மூச்சுக்குழாய் அழற்சிக்கான அற்புதமான சில இயற்கை வைத்தியங்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

தற்போது மக்கள் நடப்பதை தவிர்த்து, எதற்கெடுத்தாலும் வாகனங்களைப் பயன்படுத்துவதால், நம்மைச் சுற்றியுள்ள காற்று மாசடைகிறது. இப்படி மாசடைந்த காற்றினை சுவாசிக்கும் போது, அது நம் மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரலை பெரிதும் பாதிக்கிறது. குறிப்பாக மாசடைந்த காற்றினை அதிக அளவில் சுவாசிக்கும் போது, அதில் உள்ள கிருமிகள் மூச்சுக்குழாயின் வழியே உடலினுள் நுழைந்து, மூச்சுக்குழாயில் அழற்சியை ஏற்படுத்தி விடுகிறது. இது மூச்சுக்குழாயோடு நிற்காமல், தொண்டை, நுரையீரல் போன்றவற்றிலும் அழற்சியை ஏற்படுத்துகிறது. சொல்லப்போனால் மூச்சுக்குழாயில் வீக்கம் ஏற்பட்டிருப்பதைத் தான் மூச்சுக்குழாய் அழற்சி என்று சொல்கிறோம்.

அதுமட்டுமின்றி, அத்துடன் கடுமையான வறட்டு இருமல், மூச்சுத்திணறல் போன்றவையும் ஏற்படுகிறது. இந்த நிலை தீவிரமாகும் போது, அது ஆஸ்துமாவாகிறது. ஆனால் மூச்சுக்குழாய் அழற்சிக்கு நிவாரணம் ஏதேனும் உள்ளதா என்று பார்த்தால், இருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் எந்த ஒரு நிலைக்கும் இயற்கை வழியை நாடும் முன், மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும். இங்கு மூச்சுக்குழாய் அழற்சியை சரிசெய்ய உதவும் சில அற்புதமான இயற்கை வைத்தியங்களைப் பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சை ஜூஸ் மூச்சுக்குழாய் அழற்சிக்கு மிகவும் சிறப்பான நிவாரணியாகும். இது நுரையீரல்ல உள்ள சளியை வெளியேற்ற உதவும். மேலும் இதனை ஜூஸ் போட்டு குடித்தால், அது மூச்சுக்குழாயை தளர்வடையச் செய்வதோடு, தொண்டை புண்யையும் சரிசெய்யும்.

பூண்டு

பூண்டு

பூண்டில் ஆன்டி-வைரல் தன்மை இருப்பதால், இது மூச்சுக்குழாய் அழற்சியை சரிசெய்வதில் சிறந்தது. அதிலும் பூண்டை துண்டுகளாக்கி, பாலில் சேர்த்து கொதிக்க விட்டு படுக்கும் முன் குடிக்க வேண்டும்.

இஞ்சி

இஞ்சி

இஞ்சியும் ஒரு அற்புதமான மூச்சுக்குழாய் அழற்சியை சரிசெய்ய உதவும் பொருட்களில் ஒன்று. நிறைய பேருக்கு இஞ்சி சளியை குணமாக்கும் என்று தெரியும். அதோடு இஞ்சி காயங்களையும், நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரித்து, மூச்சுக்குழாயில் ஏற்பட்டுள்ள அழற்சியை எதிர்த்துப் போராடும். அதற்கு இஞ்சியை டீ செய்து குடிப்பது நல்லது. வேண்டுமெனில் அந்த டீயில் மிளகுத் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்தும் குடிக்கலாம். அதிலும் இதனை தினமும் இரண்டு முறை குடிப்பது நல்லது.

கடுகு

கடுகு

கடுகு மூச்சுக்குழாய் அழற்சியை சரிசெய்ய பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு கடுகை அரைத்து பேஸ்ட் செய்து, மார்பகத்தில் பற்று போட வேண்டும். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.

யூகலிப்டஸ் எண்ணெய்

யூகலிப்டஸ் எண்ணெய்

யூகலிப்டஸ் எண்ணெய் கூட அற்புதமான நிவாரணி. அதற்கு யூகலிப்டஸ் எண்ணெயை சிறிது கொதிக்கும் நீரில் சேர்த்து, அந்த நீரை ஆவி பிடிக்க வேண்டும். இதனால் யூகலிப்டஸ் எண்ணெயில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, மூச்சுக்குழாயில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, நல்ல நிவாரணத்தை அளிக்கும்.

மஞ்சள்

மஞ்சள்

மஞ்சளில் நோயெதிர்ப்பு அழற்சித் தன்மை இருப்பதால், இது மூச்சுக்குழாய் அழற்சி அல்லது நெஞ்சு சளிக்கு நல்ல நிவாரணத்தை விரைவில் வழங்குகிறது. அதற்கு பாலில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, அதனை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி தினமும் குடித்து வந்தால், நெஞ்சில் உள்ள கிருமிகள் அழிந்து, நுரையீரல் மற்றும் மூச்சுக்குழாயில் ஏற்பட்டுள்ள வீக்கம் குறைந்துவிடும். ஆனால் உங்களுக்கு அல்ச, சிறுநீர்ப்பையில் கல் மற்றும் அசிடிட்டி இருந்தால், இந்த முறையைக் கைவிடவும்.

உப்பு தண்ணீர்

உப்பு தண்ணீர்

தினமும் வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்து பலமுறை கொப்பளித்து வந்தால், வாயில் உள்ள பாக்டீரியாக்கள் மட்டுமின்றி, பல்வேறு பிரச்னைகளும் குணமாகும். மேலும் இதனை தொடர்ந்து செய்து வர, நெஞ்சியில் தேங்கியுள்ள சளி கலைந்து, நெஞ்சு வலி குறையும்.

வெங்காயம்

வெங்காயம்

வெங்காயம் கூட சளிக்கு மிகவும் சிறப்பான மருந்துப் பொருள். உங்களுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தால், காலையில் ஒரு ஸ்பூன் வெங்காய பேஸ்ட் சாப்பிட்டு வர வேண்டும். இதனால் நெஞ்சில் தேங்கியுள்ள சளி குறையும்.

தண்ணீர் குடிக்கவும்

தண்ணீர் குடிக்கவும்

தண்ணீர் அதிகரித்து குடித்து வந்தால், அது மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரலை சுத்தம் செய்வதோடு, உடலை வறட்சியின்றி ஈரப்பசையுடன் வைத்துக் கொள்ளும்.

தேன்

தேன்

தேன் கூட சளியைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் சிறப்பான ஒன்று. ஏனெனில் தேனில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரஸ் உள்ளது. இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, மூச்சுக்குழாய் அழற்சியை குறைக்கும். எனவே உணவில் சர்க்கரைக்கு பதில் தேனை சேர்த்துக் கொள்ளுங்கள்.

பாதாம்

பாதாம்

பாதாமில் மக்னீசியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற சுவாச பிரச்சனைக்கு தீர்வு தரக்கூடிய சத்துக்கள் நிறைந்திருப்பதால், இதனை அன்றாட உணவில் சிறிது சேர்த்து வருவது நல்லது.

எள்

எள்

மற்றொரு சிறப்பான வைத்தியப் பொருள் தான் எள். அதற்கு ஆளி விதையை, எள் மற்றும் தேன் சேர்த்து கலந்து, அதனை தினமும் இரவில் படுக்கும் முன் 1 டீஸ்பூன் உட்கொண்டு தூங்கினால், சுவாசப் பிரச்சனைகள் குணமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

12 Home Remedies For Bronchitis

Are there any remedies for bronchitis? Well, bronchitis occurs due to the inflammation of bronchial tubes.
Story first published: Saturday, January 24, 2015, 17:26 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter