உங்கள் உடலில் புரதம் குறைவாக இருக்கிறது என எப்படி அறிந்துக் கொள்வது?

Posted By:
Subscribe to Boldsky

நமது உடலுக்கு எல்லா சத்துக்களும் தேவை. ஒவ்வொரு சத்தும், உடலின் ஒவ்வொரு பகுதி மற்றும் உறுப்பிற்கு வலு சேர்த்து ஆரோக்கியமாக இயங்க உதவுகின்றன.

நீங்கள் சில சமயங்களில் எந்த காரணமும் இல்லாமல், பெரிதாக எந்த ஒரு வேலையும் செய்யாமல் சோர்வாக உணர்ந்திருப்பீர்கள். கணினி முன்னர் அமர்ந்து வேலை கூட பார்க்க முடியாது.

Four Signs of a Lack of Protein in Your Diet!

சிலர் ஏதோ இருதய பிரச்சனை வந்துவிட்டது என எண்ணி அச்சம் கொள்வார்கள்... இதய பிரச்சனை இருந்தால் இப்படி சோர்வு வெளிப்படும் தான்.

அதே சமயத்தில் உடலில் போதிய அளவு புரதச்சத்து இல்லை என்றாலும் கூட காரணமே இல்லாமல் நீங்கள் சோர்வாக உணர்வீர்கள்.

புரதம் உடலுக்கு எவ்வளவு முக்கியம், அதன் மூலம் என்னென்ன மாயங்கள் உடலில் நடக்கின்றன. புரதச்சத்து குறைபாட்டை வெளிப்படுத்தும் உடல் அறிகுறிகள் பற்றி இங்கே காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புரதத்தின் அவசியம்!

புரதத்தின் அவசியம்!

  1. தினமும் நமக்கு கிடைக்கும் சக்தியில் 15% புரதத்தில் இருந்து தான் கிடைக்கிறது.
  2. தசை, சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியத்திற்கு முக்கிய காரணமாக இருப்பது புரதம்.
  3. உடலில் ஆன்டி-பாடிகள் தயாராக, இன்பெக்ஷன் குணமாக காரணியாக இருப்பது புரதம்.
  4. தசை வலிமை அதிகரிக்க, உடல் எடை குறைக்க புரதம் அவசியம்.
  5. உடலில் சிவப்பு இரத்த அணுக்கள் மற்றும் என்சைம்ஸ் தயாராக புரதம் வேண்டும்.

இனி, உடலில் புரதம் குறைவாக இருப்பதை குறித்து உடலில் தென்படும் அறிகுறிகள் பற்றி காணலாம்....

உடல்நலம்!

உடல்நலம்!

உங்கள் உடலில் புரதம் இல்லை என்பதை அறிந்துக் கொள்ள உதவும் முதல் அறிகுறி, நீங்கள் மிக எளிதாக உடல்நலம் குன்றி போவது தான். உங்கள் டயட்டில் போதியளவு ஊட்டச்சத்து இல்லை எனில், தன்னால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலிவிழந்து போய்விடும்.

நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம் வலுவிழந்து போனால் உங்கள் உடல் மெல்ல, மெல்ல சேதமடைய துவங்கும்.

தசை வலிமை!

தசை வலிமை!

புரதம் தான் தசை வளர்ச்சி மற்றும் தசை வலிமை காக்கும் சத்து. உங்கள் உடலில் புரதம் குறைந்து போனால், தசை வளர்ச்சியும், தசை வலிமையும் குறைந்துவிடும்.

ஜிம் செல்பவர்களால் இதை எளிதாக அறிய முடியும். எனவே, உங்கள் உடலில் புரத சத்து சேர்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். எளிதாக காயம் அடைவது, தசைப்பிடிப்பு ஏற்படுவது அதிகமாக இருந்தால் உடலில் புரதம் குறைவாக இருப்பதை அறிந்து கொள்ளலாம்.

நாள்பட்ட சோர்வு!

நாள்பட்ட சோர்வு!

மயக்கம் வருவது போன்று இருப்பது, எப்போதும் சோர்வாகவே காணப்படுவது போன்றவை உங்கள் டயட்டில் புரதம் குறைவாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் மற்றுமொரு அறிகுறி ஆகும்.

எந்த வேலையும் பெரிதாக செய்யாமல், பொதுவாக எந்த ஒரு காரணமும் இன்றி நீங்கள் சோர்வாக காணப்பட்டால், அது புரதச்சத்து குறைபாடு காரணமாக என நீங்கள் அறிந்துக் கொள்ளலாம்.

சரும பிரச்சனைகள்!

சரும பிரச்சனைகள்!

நமது சருமம் உருவாக திசுக்கள் தான் காரணம். அதற்கு பெரியளவில் ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. அதில், முக்கியமான ஒன்று புரதம்.

உங்கள் உடலில் புரதம் குறைவாக இருந்தால், சருமத்தில் பிரச்னைகள் உண்டாவதை நீங்கள் அறியலாம். புரதம் குறைவாக இருந்தால் முடி வேர் வலுவிழந்து எளிதாக முடி உடையும், உதிரும் நிலையை நாம் காணலாம்.

கடைசியாக, உங்கள் முகத்தில் வயதை காட்டிலும் அதிக சுருக்கும் விழுவதை வைத்து புரத சத்து குறைபாடு இருப்பதை அறிந்துக் கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Four Signs of a Lack of Protein in Your Diet!

நமது சருமம் உருவாக திசுக்கள் தான் காரணம். அதற்கு பெரியளவில் ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. அதில், முக்கியமான ஒன்று புரதம்.உங்கள் உடலில் புரதம் குறைவாக இருந்தால், சருமதில் பிரச்னைகள் உண்டாவதை நீங்கள் அறியலாம். புரதம் குறைவாக இருந்தால் முடி வேர் வலுவிழந்து எளிதாக முடி உடையும், உதிரும் நிலையை நாம் காணலாம்.கடைசியாக உங்கள் முகத்தில் வயதை காட்டிலும் அதிக சுருக்கும் விழுவதை வைத்து புரத சத்து குறைபாடு இருப்பதை அறிந்துக் கொள்ளலாம்.
Subscribe Newsletter