For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆரோக்கிய வாழ்விற்கு இரவு உணவில் கடைபிடிக்க வேண்டிய பழக்கவழக்கங்கள்

இரவு உணவுதான் நீங்கள் அடுத்தநாள் உற்சாகமாய் எழ தேவையான ஆற்றலை வழங்குகிறது. அதேபோல நீங்கள் இரவில் உண்ணும் சில உணவுகள்தான் உங்கள் எடை அதிகரிப்பிற்கும் வேறு சில ஆரோக்கிய பிரச்சினைகளுக்கும் காரணமாகிறது.

|

காலை நேர உணவு என்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான ஒன்று. அன்றைய நாளின் ஒட்டுமொத்த ஆற்றலுக்கும் ஆதாரமாய் அமைவது காலை உணவுதான். அதற்காக மற்ற உணவு முக்கியமில்லை என்று அர்த்தமல்ல. காலை உணவை போலவே மதிய உணவும், இரவு உணவும் மிகவும் அவசியமானவைதான்.

tips should follow at dinner for a healthy life

இரவு உணவுதான் நீங்கள் அடுத்தநாள் உற்சாகமாய் எழ தேவையான ஆற்றலை வழங்குகிறது. அதேபோல நீங்கள் இரவில் உண்ணும் சில உணவுகள்தான் உங்கள் எடை அதிகரிப்பிற்கும் வேறு சில ஆரோக்கிய பிரச்சினைகளுக்கும் காரணமாகிறது. எனவே இரவு உணவு சாப்பிடும்போது எச்சரிக்கையாய் இருக்க வேண்டியது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தயிரை தவிர்க்கவும்

தயிரை தவிர்க்கவும்

பலருக்கும் இரவு நேரத்தில் தயிர் சாப்பிடுவது என்பது பிடித்தமான ஒன்று. சிலர் இரவு நேரத்தில் தயிர் சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும் என்று கூட நினைப்பார்கள். ஆனால் ஆயுர்வேதத்தின்படி இரவு நேரத்தில் தயிர் சாப்பிடுவது நல்ல யோசனையல்ல. இது உங்கள் உடலில் கப தோஷத்தை அதிகரிக்குமாம்.

சூடான நீரை குடிக்கவும்

சூடான நீரை குடிக்கவும்

அதிக நீர் குடிப்பது ஆரோக்கியமான பழக்கம்தான். ஆனால் இரவு நேரத்தில் குடிப்பது சரியானதல்ல. இரவு உணவிற்கு பிறகு அதிக தண்ணீர் குடிப்பது நல்ல பழக்கம் அல்ல. சாப்பிட்ட சிலமணி நேரத்திற்கு பிறகு சூடான நீரை குடிக்கவும். இது செரிமானத்தை அதிகரிக்கவும் உடலில் உள்ள வாயுவை வெளியேற்றவும் உதவும்.

மஞ்சள் பால் குடிக்கவும்

மஞ்சள் பால் குடிக்கவும்

மஞ்சள் இயற்கையாகவே பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டது. இரவு நேரத்தில் மஞ்சளை பாலில் கலந்து குடிப்பது சளியை மட்டும் கட்டுப்படுத்துவதில்லை, பாக்டீரியாக்களுக்கு எதிராக போராடுவதுடன் குறட்டையில்லா தூக்கத்தையும் கொடுக்கிறது.

சர்க்கரை உணவுகளை தவிர்க்கவும்

சர்க்கரை உணவுகளை தவிர்க்கவும்

சர்க்கரை நிறைந்த உணவுகளான கேக், பிஸ்கட் மற்றும் பிற உணவுகளை இரவு நேரத்தில் சாப்பிடும்போது அது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். இதனால் உங்கள் ஆற்றல் மட்டங்கள் அதிகரித்து உங்கள் தூக்கத்தை கெடுக்கும். ஒருவேளை உங்களுக்கு இனிப்பு சுவை தேவைப்பட்டால் சர்க்கரைக்கு பதிலாக தேனை எடுத்துக்கொள்வது ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதுடன் எடை குறைப்பிற்கும் உதவும்.

MOST READ: உங்கள் பெயரின் முதல் எழுத்து கூறும் உங்களுடைய வாழ்க்கை ரகசியம் என்ன தெரியுமா?

மசாலாவை சேர்க்கவும்

மசாலாவை சேர்க்கவும்

சீரகம், வெந்தயம், ஏலக்காய் போன்ற மசாலா உணவுகளை உணவில் சேர்ப்பது உணவின் சுவையை அதிகரிப்பதுடன் உங்கள் உடலில் உள்ள சூட்டின் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது. இதனால் உங்கள் உடல் எடையை குறைப்பதோடு பசியின்மையையும் கட்டுப்படுத்தும்.

சாலட்களை தவிர்க்கவும்

சாலட்களை தவிர்க்கவும்

இரவு நேரங்களில் சாலட்கள் சேர்ப்பது உங்கள் உடலில் வாயுவை அதிகரிக்கும். இரவு நேரங்களில் வெள்ளரிக்காய், கீரை போன்ற உணவுகளை தவிர்ப்பது நல்லது.

அதிக புரோட்டின்களை சாப்பிடுங்கள்

அதிக புரோட்டின்களை சாப்பிடுங்கள்

புரோட்டின்கள் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். புரோட்டின் நிறைந்த உணவுகளான பருப்பு, பயிறு வகைகள் மற்றும் புரோட்டின் நிறைந்த காய்கறிகளான ப்ரோக்கோலி போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். அதுமட்டுமின்றி குறைந்த கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை சாப்பிடுவது கொழுப்புகளை குறைக்கும்.

அதிக உப்பு வேண்டாம்

அதிக உப்பு வேண்டாம்

அதிக உப்பு உடலுக்கு தேவைப்படும் நீரின் அளவை அதிகரிக்கிறது. உணவில் உப்பின் அளவை குறைத்துக்கொள்வது மாரடைப்பு ஏற்படும் அளவை குறைக்கிறது. மேலும் இரத்த அழுத்தத்தை குறைப்பது, இதய நோய்களை தடுப்பது மற்றும் மரணம் முன்கூட்டியே ஏற்படுவதை தடுப்பது போன்ற நன்மைகளையும் செய்கிறது.

MOST READ: இந்த நடிகைகள் எல்லாம் அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று உங்களுக்கு தெரியுமா?

குறைவாக சாப்பிடுங்கள்

குறைவாக சாப்பிடுங்கள்

ஆயுர்வேதத்தின் படி இரவு உணவை குறைவாக சாப்பிடுவது உங்களுக்கு நிம்மதியான தூக்கத்தை வழங்கக்கூடும். இரவு நேரத்தில் அதிகம் சாப்பிடுவது தூக்கத்தை கெடுப்பதுடன் செரிமானம் அடையும் நேரத்தையும் அதிகரிக்கிறது.

குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகள்

குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகள்

ஆயுர்வேதத்தின் படி இரவு நேரத்தில் குறைவான கார்போஹைட்ரட் உள்ள உணவுகளை சாப்பிடுவது செரிமானத்தை எளிதாக்கும். கனமான உணவுகளை இரவு நேரத்தில் சாப்பிடுவது தூக்கத்தை கெடுப்பதுடன் அடுத்தநாள் காலையை சோர்வானதாக மாற்றிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

tips should follow at dinner for a healthy life

People should avoid some foods at night since they create an imbalance in health. Check out the healthy tips should follow at dinner.
Desktop Bottom Promotion