For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அழகிற்கும் ஆரோக்கியத்திற்கும்... ஆலிவ் எண்ணெயின் இரட்டை நன்மைகள்!!

By Karthikeyan Manickam
|

விலை அதிகமாக இருந்தாலும், ஆலிவ் எண்ணெய் கொண்டு சமைத்தாலே உணவுகளுக்குத் தனி ருசி வந்துவிடுகிறது. ருசியைக் கொடுப்பது மட்டுமல்ல, அது உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது.

சமீப காலமாக, அழகுக் கலையிலும் ஆலிவ் எண்ணெய் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சருமத்தை அழகாக்குவதிலும், சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிப்பதிலும் அது ஒரு முக்கிய இடத்தை வகித்து வருகிறது.

இப்படி இரட்டை நன்மைகளை அளித்து வரும் ஆலிவ் எண்ணெய், அழகிற்கும் ஆரோக்கியத்திற்கும் தரும் நன்மைகள் குறித்துப் பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இதய நோய்க்கு...

இதய நோய்க்கு...

இரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்துக்களை ஆலிவ் எண்ணெய் வெகுவாகக் குறைக்கிறது. தினமும் இரண்டு ஸ்பூன் ஆலிவ் எண்ணெயை உணவில் சேர்த்துக் கொண்டால், வாதம் மற்றும் இதய் நோய்கள் தடைபடும்.

எலும்பு வளர்ச்சிக்கு...

எலும்பு வளர்ச்சிக்கு...

ஆலிவ் எண்ணெயை அதிக அளவு எடுத்துக் கொண்டால், அது எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான கால்சியத்தை உடலில் அதிகப்படுத்துகிறது. இதனால் ஆஸ்டியோபோரோசிஸ் என்ற எலும்புருக்கி நோயைத் தவிர்க்கலாம்.

நீரிழிவு நோய்க்கு...

நீரிழிவு நோய்க்கு...

ஆலிவ் எண்ணெய் அதிகமுள்ள ஒரு உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தால் நீரிழிவு நோயைத் தவிர்க்கலாம். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படுவதோடு, இன்சுலின் உற்பத்தியும் அதிகமாவதால், நீரிழிவு நோய் முழுவதுமாகத் தவிர்க்கப்படுகிறது.

சரும அழகிற்கு...

சரும அழகிற்கு...

முகத்தில் தோன்றும் பருக்கள் மற்றும் தழும்புகளைப் போக்குவதற்கு ஆலிவ் எண்ணெய் மிகவும் உபயோகமாக இருக்கும். அதேப்போல், உங்கள் சருமம் உலர்ந்து இருந்தால், ஆலிவ் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யலாம். இதனால் தோல் மிருதுவாகும்; பளபளப்பாகும். முழங்கால், முழங்கை சொரசொரப்புக்களைப் போக்குவதிலும் வல்லது இந்த ஆலிவ் எண்ணெய்.

ஈரப்பத கூந்தலுக்கு...

ஈரப்பத கூந்தலுக்கு...

தலைமுடியில் தோன்றும் பொடுகு மற்றும் பேன் தொல்லைகளுக்கும் கூட ஆலிவ் எண்ணெய் ஒரு முக்கிய மாற்றாக விளங்குகிறது. ஆலிவ் எண்ணெயைத் தலையில் ஊற்றி, கைவிரல் நுனிகளைக் கொண்டு சுழற்றி சுழற்றி மசாஜ் செய்தால் கூந்தல் பளபளக்கும். எப்போதும் மெலிதான ஈரப்பதத்துடனும் கூந்தல் இருக்கும். வாரத்திற்கு குறைந்தது ஒரு முறை மிதமான சூட்டில் உள்ள ஆலிவ் எண்ணெயைத் தலையில் ஊற வைத்து 30 நிமிடங்கள் கழித்துக் கழுவுதல் நலம். ஆலிவ் எண்ணெயுடன் முட்டையும் கலந்தால் முடி இன்னும் பளபளக்கும்.

செல்லுலைட்டைக் குறைக்க...

செல்லுலைட்டைக் குறைக்க...

செல்லுலைட் என்ற ஒரு வகை சரும வியாதியைக் குறைக்கும் தன்மை காப்ஃபைனில் உள்ளது. ஆகவே ஃபில்ட்டர் செய்த பின் எஞ்சியிருக்கும் காபியுடன் ஆலிவ் எண்ணெயைக் கலந்து பாதிக்கப்பட்ட சருமப் பகுதிகளில் தடவினால், அவை சிறிது சிறிதாக மறைந்துவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top 3 Olive Oil Health and Beauty Benefits

Food-lovers have never entirely forgotten the delightful golden fluid, but in recent years, a new awareness of the benefits of olive oil has been born. Numerous studies have only reinforced the notion that olive oil is an amazing substance with numerous benefits. Here are the 101 olive oil benefits we came up with.
Desktop Bottom Promotion