For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள்!!!

By Super
|

யோகா என்பது பல கோணங்களில் உடலை சுருக்கி செய்யும் பயிற்சி. இதன் மூலம் மனதையும் உடலையும் இணைத்து ஆரோக்கியத்தை பெற முடியும். யோகாவின் சக்தியை பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. இதை அனுபவித்தால் தான் அதன் நன்மைகளை உணர முடியும்.

இரத்த அழுத்தத்தை சீராக்குதல், மன அழுத்தத்தை குறைத்தல், கொழுப்புத் தன்மையை நீக்குதல் போன்றவைகளை யோகா செய்கின்றது. உடல் எடையை குறைப்பதுடன், இந்த யோகா அழகான உடல் அமைப்பை பெறவும் உதவுகின்றது. இவை அனைத்தையும் விட யோகா மன அமைதியை முழுமையாக கொடுக்கின்றது. இதை தொடர்ச்சியாக செய்வதன் மூலம் மன அழுத்தத்தை போக்கலாம். இப்போது யோகாவை தினமும் செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கர்ப்ப காலம்

கர்ப்ப காலம்

கர்ப்பத்தின் போது சிறந்த உடலமைப்பை பெற யோகா செய்ய வேண்டும். யோகா செய்வதை வழக்கமாக்கி கொண்டால், சோர்வைப் போக்கி, டென்ஷனை தவிர்த்து, திசுக்களை தளர்வடைய செய்து, இரத்தத்தை பெருக்கி, செரிமான தன்மையை அதிகப்படுத்தி, நரம்புகளை சீராக்க முடியும். மேலும் கர்ப்பக் காலத்தில் ஏற்படும் இரத்த சோகை, முதுகு வலி, கால் வலி, செரிமானம் கெடுதல் போன்றவை சீரடையும். யோகா செய்வதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையை பெறவும்.

மன அமைதி

மன அமைதி

யோகா சுவாகக் கோளாறை சரிசெய்து, மூளையையும், உடல் ஆரோக்கியத்தையும் பலப்படுத்துகின்றது. அதிலும் அன்றாடம் சிக்கலுக்குக் உள்ளாக்கப்படும் மூளையின் உட்பிரிவு சம்பந்தமான பிரச்சினைகளை சரிசெய்கின்றது. யோசிக்கும் திறனுக்கும், உருவாக்கும் திறனுக்கும் உள்ள சமநிலையை உருவாக்கும் தன்மை யோகாவிற்கு உள்ளது.

உடலுக்கு ஊக்கம்

உடலுக்கு ஊக்கம்

நோயற்ற உடலே ஆரோக்கியமானது என்று இல்லை, மூளைக்கும் உணர்வுக்கும் சமநிலை இல்லாத நிலையும் ஆரோக்கியமற்றதே. யோகா செய்வதால் முழுமையான உடல் அமைப்பையும், ஆரோக்கியத்தையும் பெற முடியும். மேலும் நோயற்ற வாழ்வை மகிழ்ச்சியுடனும், மன அமைதியுடனும் கொண்டாட முடியும்.

இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்

இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்

யோகாவின் பல வித அமைப்புகள், சுவாசம் மற்றும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கக் கூடியது. இதனால் உடலின் அனைத்து பாகங்களுக்கும் இரத்த ஓட்டமானது சீராக இருக்கும்.

தொப்பையற்ற வயிறு

தொப்பையற்ற வயிறு

தொப்பையற்ற வயிற்றை பெறலாம் என்று அறியும் முன்னர், எந்த பயிற்சியாலும் இந்த தன்மையை எளிதில் பெற முடியாது என்ற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். நவுக்காசனா (Naukasana), உஷ்த்ராசனா (Ushtrasana), க்ரஞ்சஸ் (crunches) போன்ற யோகாசனங்களை தினமும் செய்தால், தொப்பையற்ற வயிற்றை பெறலாம். இதனுடன் சீரான உணவு முறையையும் பின்பற்ற வேண்டும்.

இதயம்

இதயம்

யோகாவின் முலம் இதய நோய்களை கூட குணப்படுத்த முடியும். இதனால் இரத்த ஓட்டம் சீரடைந்து இரத்த அடைப்பை போக்கி ஆரோக்கியமான இதயத்தை பெற முடிகின்றது

வலி நிவாரணி

வலி நிவாரணி

யோகாவின் மூலம் தசைகள் தளர்வடைவதால் முதுகு வலி, கால் வலி போன்ற வலிகளில் இருந்து விடுபடலாம். உட்கார்ந்த இடத்தில் வேலை பார்ப்பவர்களும், டிரைவர்களும் தினமும் யோகா செய்ய வேண்டும். இதனால் முதுகு தண்டுகளில் பிடிப்புகளை போக்க முடியும்.

சீரான சுவாசம்

சீரான சுவாசம்

மூச்சு பயிற்சியால் சீரான சுவாசத்தை பெற முடியும். யோகா செய்வதால் நுரையீரல்களை சீர்படுத்தி சீரான சுவாசதத்தைப் பெறலாம். அதிலும் ஆழமான மூச்சு பயிற்சி உடல் வலிமையை கூட்டி மன அழுத்தத்தை போக்குகின்றது.

சமநிலை

சமநிலை

வயதான காலத்தில் உடல் தளர்வடைந்து கீழே விழ நேரிடும். அதற்கு யோகா மிக அவசியம். கீழே விழுதல், முதுகு வலி போன்ற அனைத்து வலிகளுக்கும் யோகா நிவாரணம் அளிக்கின்றது. இதனால் உடல் வலிமை அடைவதுடன், மூளையும் சீராக செயல்படுகின்றது.

மன அழுத்தத்தை போக்கும்

மன அழுத்தத்தை போக்கும்

கடினமான வேலையை செய்தவுடன் யோகா செய்தால், மன அழுத்தத்தை போக்கி கொள்ள முடியும். யோகா மட்டும் இல்லை மற்ற உடற்பயிற்சிகளாலும் மன அழுத்தத்தை போக்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits of Yoga

Yoga is much more than simply twisting your body in impossible poses. It is a meeting of mind and body that together give you the health benefits of mindful exercise.
Desktop Bottom Promotion