For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அன்றாட சமையலில் ஆலிவ் எண்ணெய் சேர்ப்பதன் மூலம் பெறும் நன்மைகள்!!!

By Maha
|

எந்த ஒரு பிரச்சனையை எடுத்தாலும், அதற்கு தீர்வளிக்க உதவும் உணவுப் பொருட்களில் ஒன்றாக ஆலிவ் ஆயில் கட்டாயம் இருக்கும். அந்த அளவில் ஆலிவ் ஆயில் மிகவும் நல்லது. மற்ற எண்ணெய்களை விட கொழுப்புக்களைக் குறைவாகக் கொண்டது. மேலும் இந்த எண்ணெயில் சத்துக்களும் வளமாக நிறைந்துள்ளது.

எடையைக் குறைக்க முயற்சி செய்கிறீர்களா? அப்ப சமையலுக்கு இந்த எண்ணெய்களை யூஸ் பண்ணுங்க...

ஆய்வுகளும் ஆலிவ் எண்ணெயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஃபேட்டி ஆசிட்டுகள் வளமாக இருப்பதால், இது உடலில் பல அற்புதங்களை ஏற்படுத்துகிறது என்று சொல்கிறது. சரி, இப்போது அத்தகைய ஆலிவ் எண்ணெயை சமையலில் பயன்படுத்துவதால் பெறும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எடையை சீராக பராமரிக்கலாம்

எடையை சீராக பராமரிக்கலாம்

ஆலிவ் எண்ணெயில் கொழுப்புக்கள் குறைவாக இருப்பதால், இதனை எடையைக் குறைக்க நினைப்போர் உணவில் சேர்த்து வந்தால், எடையைக் குறைப்பதோடு, கட்டுப்பாட்டுடனும் வைத்துக் கொள்ளலாம். மேலும் நிபுணர்களும், ஆலிவ் ஆயிலை உணவில் சேர்த்தால் எடையைக் குறைக்கலாம் என்கின்றனர்.

நீரிழிவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்

நீரிழிவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்

ஆலிவ் ஆயில் உடலில் இன்சுலின் அளவை சீராகப் பராமரிக்க உதவி, நீரிழிவில் இருந்து பாதுகாப்புத் தரும். மேலும் ஆலிவ் ஆயிலை உணவில் சேர்த்து வந்தால், நீரிழிவு வருவதையும் தடுக்கலாம். எனவே உணவில் ஆலிவ் எண்ணெயை சேர்த்து சர்க்கரை நோயில் இருந்து விடுபடுங்கள்.

பொலிவான மற்றும் ஆரோக்கியமான சருமம்

பொலிவான மற்றும் ஆரோக்கியமான சருமம்

ஆலிவ் ஆயிலை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், சரும செல்களின் ஆரோக்கியம் மேம்பட்டு, முதுமை தள்ளிப் போடப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதுமட்டுமல்லாமல் ஆலிவ் ஆயில் சருமத்தின் பொலிவையும் அதிகரிக்கும்.

மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

ஆலிவ் எண்ணெயில் நல்ல கொழுப்புக்கள் அதாவது மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளது. இது அல்சைமர் போன்ற ஞாபக மறதி மற்றும் பர்கின்சன் போன்ற நோய்கள் தாக்காமல் தடுக்கும். மேலும் ஆய்வுகளில் ஆலிவ் எண்ணெயை உணவில் சேர்த்து வந்தால், மன இறுக்கம், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் தடுக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.

பல்வேறு புற்றுநோய்களைத் தடுக்கும்

பல்வேறு புற்றுநோய்களைத் தடுக்கும்

ஆலிவ் ஆயில் குடல், மார்பகம் மற்றும் சரும புற்றுநோய்களில் இருந்து பாதுகாப்புத் தரும். இதற்கு ஆலிவ் ஆயிலில் ஃபீனோலிக் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஆன்டி-கேன்சர் சேர்மங்கள் தான் முக்கிய காரணம். மேலும் இதில் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளதால், இது புற்றுநோயினால் ஏற்பட்ட உட்காயங்களை எதிர்த்துப் போராடும்.

இதயத்திற்கு நல்லது

இதயத்திற்கு நல்லது

ஆலிவ் எண்ணெயில் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து, இதய நோய்கள் வராமல் தடுக்கும் பயோஃபீனால்கள் அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி இந்த பயோஃபீனால்கள் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, தமனிகளில் கொழுப்புக்கள் படிவதையும் தடுத்து, இரத்த ஓட்டத்தை சீராக்கும்.

வயிற்று அல்சர்

வயிற்று அல்சர்

ஆலிவ் ஆயிலில் ஆன்டி-மைக்ரோபியல் பொருள், வயிற்றில் அல்சரை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும். ஆலிவ் எண்ணெயில் பாலிஃபீனால்கள் அதிகம் உள்ளதால், அல்சரை உண்டாக்கும் பாக்டீரியாவில் இருந்து பாதுகாப்பு தரும்.

இரும்புச்சத்தை அதிகரிக்கும்

இரும்புச்சத்தை அதிகரிக்கும்

ஆலிவ் எண்ணெயில் குறிப்பிட்ட அளவில் இரும்புச்சத்து உள்ளதால், அது ஹீமோகுளோபின் உருவாக்கத்தை அதிகரிக்கும். மேலும் இரும்புச்சத்து உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரித்து, நோய்களின் தாக்கத்தைக் குறைக்கும்.

 குறிப்பு

குறிப்பு

தற்போது மார்கெட்டில் ஆலிவ் எண்ணெயில் மற்ற எண்ணெய்கள் கலக்கப்படுவதால், கவனமாக இருங்கள். நல்ல சுத்தமான ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தினால் மட்டுமே மேற்கூறிய பலன்களைப் பெற முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Benefits Of Including Olive Oil In Our Food

There are several benefits of including oilve oil in your diet. Read to know what are the benefits of eating olive oil everyday and including it in food.
Desktop Bottom Promotion