For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொன்னாங்கண்ணி கீரையின் பொன்னான ஆரோக்கிய நன்மைகள்!

By Viswa
|

பொதுவாகவே கீரைகளில் பல ஆரோக்கிய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. அதனால் தான் நமது மூதாதையர்கள் அவர்களது அன்றாட உணவுப் பழக்கத்தில் தினசரி கீரைகளை சேர்த்து வந்தனர். கீரைகளில் பல வகைகள் உண்டு. அதில் பொன்னாங்கண்ணியை கீரைகளின் அரசன் என்றே அழைக்கலாம். ஏனெனில், இதில் உள்ள எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நமது உடல் சார்ந்த பல குறைப்பாடுகளுக்கு நல்ல பயன் தருகிறது.

பொன்னாங்கண்ணி கீரையில் ஊட்டச்சத்து, நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, கனிமச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம் போன்ற சத்துகள் அடங்கியுள்ளது. இ‌ந்த‌க் கீரையை தொடர்ந்து 27 நாட்களுக்கு சாப்பிட்டால், பகலிலும் நிலவைப் பார்க்கலாம் என்று ஒரு பழமொழி உண்டு. அந்த அளவிற்கு பொன்னாங்கண்ணியில் கண்பார்வைக்கு தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. பொன்னாங்கண்ணியின் ஆரோக்கிய நலன்களைப் பற்றி மேலும் நிறைய அறிந்து கொள்ள வேண்டுமா தொடர்ந்து படியுங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடல் எடை

உடல் எடை

பொ‌ன்னா‌ங்க‌ண்‌ணி கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். துவரம் பருப்பு, நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை கூடும்.

 சருமம் பொலிவடைய

சருமம் பொலிவடைய

பொன்னாங்கண்ணியில் உள்ள ஊட்டச்சத்துகள் உடல்நலம் வலுவடையவும், சருமம் பொலிவடையவும் பெருமளவில் பயனளிக்கிறது.

நோய் நிவாரணி

நோய் நிவாரணி

மூல நோய், மண்ணீரல் போன்ற நோய்களால் அவதிப் படுபவர்கள் பொன்னாங்கண்ணியை தினசரி உட்கொண்டு வந்தால் விரைவில் நோய் குணமாகும்.

இரத்த சுத்திகரிப்பு

இரத்த சுத்திகரிப்பு

இன்று நாம் உண்ணும் உணவில் இருந்து சுவாசிக்கும் காற்று வரை அனைத்திலும் இரசாயனம் கலந்திருப்பதால். அவை நேரடியாக இரத்தத்தில் கலந்து விடுகின்றன. இதனால் இரத்தம் அசுத்தமடைகின்றது. பொன்னாங்கண்ணிக் கீரையை நன்றாக கழுவி சிறிதாக நறுக்கி, அதனுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு, மிளகுத்தூள் சேர்த்து வேக வைத்து சாப்பிட்டு வந்தால் அசுத்த இரத்தம் சுத்தமாகும்.

கண் எரிச்சல்

கண் எரிச்சல்

அதிக வெயிலில் அலைந்து வேலை செய்பவர்களுக்கும், கணினி முன் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும், சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கும் கண்கள் சிவந்து காணப்படும், கண்களில் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். இவர்கள் பொன்னாங்கண்ணி கீரையை சாப்பிட்டு வந்தால் இப்பிரச்சனைக்கு நல்ல பலனளிக்கும்.

துர்நாற்றம்

துர்நாற்றம்

வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் காலை வேளையில் பொன்னாங்கண்ணியை சாப்பிட்டு வந்தால் விரைவில் வாய் துர்நாற்றப் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

இதயம்

இதயம்

பொன்னாங்கண்ணியில், இதயத்திற்கும் மூளைக்கும் புத்துணர்வு கொடு‌க்கு‌ம் ஆரோக்கிய பயன்கள் உண்டு. அதனால் முடிந்த வரை வாரம் இரண்டு அல்லது மூன்று முறையாவது உங்களது உணவுப் பழக்கத்தில் பொன்னாங்கண்ணியை சேர்த்துக் கொள்வது நல்ல ஆரோக்கியம் தரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Golden Health Benefits Of Ponnanganni Keerai

To know about the golden benefits of ponnanganni keerai. you should really read this article.
Desktop Bottom Promotion