For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களே! புரோஸ்டேட் வீக்கம் வராம இருக்கணும்ன்னா... இதெல்லாம் மனசுல வெச்சு நடந்துக்கோங்க...

By Maha
|

ஆண்களிடம் இருக்கும் மிகவும் மென்மையான ஒரு பகுதி தான் புரோஸ்டேட் சுரப்பி. ஆண்களுக்கு வயது அதிகரிக்கும் போது, பெரும்பாலானோருக்கு புரோஸ்டேட் சுரப்பியில் பிரச்சனைகளானது ஏற்படக்கூடும். எனவே இந்த சுரப்பியின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பணியின் ஆண்கள் உடனே ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால் பிற்காலத்தில் பெரும் பிரச்சனைக்கு ஆளாகக்கூடும்.

பொதுவாக வயதான பின் ஆண்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் புரோஸ்டேட் வீக்கம். இத்தகைய புரோஸ்டேட் வீக்கம் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், இன்றிலிருந்தே அதன் ஆரோக்கியத்தை பாதுகாத்து வாருங்கள். அதுமட்டுமின்றி, தற்போது புரோஸ்டேட் புற்றுநோயும் ஆண்களை தாக்கி வருகிறது. இந்த புற்றுநோய் வருவதற்கு மன அழுத்தம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் சில கெட்ட பழக்கங்களும் தான் முக்கிய காரணங்களாக உள்ளன.

மேலும் புரோஸ்டேட் சுரப்பியானது சிறுநீரகத்திற்கு அருகில் இருப்பதால், ஆண்கள் சரியாக சிறுநீர் கழிக்காவிட்டாலோ அல்லது சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தைப் முறையாக பேணி பாதுக்காக்காவிட்டாலோ, புரோஸ்டேட் வீக்கமானது ஏற்படும். இப்படி வீக்கம் ஏற்பட்டால் கடுமையான வலியை அனுபவிப்பதுடன், எப்போதும் அசௌகரியமாக இருக்கக்கூடும்.

ஆகவே புரோஸ்டேட் சுரப்பியில் எவ்விரத பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், ஆண்கள் அதன் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் பணியின் இன்றில் இருந்தே ஈடுபட வேண்டும். இங்கு புரோஸ்டேட் சுரப்பியை என்னவெல்லாம் செய்து வந்தால் பாதுகாக்க முடியும் என்பதைப் பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சரியான உள்ளாடை

சரியான உள்ளாடை

அதிகப்படியான வெப்பம் ஆண்விதைகளுக்கு நல்லதல்ல. மேலும் புரோஸ்டேட் சுரப்பியானது சிறுநீர்ப்பைக்கு கீழே வலது பக்கத்தில் உள்ளது. எனவே இறுக்கமான உள்ளாடையை அணிந்தால், புரோஸ்டேட் சுரப்பியானது அதிக அழுத்தத்திற்கு உட்படுவதுடன், வெப்பமடைந்துவிடும். ஆகவே எப்போதும் தளர்வான உள்ளாடையை அணிய வேண்டும்.

போதிய தண்ணீர்

போதிய தண்ணீர்

தினமும் அதிக அளவில் தண்ணீர் குடித்து, சிறுநீரை வெளியேற்ற வேண்டும். ஒருவேளை அபபடி தண்ணீர் குடிக்காமல், சிறுநீர் கழிக்காமல் அப்படியே இருந்தால், சிறுநீரக தசைகளானது இறுக்கமடைய ஆரம்பித்துவிடும். பின் அடிக்கடி சிறுநீர் வருவது போன்ற உணர்வுகள் இருக்கும், ஆனால் சிறுநீர் வெளியேறாமல், உடலில் நச்சுக்கள் அதிகரித்து, புரோஸ்டேட் ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.

MOST READ: இந்த இடத்துல 2 நிமிடம் அழுத்தம் கொடுங்கள்..! பிறகு உடலில் என்ன நடக்குதுன்னு நீங்களே தெரிஞ்சிப்பீங்க.

புகைப்பிடிப்பதை நிறுத்தவும்

புகைப்பிடிப்பதை நிறுத்தவும்

ஆண்களுக்கு இருக்கும் ஒரு முக்கியமான கெட்ட பழக்கம் தான் புகைப்பிடிப்பது. இப்படி ஒன்று தானே என்று தினமும் ஒரு சிகரெட் பிடித்து வந்தாலே, பிற்காலத்தில் புரோஸ்டேட் புற்றுநோயால் அவஸ்தைப்படக்கூடும்.

ஜிங்க் நிறைந்த உணவுகளை உட்கொள்ளவும்

ஜிங்க் நிறைந்த உணவுகளை உட்கொள்ளவும்

ஆண்களில் உடலில் உள்ள டெஸ்டோஸ்டிரோனின் அளவை சீராக வைத்துக் கொள்ள ஜிங்க் மிகவும் இன்றியமையாதது. அதிலும் ஆண்களுக்கு வயதாகும் டெஸ்டோஸ்டிரோனின் அளவு குறைவதால், புரோஸ்டேட் சுரப்பியானது வீக்கமடைய ஆரம்பிக்கும். எனவே ஆண்கள் எப்போதும் ஜிங்க் நிறைந்த உணவுகளை அன்றாடம் எடுத்து வர வேண்டும்.

உள்ளாடை அணிவதை தவிர்க்க வேண்டாம்

உள்ளாடை அணிவதை தவிர்க்க வேண்டாம்

சிலர் பேண்ட், ஜீன்ஸ் அணியும் போது உள்ளாடை அணியமாட்டார்கள். அப்படி அணியாமல் இருந்தால், பேண்ட் அல்லது ஜீன்ஸானது அதிகப்படியான அழுத்தத்தைக் கொடுத்து, புரோஸ்டேட் சுரப்பியை பாதிப்பிற்குள்ளாக்கும். இப்படியே நீடித்தால், நாளடைவில் புரோஸ்டேட் சுரப்பியில் வீக்கமானது ஏற்படக்கூடும்.

பச்சை பூண்டு சாப்பிடவும்

பச்சை பூண்டு சாப்பிடவும்

பூண்டில் அல்லியம் என்னும் பொருள் அதிகம் உள்ளது. இது புரோஸ்டேட் புற்றுநோய் வருவதை 20 சதவீதம் குறைக்கும். எனவே தினமும் ஒரு பல் பூண்டை பச்சையாக சாப்பிடுங்கள்.

MOST READ: வீட்டிலேயே சிவலிங்கம் வைத்து வழிபட வேண்டுமென்றால் செய்ய வேண்டிய விதிமுறைகள் என்ன?

உலர்ந்த கற்பூரவள்ளி (Oregano)

உலர்ந்த கற்பூரவள்ளி (Oregano)

உலர்ந்த கற்பூரவள்ளியில் ஆன்டி-கேன்சர் பொருள் அதிகம் இருப்பதால், இதனை உணவில் சேர்த்து வந்தால், புற்றுநோயை உண்டாக்கும் செல்களை இவை அழித்துவிடும். மேலும் இது புரோஸ்டேட் செல்களுக்கு மிகவும் சிறந்தது.

பைஜியம் (Pygeum)

பைஜியம் (Pygeum)

இது ஒரு ஆப்பிரிக்கா ப்ளம்ஸ். இது புரோஸ்டேட் வீக்கம் இருந்தால், அதனை குணப்படுத்த உதவும். அதிலும் இதனை டீ செய்தோ அல்லது வேறு எந்த விதத்திலோ உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

மொபைல் கதிர்வீச்சு

மொபைல் கதிர்வீச்சு

பெரும்பாலான ஆண்கள் தங்களின் மொபைல் போன்களை பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொள்கிறார்கள். இது ஆண்களின் பிறப்புக்களுக்கு மிகவும் ஆபத்தானது. ஏனெனில் மொபைல் போனில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சுக்களானது, புரோஸ்டேட் புற்றுநோயை தூண்டக்கூடியவை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

9 Tips To Protect Your Prostate Gland Today!

To protect your prostate gland from now, you need to take some steps. Learn what you can do to prevent prostate gland enlargement..
Desktop Bottom Promotion