மருத்துவ குணம் நிறைந்த கிராம்பு மூலம் கிடைக்கும் நன்மைகள்!!

Posted By:
Subscribe to Boldsky

சமையலில் நறுமணப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வரும் கிராம்பு, எண்ணற்ற மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டது. இது மிகவும் காரமாக இருப்பதாலும், கடித்த பின் உண்ணும் உணவின் சுவையையே மாற்றிவிடுவதால், பலரும் இதனை வெறுப்பார்கள். அதுமட்டுமின்றி, சிலர் இதனை உணவில் சேர்க்கவே தவிர்ப்பார்கள்.

ஆனால் இதனை சமையலில் சேர்க்காவிட்டால், முக்கியமாக பிரியாணி, கிரேவி போன்றவை சமைக்கும் போது கிராம்பை சேர்க்காவிட்டால், உணவில் இருந்து நறுமணமே வீசாது. மேலும் கிராம்பு சிகரெட்டில் ஃப்ளேவரை சேர்க்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் அக்காலத்தில் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சரிசெய்யவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இத்தகைய மருத்துவ குணங்களைக் கொண்ட கிராம்பில் நிறைந்துள்ள நன்மைகள் என்னவென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பல் வலி

பல் வலி

பல் வலி இருந்தால், ஒரு கிராம்பை எடுத்து வாயில் போட்டு மென்றால், உடனடி நிவாரணம் கிடைக்கும். மேலும் பெரும்பாலான டூத் பேஸ்ட்களை கவனித்தால், அதில் கிராம்பு முக்கிய பொருளாக சேர்க்கப்பட்டிருக்கும்.

குமட்டல் மற்றும் வாந்தி

குமட்டல் மற்றும் வாந்தி

பயணம் மேற்கொள்ளும் போது குமட்டல் அல்லது வாந்தி வருவது போன்று இருந்தால், ஒரு கிராம்பை எடுத்து வாயில் போட்டுக் கொள்ளுங்கள். இதனால் குமட்டல் மற்றும் வாந்தி வருவதைத் தடுக்கலாம்.

இருமல் மற்றும் துர்நாற்றம்

இருமல் மற்றும் துர்நாற்றம்

இருமல், துர்நாற்றம் போன்றவற்றை கிராம்பு கொண்டு சரிசெய்யலாம். அதற்கு தினமும் ஒரு கிராம்பை வாயில் போட்டு மென்று வாருங்கள். இதன் மூலம் வாய் துர்நாற்றம் நீங்குவதோடு, புத்துணர்ச்சியை உணரலாம்.

 புரையழற்சி

புரையழற்சி

புரையழற்சியை சரிசெய்ய கிராம்பு பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு கிராம்பை பொடி செய்து, அதனை மூக்கின் வழியே உறிஞ்ச வேண்டும்.

காலை சோர்வு

காலை சோர்வு

கர்ப்பிணிகளுக்கு காலையில் ஏற்படும் அதிகப்படியான சோர்விற்கு கிராம்பு நல்ல நிவாரணம் தரும். அதற்கு நீரில் 10 கிராம்பு, புளி மற்றம் பனை வெல்லத்தை சேர்த்து கலந்து, அந்நீரை தினமும் இரண்டு முறை குடித்து வந்தால், காலைச் சோர்வு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

வயிற்று உப்புசம்

வயிற்று உப்புசம்

கிராம்பை நீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்த நீரை குடித்து வத்நால், வயிற்று உப்புசம் உடனே நீங்கும்.

சளி

சளி

வளி இருக்கும் போது, வெதுவெதுப்பான நீரில் கிராம்பு போட்டு அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து, அதனை தினமும் 2-3 முறை குடித்து வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

பாலுணர்ச்சியைத் தூண்டும்

பாலுணர்ச்சியைத் தூண்டும்

கிராம்பு பாலுணர்வை தூண்டும் சிறப்பான பொருள் எனலாம். இதற்கு அதன் நறுமணம் தான் முக்கிய காரணம். இந்த நறுமணத்தினால், புத்துணர்வு கிடைத்து, நன்கு செயல்பட முடியும்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

மன அழுத்தத்தினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தால், அதில் இருந்து நிவாரணம் கிடைக்க, கிராம்பு, புதினா, துளசி மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை நீரில் போட்டு கொதிக்க விட்டு நல்ல தேநீர் செய்து தேன் சேர்த்து கலந்து குடித்தால், மன அழுத்தத்தில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Amazing Benefits Of Cloves

Here are some amazing health benefits of cloves. Want to know more medicinal uses of cloves? Take a look...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter