வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்க சில சூப்பரான கை வைத்தியங்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

மனிதனின் முறையற்ற உணவுப்பழக்கத்தாலும், உணவாலும் உடலானது பல்வேறு நோய்களுக்கு உள்ளாகிறது. அதில் ஒன்று தான் உடலை பாழ்படுத்தும் வயிற்றுப் புழுக்கள். பொதுவாக இந்த வயிற்றுப் புழுக்களானது உணவுகளின் மூலம் உடலுக்குள் செல்வதோடு, சில நேரங்களில் சருமத்தின் மூலமும், குடிக்கும் நீரின் மூலமும் உடலுக்குள் செல்கிறது.

பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் சில எளிய வழிகள்!!!

எப்படியெனில் உண்ணும் உணவுப் பொருட்களை சுத்தமாக கழுவி சாப்பிடாமல் இருப்பது, சுகாதாரமற்ற குடிநீரைப் பருகுவது, அசுத்தம் நிறைந்த சூழ்நிலையில் வசிப்பது போன்றவற்றின் மூலம் உடலுக்குள் புழுக்களானது புகுந்து வளர ஆரம்பிக்கிறது. இப்படி உடலுக்குள் குடித்தனம் நடத்தும் புழுக்களில் 40 வகைகள் உள்ளன. வயிற்றில் புழுக்கள் இருந்தால் ஒருசில அறிகுறிகள் வெளிப்படும். மேலும் ஒவ்வொருவருக்கும் அறிகுறிகள் வேறுபடும்.

பெண்களே... 'அந்த' இடத்தில் துர்நாற்றமா? இதோ 15 சூப்பர் டிப்ஸ்...

அதில் வயிற்று வலி, வாய்வு தொல்லை, வயிற்றுப் போக்கு, கெட்ட துர்நாற்றம், தொடர்ச்சியான பசி, நிம்மதியற்ற தூக்கம், தலைவலி, உடல் சோர்வு, இரத்த சோகை, காய்ச்சல், கால் வலி போன்றவை குறிப்பிடத்தக்கவை. இங்கு இத்தகைய பிரச்சனைகளைக் கொடுக்கும் வயிற்றுப் புழுக்களை அழித்து வெளியேற்றும் ஒருசில கை வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றி வந்தால், விரைவில் உடலில் தங்கியுள்ள புழுக்களை வெளியேற்றிவிடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேங்காய்

தேங்காய்

வாரம் இரண்டு முறை காலையில் சாப்பிடும் போது 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் சாப்பிட்டு, பின் மூன்று மணிநேரம் கழித்து ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் 2 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து குடித்து வர வேண்டும். முடிந்தால் இந்த செயலை தினமும் செய்து வரலாம்.

பூண்டு

பூண்டு

பூண்டை உணவில் சேர்த்து வந்தால், வயிற்றில் எவ்வித புழுக்கள் இருந்தாலும் அழிந்துவிடும். அதிலும் அதனை பச்சையாக சாப்பிட்டால், அதில் உள்ள சல்பர் புழுக்களை அழித்துவிடும். அதற்கு ஒரு வாரம் தொடர்ந்து காலையில் வெறும் வயிற்றில் பூண்டை சாப்பிட்டு வர வேண்டும்.

பப்பாளி விதை

பப்பாளி விதை

பப்பாளி விதையை நன்கு உலர வைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின் 2 டீஸ்பூன் பப்பாளி விதை பவுடரை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் சேர்த்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி மூன்று நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் அழிந்து வெளியேறிவிடும்.

பூசணிக்காய் விதை

பூசணிக்காய் விதை

1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் பூசணியின் விதையை வறுத்து, பொடி செய்து, அதில் தேன் சேர்த்து கலந்து, காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டு வர வேண்டும். அதுமட்டுமின்றி, காலையில் வாழைப்பழம் அல்லது கிவி பழத்தை சாப்பிட்டு வர வேண்டும்.

ஓமம்

ஓமம்

ஆயுர்வேத முறைப்படி, ஓமம் வயிற்றில் உள்ள புழுக்களை அழித்துவிடும். அதற்கு காலையில் வெறும் வயிற்றில் ஒரு டேபிள் ஸ்பூன் வெல்லத்தை சாப்பிட்டு 15-20 நிமிடம் கழித்து, ஒரு டம்ளர் நீரில் 1 1/2 டீஸ்பூன் ஓமத்தை தட்டி சேர்த்து குடிக்க வேண்டும். இப்படி இரண்டு வாரத்திற்கு தொடர்ந்து செய்து வந்தால், உடலை ஆரோக்கியமாக புழுக்களின்றி வைத்துக் கொள்ளலாம்.

வேப்பம்பூ

வேப்பம்பூ

ஒரு டேபிள் ஸ்பூன் உலர்ந்த வேப்பம்பூவை ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து வறுத்து, வெள்ளை சாதத்தில் சேர்த்து பிசைந்து சாப்பிட வேண்டும். இப்படி நான்கு நாட்கள் தினமும் இரண்டு முறை உட்கொண்டு வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள், புழுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். முக்கியமாக கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் இந்த முறையை பின்பற்றக்கூடாது.

கேரட்

கேரட்

கேரட்டை துருவி, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். முக்கியமாக இதனை சாப்பிட்ட பிறகு எந்த ஒரு பொருளையும் காலை உணவாக எடுக்கக்கூடாது. இப்படி ஒரு வாரத்திற்கு சாப்பிட்டு வந்தால், வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றிவிடலாம்.

கிராம்பு

கிராம்பு

ஒரு கப் சூடான தண்ணீரில் 1 டீஸ்பூன் கிராம்பை பொடி செய்து சேர்த்து, 10-20 நிமிடம் மூடி வைத்து, தினமும் மூன்று முறை என ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வந்தால், புழுக்கள் முற்றிலும் வெளியேறிவிடும்.

மஞ்சள்

மஞ்சள்

ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூளை ஒரு டம்ளர் மோரில் சேர்த்து கலந்து, தினமும் ஒரு முறை குடித்து வந்தால், வயிற்றுப் புழுக்கள் அகலும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

தினமும் 4-6 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை குடித்து வந்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, வயிற்றில் உள்ள புழுக்களை எதிர்த்துப் போராடி அழிந்து வெளியேற்றிவிடும்.

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

10 Home Remedies For Intestinal Worms

There are many simple and easy natural treatments that may also be taken along with conventional medications to get rid of intestinal worms. Here are the top 10 home remedies for intestinal worms.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter