Latest Updates
-
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...!
உடல் எடை அதிகரிக்காமல் திருப்தியாக சாப்பிடுவதற்கான சில வழிகள்!!!
இந்த உலகில் ஒரு சாண் வயிற்றுக்கு உணவு தேடுவதே முதன்மையான வேலையாக இருக்கிறது. அத்தகைய உணவு நமக்கு திருப்தியையும், முழுமையையும் கொடுத்தால் தான் மகிழ்ச்சியாகவும் மன நிறைவுடன் வாழ முடியும். அந்த வகையில் சாப்பிடும் உணவில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள் மற்றும் சிற்சில விஷயங்கள், பெருமளவிற்கு நம்முடைய வாழ்க்கையில் பங்கு பெறுகின்றன.
சாப்பிடும் உணவு திருப்தியைத் தரவில்லை என்று நினைக்கிறீர்களா? அல்லது சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே வேறு நொறுக்குத் தீனிகளைத் தேடிச் செல்கிறீர்களா? ஆம் என்றால், சாப்பிடும் உணவை ரசித்து, ருசித்து சாப்பிட்ட பின், அதில் திருப்தியையும் மற்றும் முழுமையையும் கொடுக்கும் சில உணவுப் பழக்கங்களை கொடுத்திருக்கிறோம். அதை படித்துப் பயன் பெறுங்கள்.

உணவுப் பழக்கம்
சாப்பிடும் போது டிவி பார்த்துக் கொண்டோ அல்லது பேசிக் கொண்டோ சாப்பிடக் கூடாது. உணவு உண்ணும் நேரத்தை, சாப்பிடுவதில் மட்டுமே செலவிட வேண்டும். அப்படி கவனத்துடன் சாப்பிடும் வேளைகளில், வேகமாகவும், முழுமையாகவும் உண்டு முடித்த திருப்தி கிடைக்கும். மேலும் சாப்பிடும் நேரங்களில் வேகமான இசையைக் கேட்பதை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் சாப்பிடும் வேகத்தை அது அதிகப்படுத்தி விடும். இதனால் உடல் நலத்திற்கும் கேடு விளையும்.

நுகர்தலும், மெல்லுதலும்
உணவை நுகர்ந்து பார்க்கும் போதே, பாதி திருப்தி ஏற்படும். இரண்டாவதாக, மெதுவாக மென்று சாப்பிட வேண்டும். ஏனெனில் நொறுங்கத் தின்றால் நூறு வயது! எப்படியெனில் நன்றாக மென்று சாப்பிடும் போது, நாவின் செல்கள் தூண்டப்பட்டு, இந்த செய்தியை மூளைக்கு கொண்டு செல்லும். இதன் மூலம் 'பேஷ், பேஷ் சூப்பரா சாப்டாச்சு!!' என்ற உணர்வும் கிடைக்கும்.

ஈரப்பதமான உணவுகள்
நீர்மச்சத்து மற்றும் நீர்மம் போன்ற உணவுகளை தேர்ந்தெடுப்பதற்கு காரணம், அதிக காற்றும், நீரும் உள்ள உணவுகள் வேகமாக வயிற்றை நிரப்பிவிடும் என்பதாலேயே. எனவே பாப்-கார்ன்களுக்குப் பதிலாக காய்கறி சூப்பும், முந்திரிப் பழங்களுக்கு மாற்றாக திராட்சைகளையும் சப்பிடலாம்.

கொழுப்புச்சத்து உணவுகளை தவிர்க்கவும்
புரோட்டின் அதிகமாக உள்ள உணவுகளை விட, கொழுப்பு அதிகமாக உள்ள உணவுகள் திருப்திப்படுத்தும் உணர்வுகளை தூண்டுவதற்கு சற்று அதிகமான நேரத்தை எடுத்துக் கொள்ளும். எனவே கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்கவும்

தூக்கம்
தூக்கம் குறைவாக இருக்கும் போது, க்ரெலின் மற்றும் குறைவான அளவு லெப்டின் ஆகிய ஹார்மோன்கள் உற்பத்தியாகும். இவை தான் உணவுத் தேவைக்கான வேலைகளில் ஈடுபட்டு வருபவை. வயிற்றில் உற்பத்தியாகும் க்ரெலின் பசிக்கான தூண்டுதலை அதிகப்படுத்தும் போது, லெப்டின் திருப்திக்கான தூண்டுதலை உருவாக்கி, பசியைக் குறைக்கும். எனவே உடலுக்கு ஓய்வும், துக்கமும் தேவை.

தண்ணீர்
தினமும் சராசரியாக 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். சில சமயங்களில் அடிக்கடி பசியெடுக்கும். இதற்கு உண்மையான காரணம் தாகமாக இருப்பது தான்! எனவே சாப்பிடும் முன் 2 டம்ளர் அல்லது அதற்கும் மேல் தண்ணீர் குடிக்கவும். இதனால் சாப்பாட்டில் திருப்தியும், முழுமையும் கிடைக்கும்.

சிறிய தட்டுகள்
சாப்பிடும் தட்டு எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அந்த தட்டு முழுவதும் சாப்பாடு போட்டு, தட்டு காலியாகும் வரை சாப்பிடுவது தான் வழக்கம். இந்த பழக்கத்தால், சாப்பிடுவதன் நோக்கம் முழுமையாக மற்றும் திருப்தியாக சாப்பிடுவது என்று இல்லாமல், தட்டை காலியாக்குவது தான் என்று மாறிவிடுகிறது. எனவே, பெரிய தட்டுக்கு மாற்றாக, சற்றே அளவில் சிறிய தட்டினை பயன்படுத்தத் தொடங்கினால், திருப்தியை உணரலாம்.

நெடுநேரம் சாப்பிட வைக்கும் உணவுகள்
சாப்பிட அதிக நேரம் எடுக்கும் உணவுகளை சாப்பிடும் போது, சாப்பாட்டில் முழுமையாக கவனம் திரும்பும் மற்றும் திருப்தி ஏற்படும். எடுத்துக்காட்டாக, முட்களையுடைய மீன்கள், காரமான குழம்பு ஆகிய உணவுகள் சாப்பாட்டு நேரத்தை அதிகப்படுத்தும்.

ஆப்பிள்
சாப்பிடுவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னர், ஒரு ஆப்பிளை சாப்பிடுவதால், சாப்பாட்டின் அளவு குறைவதுடன், திருப்தியும் கிடைக்கும் என்று ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. எனவே, தினசரி உணவில் ஒரு ஆப்பிளை சேர்த்துக் கொள்வதன் மூலம், தேவையான நார்ச்சத்தும் கிடைக்கும்.

இயற்கை உணவுகள்
செயற்கையாக தயாரிக்கப்பட்ட உணவுகளில், சேர்க்கப்பட்டிருக்கும் பொருட்கள் அதிகமான கலோரிகளை கொண்டது. எனினும், இயற்கையாக கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை நாம் சாப்பிடும் போது, அதிகமாக மென்று தின்ன வேண்டியதாக இருப்பதால், ஒவ்வொருமுறை மெல்லும் போதும் திருப்தியும், முழுமையும் கிடைப்பதை உறுதி செய்ய முடிகிறது.
மேற்கூறியவற்றையெல்லாம் பின்பற்றும் போது, உடலை பருமடையச் செய்யும் பழக்கமான அதிகமான உணவு உட்கொள்ளுதல் குறைவதோடு, இத்தகைய ஆரோக்கியமான பழக்கத்தால் உடலும் நீண்ட நாட்கள் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











