For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடல் எடை அதிகரிப்பிற்கு பின்னால் மறைந்திருக்கும் 11 காரணங்கள்!!!

By Ashok CR
|

உடல் எடை அதிகரிப்பதற்கு பின்னணியில் சில ஆச்சரியமளிக்கும் காரணங்கள் மறைந்திருக்கிறது. இவற்றை பல நேரங்களில் நாம் கண்டு கொள்ளாமல், உடல் எடையை குறைக்கும் திட்டத்தில் தீவிரமாக இருப்பீர்கள். நம் அனைவருக்கும் உடலை கட்டுக்கோப்புடன், ஆரோக்கியமாக வைத்திருக்க அனைவருமே விருப்பப்படுவோம். மெதுவாக உடல் எடை அதிகரிப்பது என்பது ஒரு பிரச்சனையாக இருக்கும். அதுவும் அது ஏன் என்ற காரணம் தெரியாமல் இருக்கும் போது மண்டையடியாக இருக்கும்.

உடற்பயிற்சி, டயட், பச்சை காய்கறிகள் மற்றும் சாலட்கள் உண்ணுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு உடல் எடையை குறைக்க நம்மால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் முயன்று பார்ப்போம். உடல் எடையை குறைப்பதில் இது நல்ல பலனை கண்டிப்பாக அளிக்கும். இருப்பினும் உடல் எடையை குறைப்பதில் என்னதான் முயற்சி செய்தாலும் கூட சிலருக்கு அதில் வெற்றி கிடைப்பதில்லை. அவர்கள் ஈடுபடும் டையட் மற்றும் பயிற்சிகளுக்கு இணையாக எதிர்ப்பார்த்த பலன் கிடைப்பதில்லை.

இதனால் அவைகள் நம்பிக்கை இழந்து போவார்கள். இதனால் உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், சில ரசாயன மாத்திரைகளை உட்கொள்ளும் அளவிற்கு கூட வந்து விடுவார்கள். இது அவர்களின் ஆரோக்கியத்தை பெருமளவில் பாதிக்கக்கூடும். அனைத்து முயற்சிகளுக்கு பின்னும் உடல் எடை குறையாமல் போவதை கருத்தில் கொண்டு, உங்களுக்கு சில ரகசியங்களை நாங்கள் கூறப்போகிரோம். உடல் எடை அதிகரிப்பதற்கான காரணங்கள் என்ன? உடல் எடையை குறைக்க நீங்கள் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தால், உடல் எடை அதிகரிப்புக்கு பின்னால் மறைந்திருக்கும் காரணங்களை பற்றி இப்போது பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 மன அழுத்தம்

மன அழுத்தம்

யாராவது மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களின் உடல் எடை அதிகரிக்கும். அதற்கு காரணம், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களுக்கு உணவுகள் மட்டுமே மன அமைதியை தரும் என எண்ணுவார்கள். இதனால் கலோரிகள் அதிகம் உள்ள ஐஸ் க்ரீம், துரித உணவுகள் மற்றும் இனிப்பு உணவுகளை வெளுத்து கட்டுவார்கள்.

 உடல் அல்லது மன ரீதியான காயம்

உடல் அல்லது மன ரீதியான காயம்

உடல் அல்லது மன ரீதியான காயத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் உடல் எடை அதிகரிக்கும். அதற்கு காரணம், அந்த வலியை ஈடுகட்ட கார்டிசோல் என்ற மன அழுத்த ஹார்மோன் வெளிப்படும். இதனால் உங்கள் பசி அதிகரிக்கும். மேலும் வேலையில் அழுத்தம் ஏற்படுபவர்களுக்கும் கூட இந்த நிலை ஏற்படலாம்.

தூக்கமின்மை

தூக்கமின்மை

உடல் எடை அதிகரிப்பதற்கு பின்னால் மறைந்திருக்கும் சுவாரசியமான மற்றொரு காரணம் தான் இது. தூக்கமின்மை ஏற்படும் போது உடலில் அழுத்தம் ஏற்படும் செயல்முறை தொடங்கி விடும். இதனால் உடலில் கொழுப்பு தேங்கி விடும். மேலும் தூக்கமின்மை உண்டாகும் போது அதிகமாக நொறுக்குத் தீனிகளை உண்ண ஆரம்பித்து விடுவீர்கள். இது ஹார்மோன் அளவுகளில் மாற்றத்தையும் ஏற்படுத்தும். இதனால் பசியும் எடுக்கும் பசி எடுக்காமலும் போகும். எவ்வளவு தான் சாப்பிட்டாலும் வயிறு நிறையாது.

 மருந்துகள் உண்ணுவது

மருந்துகள் உண்ணுவது

உங்களுக்கு ஏன் உடல் எடை வேகமாக அதிகரிக்கிறது? மன அழுத்தம் எதிர்ப்பி போன்ற சில மாத்திரைகள் உடல் எடை அதிகரிப்பு மீது பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இருப்பினும் மருத்துவர்களின் அறிவுரையோடு அந்த மருந்துகளை நிறுத்தினால், மீண்டும் பழைய எடைக்கு திரும்பி விடுவீர்கள். மன அழுத்த எதிர்ப்பி, மயக்க மருந்துகள், பதற்றம் எதிர்ப்பி மருந்துகள் மற்றும் கருத்தடை மாத்திரைகள் போன்ற சில மருந்துகள் இதில் அடக்கம்.

 அழற்சி எதிர்ப்பி மருந்துகளை பயன்படுத்துவது

அழற்சி எதிர்ப்பி மருந்துகளை பயன்படுத்துவது

ப்ரெட்னிசோம் போன்ற அழற்சி எதிர்ப்பி ஸ்டீராய்ட்ஸ் உங்கள் பசியை அதிகரித்து, நீர்ச்சத்தை தக்க வைக்கும். எத்தனை நாட்கள் மருந்துகளை உட்கொண்டு வருகிறீர்கள் மற்றும் எவ்வளவு டோஸ் சாப்பிடுகிறீர்கள் என்பதை பொறுத்து தான் உடல் எடை அதிகரிக்கும்.

 குஷிங்க்ஸ் சிண்ட்ரோம்

குஷிங்க்ஸ் சிண்ட்ரோம்

உடல் எடையை அதிகரிக்க மற்றொரு மருத்துவ ரீதியான காரணம் இது. தோல் அழிநோய், கீல்வாதம் மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு ஸ்டீராய்ட்ஸ் உண்ணும் போது, துரதிஷ்டவசமாக குஷிங்க்ஸ் சிண்ட்ரோம் ஏற்படும். இந்த நிலை ஏற்படும் போது கார்டிசோல் ஹார்மோன் அதிகமாக வெளிப்படும். இந்த ஹார்மோன் பசியை அதிகரிக்கும். இந்த நிலை ஏற்படும் போது கழுத்திலும் முகத்திலும் எடை அதிகரிக்கும்.

 ஹைபோதைராய்டிசம்

ஹைபோதைராய்டிசம்

உடல் எடை அதிகரிப்புக்கு பின்னால் மறைந்திருக்கும் மற்றொரு மருத்துவ காரணம் தான் இந்த ஹைபோதைராய்டிசம். உங்கள் தைராய்ட் சுரப்பி குறைவான அளவில் தைராய்ட் ஹார்மோன்களை சுரப்பதால் ஏற்படும் நிலை இது. இதனால் மெட்டபாலிச வீதம் குறையும். அதனால் கலோரிகள் எறிவதற்கு பதிலாக, கொழுப்புகள் தேங்க தொடங்கும். அதனால் உடல் எடை அதிகரிக்கும். ஹைபோதைராய்டிசம் பிரச்சனையை கண்டுப்பிடிக்கவில்லை என்றால் உடல் எடை அதிகரிப்பு இருந்து கொண்டே இருக்கும்.

 ஹார்மோன் சமமின்மை

ஹார்மோன் சமமின்மை

மருந்துகள் உண்ணுதல் மற்றும் இறுதி மாதவிடாயினால் இந்த நிலை ஏற்படலாம். இறுதி மாதவிடாயின் போது ஈஸ்ட்ரோஜென் சுரப்பதன் அளவு குறைந்து விடும். இதனால் வயிற்று பகுதியை சுற்றி கொழுப்புகள் தேங்கி விடும். இதனால் உடல் எடை அதிகரிக்கும். குழந்தையை சுமக்கும் வயதில் பெண்களுக்கு ஏற்படும் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) என்ற ஹார்மோன் பிரச்சனையாலும் கூட உடல் எடை அதிகரிக்கலாம்.

 உங்களுக்கு வயதாவது

உங்களுக்கு வயதாவது

வயது ஏறும் போது உங்கள் மெட்டபாலிசம்வீதம் குறையத் தொடங்கும். 40 வயதை தாண்டும் போது கலோரிகள் எறிவது குறையத் தொடங்கும். வயது ஏறும் போது உங்கள் வாழ்வு முறையிலும் மாற்றம் ஏற்படும். உதாரணத்திற்கு உங்கள் உடற்பயிற்சி செய்யும் அளவு குறையும். 40 வயதுக்கு மேல் உடல் எடை அதிகரிப்பதற்கு இதுவும் காரணமாகும்.

 போதிய அதிமுக்கிய ஊட்டச்சத்துக்கள் இல்லாதது

போதிய அதிமுக்கிய ஊட்டச்சத்துக்கள் இல்லாதது

வைட்டமின் டி, இரும்புச்சத்து அல்லது மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் போதிய அளவில் இல்லையென்றால் உங்கள் மெட்டபாலிச வீதம் பாதிக்கப்படும் அல்லது ஆற்றல் திறன் அளவு குறையும். இதன் விளைவாக, உடற்பயிற்சி செய்ய போதிய தெம்பு இருக்காது. இதனால் ஆற்றல் திறனை ஊக்குவிக்க அதிக இனிப்பு பலகாரங்கள் மற்றும் எளிய கார்போஹைட்ரேட்ஸ் போன்றவற்றை நாடி செல்வீர்கள்.

 உணவு அலர்ஜி

உணவு அலர்ஜி

உணவுகளில் உள்ள சில மூலப்பொருட்களால் சிலருக்கு எரிச்சல் ஏற்படும். அதற்கு காரணம் அவ்வகை உணவுகள் என்றால் அவர்களுக்கு அலர்ஜியாக இருக்கும். அலர்ஜியை உண்டாக்கும் பொதுவான உணவுகளில் இரண்டு தான் பசுவின் பால் மற்றும் க்ளூட்டன் (கோதுமை, பார்லி, கம்பு மற்றுறம் சில ஓட்ஸ்களில் காணப்படும் புரதம்). இவைகளை உண்ணுவதால் அழற்சி, வீக்கம் மற்றும் உடல் எடை அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion