ஒமேகா-3 கொழுப்பு அமிலத்தின் வியக்கத்தகு ஆரோக்கிய நன்மைகள்!

By: Viswa
Subscribe to Boldsky

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இயல்பான வளர்ச்சிக்கும், உடல்நலத்திற்கும் மிகவும் இன்றியமையாதது என 1930-களிலிருந்தே கருதப்பட்டு வந்தாலும், கடந்த சில ஆண்டுகளிலேயே அவற்றின் உடல்நல நன்மைகள் பற்றிய விழிப்புணர்வு குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. ஒமேகா-3 கொழுப்பு அமிலத்தில் நிறைய சுவாரசியமான மற்றும் முக்கியமான உடல்நல பயன்கள் உள்ளன. ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நமது உடலுக்கு மிகவும் தேவையான ஒன்று. ஆனால் இது இயல்பாக நமது உடலில் சுரப்பது கிடையாது. எனவே நாம் உட்கொள்ளும் சரியான ஊட்டச்சத்துகளின் வழியாக மட்டுமே நாம் ஒமேகா-3 கொழுப்பு அமிலத்தின் பயனை பெற இயலும்.

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நமது மூளைக்கும், இதயத்திற்கும் மிகவும் அவசியமான ஒன்றாகும். இது பிரசவக்காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது மற்றும் மாரடைப்பு, ஒற்றை தலைவலி, மன இறுக்கம் போன்றவற்றில் இருந்தும் நம்மை காத்திட உதவிகிறது. மேலும் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் பற்றி அறிந்திட தொடர்ந்து படியுங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிரசவக்காலப் பிரச்சனைகளை குறைக்கிறது

பிரசவக்காலப் பிரச்சனைகளை குறைக்கிறது

ஒமேகா-3 கொழுப்பு அமிலத்தின் மிக முக்கியமான பயன்களில் ஒன்று, இது பெண்களுக்கு ஏற்படும் பிரசவக்கால பிரச்சனைகளை வெகுவாக குறைக்கிறது. குறைமாத பிரசவம் போன்ற காலங்களில் பெண்களுக்கு முக்கியமான தேவைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலமும் கூட ஒன்றாகும். எடை குறைந்து பிறக்கும் குழந்தைகளுக்கும் இது நல்ல பயனளிக்கிறது. கரு மற்றும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் கூட ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நல்ல ஆரோக்கியம் அளிக்கிறது.

அறிவாற்றல் மற்றும் ஞாபகசக்தி

அறிவாற்றல் மற்றும் ஞாபகசக்தி

ஒமேகா-3 கொழுப்பு அமிலத்தின் மூலம் நமது அறிவாற்றலும், நினைவாற்றலும் மேன்மையடைகிறது. ஓர் ஆராய்ச்சியில் அறிஞர்கள் கண்டறிந்துள்ளது என்னவெனில் அறிவாற்றல் குறைபாடு உள்ளவர்கள் ஒமேகா-3 கொழுப்பு அமிலத்தை உட்கொண்டு வந்தால் அறிவாற்றல் மேம்படும் என்பதாகும்.

மனநிலை மேம்படும்

மனநிலை மேம்படும்

ஒமேகா-3 கொழுப்பு அமிலத்தின் முக்கிய பயன்களில் ஒன்றாக கருதப்படுவது, இது மனநிலையை மேம்படுத்த உதவுகிறது. ஒமேகா-3 கொழுப்பு அமிலத்தின் குறைப்பாடு வரும் போது மூளை கோளாறுகள் ஏற்படுகின்றன என ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. ஒமேகா-3 கொழுப்பு அமிலத்தின் கூடுதல் துணையால் நரம்பியல் அம்ற்றும் மனநிலை கோளாறுகளில் இருந்து மீண்டு வர இயலும்.

மூளையைப் பாதுகாக்கிறது

மூளையைப் பாதுகாக்கிறது

ஜங்க் ஃபுட் மூலம் மூளையில் ஏற்படும் தொய்வுகளை ஒமேகா-3 கொழுப்பு அமிலம் சரி செய்கிறது. இது மட்டுமின்றி தீய கொழுப்பு நிறைந்த உணவுகள் மூலம் வரும் பாதிப்புகளை தவிர்க்கவும் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் உதவுகிறது.

இரத்த நாள நோய் மற்றும் மூட்டு சிகிச்சை

இரத்த நாள நோய் மற்றும் மூட்டு சிகிச்சை

ஒமேகா-3 அமிலத்தின் மூலம் நாம் அடையும் ஒரு சிறந்த பயன் என்னவெனில் இரத்த நாள நோய்களில் இருந்தும் மற்றும் மூட்டு வீக்கம் போன்ற பிரச்சனைகளில் இருந்தும் சீக்கிரம் குணமடைய உதவுகிறது. நோய் காரணமாகவோ அல்லது நாம் இயற்கையாக கீழே விழுந்து அடிப்பட்ட காயங்களினலோ ஏற்படும் வீக்கங்களை சாதாரணமாக விட்டுவிட இயலாது. சில நேரங்களில் அது பெரிய பின் விளைவுகளை தரக் கூடியவையாக மாறலாம். அதனை கட்டுப்படுத்த ஒமேகா-3 கொழுப்பு அமிலம் உதவுகிறது.

கவனக்குறைவு மற்றும் ஹைப்பர் ஆக்டிவ் (அதிக இயக்கம்)

கவனக்குறைவு மற்றும் ஹைப்பர் ஆக்டிவ் (அதிக இயக்கம்)

ADHD (Attention Deficit Hyperactivity Disorder) எனப்படும் கவனக்குறைவு மற்றும் அதியியக்க கோளாறு குழந்தைகளுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனை ஆகும். அதாவது சில நேரங்களில் அவர்கள் ஒருசில வேலைகளை மிகுதியாகவோ அல்ல கவனம் சிதறியோ செய்துக் கொண்டு இருப்பார்கள். இத்தகைய குறைப்பாட்டினை சரி செய்திட ஒமேகா-3 கொழுப்பு அமிலம் வெகுவாக உதவுகிறது.

குழந்தைகளின் நடத்தை மேம்பட

குழந்தைகளின் நடத்தை மேம்பட

ஓர் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ள செய்தி என்னவெனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலமானது குழந்தைகளின் நினைவாற்றலையும், கற்கும் திறனையும் அதிகரிக்க பயனளிக்கிறது மற்றும் அவர்களது நடத்தையை மேம்படுத்தவும் உதவுகிறது.

தனிமை மற்றும் மன சோர்வு

தனிமை மற்றும் மன சோர்வு

ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நமது தனிமை உணர்வுகளை போக்கவும், மன சோர்வு மற்றும் அழுத்தத்தில் இருந்து விடுபடவும் உதவுகிறது.

ஒற்றை தலைவலி

ஒற்றை தலைவலி

அன்றாட வாழ்க்கையில் ஒற்றை தலைவலி என்பது நம்மோடு சேர்ந்து தினமும் பயணிக்கிறது. ஒமேகா-3 கொழுப்பு அமிலத்தின் ஓர் சிறந்த பயன் என்னவெனில் இது ஒற்றை தலைவலியை குறைக்க உதவுகிறது.

மாரடைப்பில் இருந்து காக்கிறது

மாரடைப்பில் இருந்து காக்கிறது

ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நம் உடலில் இருக்கும் தீய கொழுப்பு சக்திகளை குறைக்க உதவுகிறது. இதனால் நம்மை இதயம் சார்ந்த நோய்களிடம் இருந்து தள்ளி இருக்க ஒமேகா-3 கொழுப்பு அமிலம் பெரும் அளவில் உதவி செய்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Amazing Health Benefits Of Omega 3 Fatty Acids

Most of us really don't know about the amazing health benefits of omega 3 fatty acids and here its for you to know much more about omega 3 fatty acids.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter