For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மலச்சிக்கல் ஏற்படுவது பற்றி நீங்கள் அறிந்திராத 10 காரணங்கள்!!!

By Ashok CR
|

மலச்சிக்கல் என்பது பல பேர் சந்திக்கும் பொதுவான ஒரு பிரச்சனையே. இதனை நம்மில் பலரும் சீரியசாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் அதை அனுபவிப்பவர்களுக்கு தான் அதனால் ஏற்படும் வலியும் அசௌகரியமும் புரியும். மலச்சிக்கலை மருத்துவ ரீதியாக விளக்க வேண்டுமானால், ஒருவருக்கு மலம் கழிப்பதில் கஷ்டம் ஏற்படுவது அல்லது சீரற்ற முறையில் மலம் கழிப்பது. மலச்சிக்கலால் உங்கள் உடல் ஆரோக்கியம் பல விதங்களில் பாதிக்கப்படலாம். மலச்சிக்கல் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளது. சரியான நேரத்தில் உண்ணாதது அல்லது ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்களை கடைப்பிடிப்பதால் ஏற்படக் கூடியது தான் மலச்சிக்கல்.

மலச்சிக்கல் குறித்த கட்டுக் கதைகளும்... உண்மைகளும்...

அதனால் முதலில் மழங்கழித்தல் சீரான முறையில் நடைபெறாது. நாளடைவில் மலம் கழிக்கும் வேளையில் வலியை ஏற்படுத்தி இரத்தக்கசிவு கூட ஏற்படலாம். மலச்சிக்கல் இருப்பதால் பயணம் மேற்கொள்வது அல்லது விழாக்களுக்கு செல்வது போன்றவற்றில் சிக்கல்கள் ஏற்படும். இதற்கு பல வித வீட்டு சிகிச்சைகள் இருக்கவே செய்கிறது. ஆனால் மலச்சிக்கல் ஏன் ஏற்படுகிறது என்பதற்கான காரணங்களை நீங்கள் தெரிந்து கொண்டால், அதனை குணப்படுத்துவதும் சுலபமாக இருக்கும். அந்த காரணங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குறைவாக தண்ணீர் குடிப்பது அல்லது உடல் வறட்சி

குறைவாக தண்ணீர் குடிப்பது அல்லது உடல் வறட்சி

ஒருவர் குடிக்க வேண்டிய அளவை விட குறைவான அளவில் தண்ணீர் பருகினால், நம் ஆற்றலை உடல் வேகமாக உறிஞ்சி விடும். அதனால் தேவைப்படும் தண்ணீருக்கு பல இடங்களில் இருந்து உறிஞ்ச தொடங்கி விடும். அதன் முதல் குறி நம் உடலின் கழிவு தான். இதனால் ஏற்பட போவது மலச்சிக்கல். இதனால் உங்கள் மலம் மற்றும் கழிவு வறண்டு போகும். ஆகவே மலம் கழிப்பதற்கும் சிரமமாகி விடும். நீங்கள் உண்ணும் உணவு குடல் வழியாக மெதுவாக சென்றால், உணவில் உள்ள நீரை அதிகமாக குடல் உறிஞ்சும். இதனால் நிலைமை இன்னும் மோசமடைய தான் செய்யும்.

உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை

உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை

இன்றைய உலகத்தில், அனைத்துமே கணினிமயமாகி விட்ட இந்த நேரத்தில் நாம் உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சளி சார்ந்த நீர் (ஆசன வாயை வளுவளுப்பாக்க தேவைப்படும் நீர்) உற்பத்தி போன்ற பல்வேறு செயல்பாடுகளுக்கு நம் உடல் உடற்பயிற்சிகளை நாடியுள்ளது. இதனால் நம் மெட்டபாலிக் வீதமும் கட்டுப்பாட்டுடன் இருக்கும். ஆனால் உடல் உழைப்பு இல்லாத போது மலச்சிக்கல் உண்டாகிறது. நீண்ட நேரம் அமர்ந்திருந்தால், உங்கள் உடல் நீங்கள் நினைக்காத அளவில் பாதிப்படையும்.

சில மருந்துகளை உண்ணுதல்

சில மருந்துகளை உண்ணுதல்

மனத் தளர்ச்சி எதிர்ப்பு மாத்திரைகள், கால்சியம் பாதையை தடுக்கும் மாத்திரைகள் போன்ற சிலவகை மாத்திரைகளால் மலச்சிக்கல் ஏற்படலாம்.

கர்ப்பம்

கர்ப்பம்

கர்ப்பமாக இருக்கும் போது, பெண்ணுக்கு ஏற்படும் அபரிமிதமான ஹார்மோன் மாற்றங்களால் மலச்சிக்கல் ஏற்படலாம். மற்றொரு காரணமும் உள்ளது; சிசு வளர்ச்சி அடையும் போது செரிமான பாதையின் மீது அழுத்தத்தை போடும். இதனால் உணவு அவ்வழியே செல்வதற்கு தாமதமாகும்.

வயதாவது

வயதாவது

நமக்கு வயது ஏறும் போது நம் உடலில் செயல்முறைகள் மாற்றமடையும். வயதாகும் போது, பலரும் மலச்சிக்கலால் அவதிப்படுவார்கள். அதற்கு காரணம் மெட்டபாலிசம் மற்றும் செரிமான வீதம் குறைவதாலேயே.

மலமிளக்கும் மருந்தை அதிகமாக பயன்படுத்துதல்

மலமிளக்கும் மருந்தை அதிகமாக பயன்படுத்துதல்

தங்களின் மலங்கழித்தல் செயல்முறை சீராக நடைபெற பலரும் மலமிளக்கும் மருந்துகளை உட்கொள்வார்கள். மலமிளக்கும் மருந்துகளை உட்கொள்வது மிகவும் மோசமான பழக்கமாகும். அதனை அதிகமாக பயன்படுத்தினால், மலச்சிக்கல் ஏற்பட போகும் இடர்பாடும் அதிகரிக்கவே செய்யும். உங்களுக்கு அந்த பழக்கம் இருந்தால் அதனை மெதுவாக நிறுத்தி விடுங்கள்.

புற்றுநோய் அல்லது பிற அமைப்பு முறை நோய்கள்

புற்றுநோய் அல்லது பிற அமைப்பு முறை நோய்கள்

பெருங்குடல் புற்றுநோய் அல்லது சர்க்கரை நோய், ஹைபோதைராய்டு போன்ற பிற அமைப்பு முறை நோய்கள் இருப்பதால் இந்த நிலை ஏற்படுவதுண்டு. நடுக்குவாதம் இருந்தாலும் கூட மலச்சிக்கல் ஏற்படும். அப்படிப்பட்ட நேரத்தில் உங்கள் மருத்துவரை நீங்கள் அணுகுவது நல்லது.

மலங்கழித்தல் அடைப்புக்கான அறிகுறியாக கூட மலச்சிக்கல் இருக்கலாம்

மலங்கழித்தல் அடைப்புக்கான அறிகுறியாக கூட மலச்சிக்கல் இருக்கலாம்

மலச்சிக்கல் கடுமையாக இருக்கும் போது, ஒருவர் தொடர்ச்சியாக பல நாட்கள் மலங்கழிக்காமல் இருந்திருப்பார். இதனை நோய் முதலறியா மலச்சிக்கல் என கூறுவார்கள்.

பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள்

பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள்

சிலர் லாக்டோஸ் சகிப்புத்தன்மையின்மை என்ற நிலையால் அவதிப்படுவார்கள். ஒருவருக்கு பால் அல்லது பால் சார்ந்த பொருட்கள் என்றால் அலர்ஜி என்றால் இந்த நிலை ஏற்படலாம். இந்த நிலையால் ஒன்று வயிற்றுப்போக்கு ஏற்படலாம் அல்லது மலச்சிக்கல் ஏற்படலாம்.

கழிவறையை பயன்படுத்துவது தவிர்த்தல்

கழிவறையை பயன்படுத்துவது தவிர்த்தல்

சிலர் கழிவறையை பயன்படுத்துவதை தவிர்ப்பார்கள். சில நேரங்களில் அது ஒன்றும் செய்யாமல் போனாலும் கூட, மலங்கழித்தலை சீரான முறையில் இப்படி கட்டுப்படுத்தினால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படலாம். இப்படி கட்டுப்படுத்தும் போது மேலே உள்ள மலக்குடலுக்கு மலம் செல்லும். இதனால் கழிவு முழுமையாக நீங்காதது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Causes Of Constipation You Probably Didn’t Know About

There are a number of home remedies to remedy the condition, the knowing about the cause for the onset of constipation is as important as treating it. So, to help you out, here are 10 common causes of the condition.
Desktop Bottom Promotion