசர். ஏனெனில் இதனை சருமத்திற்கு பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள ஈரப்பதமானது தக்க வைக்கப்படுவதோடு, சருமத்தை மிருதுவாக்கி அதன் நெகிழ்வு தன்மையை தக்க வைக்கிறது.

சரும சுருக்கம்
தேனை சருமத்திற்கு உபயோகித்தால், அது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, சரும சுருக்கம் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

ஆன்டி-பாக்டீரியல் பண்புகள்
தேனில் பாக்டீரியாவிற்கு எதிரான பண்புகள் மற்றும் நுண்ணுயிர்களுக்கு எதிரான பண்புகள் இருப்பதால், பாக்டீரியா வளர்ச்சியை தடுக்கும். அதனால் இது வெட்டு காயங்கள், சிராய்ப்புகள், தீக்காயங்கள் ஆகியவற்றை குணப்படுத்த உதவுகின்றது.

காயங்களை குணமாக்கும்
தேன் காயங்களை சுத்தப்படுத்தி, நாற்றம் மற்றும் சீழ் உண்டாவதை தடுத்து, வலியை குறைத்து காயம் விரைவாக குணமடையவதற்கு உதவுகிறது.

சரும பிரச்சனைகள்
தேனானது சேதமடைந்த சருமத்தை சீர்படுத்தி புதிய செல்கள் உருவாவதற்கு உதவுகிறது. அதிலும் சரும அழற்சி, சரும பிரச்சனைகள் ஆகியவற்றை சரிப்படுத்தும்.

சொறி, சிரங்கு, படை
தேனில் உள்ள பூஞ்சை எதிர்க்கும் பண்புகள் படை, சிரங்கு போன்ற சரும நோய்களைக் குணப்படுத்தும்.

சூரியனிடமிருந்து சருமத்தை பாதுகாக்கும்
தேனில் இயற்கையாகவே ஆக்ஸிஜனேற்றான்கள் (Oxidants) நிறைந்துள்ளது. இவை சருமத்தை புற ஊதா கதிர்களில் இருந்து காக்கிறது.

முதுமை தோற்றத்தை தடுக்கும்
சூரியக்கதிர்கள் சருமத்தில் அதிக நேரம் பட்டால், அது சருமத்தை சேதப்படுத்தி முதுமை தோற்றத்தை ஏற்படச் செய்யும். ஆகவே தேனை சரும பராமரிப்பிற்கு பயன்படுத்தினால், அது சூரிய ஒளியால் ஏற்படும் சரும பாதிப்புகளை தடுக்கும்.

முகப்பரு
தேன் சருமத்தின் மேல் அடுக்கில் நுழைந்து, துகள்களில் ஊடுருவி அசுத்தங்களை நீக்கி சருமத்தை சுத்தப்படுத்துகிறது. இதனால் நோய்த்தொற்று மற்றும் முகப்பரு பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

அழகான உதடுகள்
சுருக்கம் மற்றும் வெடிப்புகள் நிறைந்த உதடுகளில் தேனை தொடர்ந்து தடவி வந்தால், உதடுகள் பட்டு போல மிருதுவாகும்.

ஊட்டச்சத்துக்கள்
தேனில் குளுக்கோஸ் மற்றும் ஃபுருக்டோஸ் நிறைந்துள்ளன மற்றும் தாதுக்களான மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், சோடியம் குளோரின், சல்பர், இரும்பு மற்றும் பாஸ்பேட் போன்றவைகளும் நிறைந்துள்ளன.

வைட்டமின்கள்
மேலும் அதில் மகரந்த தன்மைக்கு ஏற்ப வைட்டமின்களான பி1, பி2, சி, பி6, பி5 மற்றும் பி3 ஆகிவை அடங்கியுள்ளன. அவை மட்டுமின்றி தாமிரம், அயோடின், மற்றும் துத்தநாகம் ஆகியவையும் சிறிய அளவில் உள்ளன.

தசைப் பிடிப்பு
குளுக்கோஸ் மற்றும் ஃபுருக்டோஸ் வடிவில் உள்ள கார்போஹைட்ரேட் உடலுக்கு ஆற்றல் அளித்து தசைகள் சோர்வடைவதைக் குறைக்கும்.

இரத்தசோகை
தேன் அருந்துவதை வழக்கமாக கொண்டால், கால்சியம் உறிஞ்சுதல் மற்றும் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, இரத்தசோகை நோய்க்கு எதிராக போராட உதவும்.

கொலஸ்ட்ரால்
தேன் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து, உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பை அதிகப்படுத்தும்.

சுவாசப் பிரச்சனைகள்
தேனில் சளி நீக்கும் பண்பு மற்றும் ஆறுதல் அளிக்கும் தன்மை இருப்பதால், சுவாசக் குழாயில் இருக்கும் நோய்த்தொற்றுகளை சரிசெய்யும்.

நோயெதிர்ப்பு சக்தி
தேன் சாப்பிட்டு வந்தால், அது நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தி, நோய்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கிறது.

எடை குறைவு
உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும் பண்பு தேனுக்கு உள்ளது. மேலும் ஜீவத்துவ பரிணாமத்தை மேம்படுத்தி, தேவையற்ற கொழுப்புகளை எரிக்க உதவுகிறது.

உடல் சோர்வு
தினமும் தேன் சாப்பிட்டு வந்தால், காலை எழுந்தவுடன் ஏற்படும் சோர்வை போக்கலாம்.