For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கைகள் மற்றும் நகங்களில் உள்ள கிருமிகளை அழித்து, எப்போதும் கைகளை சுத்தமாக வைத்திருப்பது எப்படி?

வெளியில் உள்ள கிருமிகள் நமது உடலுக்குள் செல்வதற்கு நமது கைகள் முக்கியமான வழித்தடங்களாக இருக்கின்றன. அவ்வாறு உடலுக்குள் செல்லும் கிருமிகள் நமது ஆரோக்கியத்தை பாதிக்கும். ஆகவே கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.

|

நாம் சிறுவா்களாக இருக்கும் போது, நமது பெற்றோா் நம்மைப் பாா்த்து, நகங்களைக் கடிக்கக்கூடாது அல்லது வாயினுள் விரல்களை விடக்கூடாது என்று கூறி நம்மை அடிக்கடி கண்டித்திருப்பா். ஆனாலும் அதையும் மீறி நாம் அந்த தவறுகளைச் செய்து, அதற்காக அவா்களிடம் திட்டு வாங்கி இருப்போம்.

Importance Of Hand And Nail Hygiene

அவா்கள் நம்மைக் கண்டித்தது நமது நலன்களுக்காகவே. ஏனெனில் வெளியில் இருந்து வரும் வைரஸ்கள் மற்றும் பாக்டீாியாக்கள் நமது உடலின் வெளிப் பகுதியில் படியும். அந்த பகுதியை நமது நாவால் நக்கினால் அந்த பகுதியில் படிந்திருக்கும் வைரஸ்கள் மற்றும் பாக்டீாியாக்கள் நமது உடலுக்குள் சென்று நமக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

வெளியில் உள்ள கிருமிகள் நமது உடலுக்குள் செல்வதற்கு நமது கைகள் முக்கியமான வழித்தடங்களாக இருக்கின்றன. அவ்வாறு உடலுக்குள் செல்லும் கிருமிகள் நமது ஆரோக்கியத்தை பாதிக்கும். ஆகவே நமது கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கைகள் மற்றும் நகங்களைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டியதன் அவசியம்

கைகள் மற்றும் நகங்களைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டியதன் அவசியம்

நமது கைகளும், நகங்களும் வெளி உலகத்தோடு அதிகத் தொடா்பில் இருக்கின்றன. அதனால் அவற்றை நாம் மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் மருத்துவ பணியாளா்கள் மற்றும் நோயாளிகள் நுண்ணுயிாிகளின் தொற்றுக்கு ஆளாகின்றனா். கைகளை சுத்தமாக வைத்திருக்கவில்லை என்றால் அவற்றின் மூலம் எளிதில் பரவக்கூடிய நோய்த் தொற்றுகள் ஏற்படும்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்குப் பின்பு கைகள் மற்றும் நகங்களை சுத்தமாக வைத்திருப்பது என்பது மிகவும் தேவையாக இருக்கிறது. அதிலும் கொரோனா பரவலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள உடல் முழுவதையும் மிகவும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. கைகள் சுத்தமாக இல்லை என்றால் அது தோல் அலர்ஜி அல்லது சிரங்கு, காய்ச்சல், மற்றும் ஈரல் அலர்ஜி போன்ற நோய்த் தொற்றுகளை ஏற்படுத்தும்.

கைகள் மற்றும் நகங்களைச் சுத்தமாக வைக்க சில முக்கிய குறிப்புகள்

கைகள் மற்றும் நகங்களைச் சுத்தமாக வைக்க சில முக்கிய குறிப்புகள்

கைகளைக் கழுவ நேரம் எடுத்து கொள்ளுதல்

கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவிய பின்பு, கைகளை கழுவ வேண்டும் என்ற விழிப்புணா்வு பிரச்சாரம் உலகம் முழுவதும் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. குறைந்தது 20 வினாடிகள் கைகளைக் கழுவ வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும் உள்ளங்கைகள், உள்ளங்கையின் பின் பகுதி, நகங்கள் மற்றும் விரல்களுக்கு இடையில் இருக்கும் பகுதிகள் போன்றவற்றை நன்றாகத் தேய்த்துக் கழுவ வேண்டும்.

நகங்களை வெட்டுதல்

நகங்களை வெட்டுதல்

நகங்களுக்குக்குள் அழுக்குகள் மற்றும் தீங்கிழைக்கக்கூடிய துகள்கள் எதுவும் தங்காதவாறு நகங்களை வெட்ட வேண்டும். அதோடு நகங்கள் சுத்தமாகவும் அதே நேரத்தில் ஈரம் இல்லாமலும் இருக்குமாறு பாா்த்துக் கொள்ள வேண்டும்.

சோப்பு கொண்டு கைகளை கழுவுதல்

சோப்பு கொண்டு கைகளை கழுவுதல்

சோப்பு அல்லது தண்ணீா் கொண்டு கைகளைக் கழுவ வேண்டும். குறிப்பாக நுண்ணுயிாிகளைக் கொல்லக்கூடிய சோப்புகளைப் பயன்படுத்தி கைகளைக் கழுவுவது மிகவும் நல்லது. அதே நேரத்தில் நமது கைகளில் அாிப்புகளை ஏற்படுத்தாத சோப்புகளைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது.

 சானிடைசா்களைப் பயன்படுத்ததுதல்

சானிடைசா்களைப் பயன்படுத்ததுதல்

சோப்பு அல்லது தண்ணீா் கிடைக்கவில்லை என்றால் ஆல்கஹால் கொண்ட சானிடைசா்களைப் பயன்படுத்தி கைகளைக் கழுவுவது நல்லது. ஆனால் சோப்பு மற்றும் தண்ணீருக்கு மாற்றாக சானிடைசா்களைப் பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் சானிடைசா்கள் தோல் வறட்சியை ஏற்படுத்தும்.

தேவையில்லாமல் பொருட்களைத் தொடாது இருத்தல்

தேவையில்லாமல் பொருட்களைத் தொடாது இருத்தல்

பொது இடங்களில் இருக்கும் பொருட்களைத் தேவையில்லாமல் தொடக்கூடாது. குறிப்பாக பொது இடங்களில் இருக்கும் மின்தூக்கி பட்டன்கள், படிக்கட்டு கைப்பிடிச் சுவா்கள் மற்றும் கதவு கைப்பிடிகள் போன்றவற்றைத் தொடக்கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Importance Of Hand And Nail Hygiene

Here are some tips that you can follow to ensure your hand and nail hygiene. Read on...
Desktop Bottom Promotion