For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உணவில் அஜினமோட்டோ சேர்ப்பதால் சந்திக்கும் பிரச்சனைகள்!!!

By Boopathi Lakshmanan
|

சாப்பாடு என்றால் அது வீட்டில் மட்டுமே என்ற சொல்லிக் கொண்டிருந்தது பழைய காலம். இன்றைய வேகமான உலகில் வெளியில் சென்று எதிர்படும் கடைகளில் சாப்பிடுவது மிகவும் சாதாரணமான விஷயம். அதுவும் வீடுகளிலேயே பேக்கிங் செய்யப்பட்ட உணவுகளையும் மற்றும் ரெடிமேட் உணவுகளையும் சாப்பிடுவது சகஜமாகி விட்டது.

ஆனால், இந்த மாற்றத்துடன் விழிப்புணர்வும் இருக்க வேண்டியது அவசியமாகிறது. இந்த ரெடிமேட் உணவுகளை வாங்கும் நுகர்வோர்கள் யாரும் குருடர்கள் இல்லை. ஆந்த உணவில் கலந்துள்ள பொருட்கள் மற்றும் சத்துக்களைப் பற்றிய விபரங்களைப் பற்றிய விழிப்புணர்வு தகவல்களையும் நுகர்வோர்கள் அனைவரின் கண்களும் தேடும். இந்த விழிப்புணர்வின் ஒரு பகுதியாக அஜினமோட்டோவின் நன்மை, தீமைகளைப் பற்றியும் தெரிந்து கொள்வது நுகர்வோர்களாகிய நம் கடமை.

அஜினமோட்டோ அல்லது எம்.எஸ்.ஜி என்றழைக்கப்படும் மோனோசோடியம் குளூடாமேட் நாம் சாப்பிடும் ரெடிமேட் உணவுகளில் எல்லாம் கலந்திருக்கும் முக்கியமான கலவையாகும். முன்னதாக இந்த அஜினமோட்டோவை சைனீஸ் உணவுகளில் மட்டுமே கலக்கப்பட்டு வந்து. ஆனால், இன்றைய நாட்களில் அஜினமோட்டோ கலக்காத உணவுகளே இல்லை என்ற நிலை வந்து விட்டது.

கடைகளில் விற்கப்படும் ரெடிமேட் உணவுகளை இனிமேல் கூர்ந்து கவனியுங்கள். தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட பொருட்களின் வரிசையில் கண்டிப்பாக அஜினமோட்டோ இருக்கும். நூடுல்ஸ்களைத் தவிர அனைத்து விதமான உணவுப் பொருட்களிலும் அஜினமோட்டோ கலந்துள்ளது. இதில் உருளைக்கிழங்கு சிப்ஸ்-ம் கூட அடக்கம்.

இந்த அஜினமோட்டோ அல்லருது MSG என்றால் என்ன தான் சார்? அது நம்முடைய உடலின் ஆரோக்கியத்திற்கு உலை வைக்கும் தன்மை கொண்டதா? 1909-ம் ஆண்டு ஜப்பானைச் சேர்ந்த அஜினமோட்டோ கார்ப் என்ற நிறுவனம் உருவாக்கியது தான் அஜினமோட்டோ. உணவின் சுவையைக் கூட்டுவதற்காகவே இந்நிறுவனம் அஜினமோட்டோவைக் கண்டு பிடித்தது. மிகவும் குறைவான விலையில், அற்புதமான சுவையை கொடுத்ததால் பாஸ்ட் ஃபுட் நிறுவனங்களுக்கு வரப்பிரசாதமாக அஜினமோட்டோ மாறியது. அனைத்து விதமான ரெடிமேட் உணவுகளிலும் நல்ல விளைவை அஜினமோட்டோ ஏற்படுத்தி இருந்தது. நாளடைவில் அஜினமோட்டோவின் தாக்கம் கடல்களையும், எல்லைகளையும் கடந்து சென்று விட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Risks of Consuming Ajinomoto

The health effects of ajinomoto can be quite disastrous. To know about the bad health effects of monosodium glutamte, read on..
Story first published: Wednesday, October 1, 2014, 18:44 [IST]
Desktop Bottom Promotion