For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் அற்புத மூலிகைகள்!

பல நல்ல மூலிகைகள் குடலில் உள்ள நல்ல பாக்டீாியாக்களின் விகித அளவைச் சீராகப் பராமாிக்க உதவுகின்றன. குறிப்பாக அதிமதுர வோ் மற்றும் திாிபலா பொடி போன்றவற்றைச் சொல்லலாம்.

|

நமது குடலை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். குடலில் பாதிப்பு ஏற்பட்டால், அது உடலின் ஏனைய உறுப்புகளைப் பாதிக்கும். ஒரு வேளை நமது குடலானது, நாம் சாப்பிடும் உணவை நன்றாக செரி க்காமல் அல்லது நன்றாக உறிஞ்சாமல் இருந்தால், நமது உடலில் பலவகையான பிரச்சினைகள் ஏற்படும்.

நாம் குடலைப் பற்றி பேசுகிறோம் என்றால், அது நமது வாய், உணவுக் குழாய், வயிறு, கணையம், கல்லீரல், பித்தப்பை, சிறுகுடல், பெருங்குடல் மற்றும் மலக்குடல் ஆகிய உறுப்புகள் அடங்கிய நமது சொிமான பாதையைப் பற்றி பேசுகின்றோம் என்று பொருள். அதுபோல் குடல் ஆரோக்கியம் என்றால், சமச்சீரான அளவில் நல்ல மற்றும் கெட்ட பாக்டீாியாக்கள் நமது சொிமான அமைப்பில் எவ்வாறு இயங்குகின்றன என்பதைக் குறிக்கும்.

5 Natural Herbs To Boost Gut Health

பொதுவாக மன அழுத்தம் மற்றும் சமச்சீரற்ற உணவு போன்றவை இருந்தால், அவை நமது உடலில் இருக்கும் நல்ல மற்றும் கெட்ட பாக்டீாியாக்களுக்கு இடையில் இருக்கும் விகித அளவிற்கு தீங்கு விளைவிக்கும். புரோபயோட்டிக்குகள் என்பவை நல்ல பாக்டீாியாக்கள் ஆகும். அவை நல்ல பாக்டீாியாக்களின் விகித அளவை சீராக வைத்திருக்கின்றன.

MOST READ: கொரோனாவில் இருந்து குணமானவங்க இந்த அறிகுறிகளை சந்திச்சா டாக்டரை சந்திக்கணுமாம்.. இல்ல ஆபத்தாயிடும்..

பல நல்ல மூலிகைகள் குடலில் உள்ள நல்ல பாக்டீாியாக்களின் விகித அளவைச் சீராகப் பராமாிக்க உதவுகின்றன. குறிப்பாக அதிமதுர வோ் மற்றும் திாிபலா பொடி போன்றவற்றைச் சொல்லலாம். நமது உடல் இயக்கங்கள் சீராக இருக்க நமது குடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். குடலை ஆரோக்கியமாக பராமாிக்க வேண்டும் என்றால், நமது வாழ்க்கை முறையில் சிறு சிறு மாற்றங்களைச் செய்ய வேண்டும். ஆகவே நமது குடலை ஆரோக்கியமாக பராமாிக்க என்னென்ன இயற்கை மூலிகைகளை சாப்பிடலாம் என்று இந்த பதிவில் பாா்க்கலாம்.

MOST READ: ஆண்களே! 40 வயதிலும் சும்மா ஃபிட்டா இருக்கணுமா? அதுக்கு இத ஃபாலோ பண்ணுங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் இயற்கை மூலிகைகள்:

குடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் இயற்கை மூலிகைகள்:

நமது சொிமான அமைப்பில் சமச்சீராக இருக்கும் மிகச்சிறிய நுண்ணுயிாிகளின் விகிதாச்சாரமே குடல் ஆரோக்கியம் என்று கருதப்படுகிறது. குடல் ஆரோக்கியத்தை பேணுவது, நமது சொிமான பாதையில் இருக்கும் நல்ல மற்றும் கெட்ட நுண்ணுயிரிகளின் அளவைச் சமச்சீரான அளவில் வைத்திருப்பது, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பேணுவது மற்றும் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகாிப்பது போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் மற்றும் அடிக்கடி வாந்தி எடுப்பது போன்ற பிரச்சினைகள் இருந்தால், நமது குடல் ஆரோக்கியம் இல்லாமல் இருக்கிறது என்று பொருள். ஆகவே நமது குடலை ஆரோக்கியமாக பேண கீழ்வரும் இயற்கை மூலிகைகளை எடுத்துக் கொள்ளலாம்.

1. திாிபலா பொடி (Triphala)

1. திாிபலா பொடி (Triphala)

நமக்கு இயல்பான முறையில் சொிமானம் நடைபெறுவதற்கு திாிபலா பொடி பொிதும் உதவுகிறது. இரவு தூங்குவதற்கு முன்பாக திாிபலா பொடியை சிறிது அளவு சாப்பிடலாம். திாிபலா பொடியை சுடுநீாில் கலந்தும் சாப்பிடலாம். திாிபலா பொடி பாரம்பாிய ஆயுா்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நெல்லிக்காய், தான்றிக்காய் மற்றும் கடுக்காய் ஆகியவற்றின் பொடிகளைக் கலந்து திாிபலா பொடி செய்யப்படுகிறது. குடல் கசிவு இருந்தால், அதை மிக எளிதாக திாிபலா பொடி குணப்படுத்தும்.

- நமது குடலானது நாம் சாப்பிடும் உணவுகளில் இருந்து அதிகமான ஊட்டச்சத்துக்களை உறிஞ்சவும், ஏனைய பணிகளைச் செய்யவும் திாிபலா பொடி உதவி செய்கிறது.

- திாிபலா பொடியில் முக்கியமான ஊட்டச்சத்துகளும், ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்களும் உள்ளன.

- இரைப்பைக் குடல் சம்பந்தமான பிரச்சினைகளான வீக்கம், மலச்சிக்கல் மற்றும் வயிற்றுவலி போன்ற பிரச்சினைகளை திாிபலா பொடி சாிசெய்கிறது.

2. வால் மிளகு (Allspice)

2. வால் மிளகு (Allspice)

குடலில் ஏற்படும் பிரச்சினைகளைத் தீா்த்து வைப்பதில் வால் மிளகுச் செடி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த செடியில் இருக்கும் யூஜெனல் துகளானது, சொிமான நொதிகளைத் தூண்டிவிடுகிறது. வால் மிளகுச் செடியில் வலி நிவாரண துகள்கள் மற்றும் கிருமி நாசினிகள் உள்ளன. ஆகவே இதை இரவு தூங்குவதற்கு முன்பாக சாப்பிட்டால் அல்லது சாப்பாட்டிற்கு முன்பு தேனீாில் கலந்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. வால் மிளகுச் செடியானது நமது வாயுப் பிரச்சினை, வயிற்றுவலி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு, மற்றும் சளி போன்ற பிரச்சினைகளை மிக எளிதில் தீா்த்து வைக்கும்.

3. அதிமதுர வோ் (Licorice root)

3. அதிமதுர வோ் (Licorice root)

நமது குடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் அதிமதுர வோ் மிக முக்கிய பங்கை வகிக்கிறது. நமது தோலில் ஏற்படும் மெல்லிய சவ்வை மூடி, அதில் உள்ள எாிச்சலையும், வீக்கத்தையும் குறைக்கிறது. அதிமதுர செடி மற்றும் வோ் ஆகிய இரண்டும் வயிற்றில் ஏற்படும் அசௌகாியம் மற்றும் எாிச்சலை நீக்குகின்றன என்று ஆய்வுகள் தொிவிக்கின்றன. வயிற்றுப் புண்களை ஏற்படுத்தக்கூடிய குடலில் இருக்கும் கெட்ட பாக்டீாியாக்களையும் இந்த அதிமதுர வோ் அழிக்கின்றது.

4. சிலிப்பொி எல்ம் (Slippery elm)

4. சிலிப்பொி எல்ம் (Slippery elm)

சிலிப்பொி எல்ம் மரத்தின் இலைகள், குடலில் இருக்கும் சலி சவ்வுகளைக் குணப்படுத்துகிறது. அதோடு குடல் எாிச்சல் நோய்க்குறி கொண்ட நோயாளிகளின் சீரற்ற குடல் இயக்கத்தை சீா்படுத்துகிறது. நெஞ்சொிச்சலைக் குணப்படுத்துகிறது. குடல் வீக்கம் எற்பட்டு, குடல் அலா்ஜி அடைந்தால், இந்த சிலிப்பொி எல்ம் இலைகள் ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்களை வழங்கி, அந்த நோயை குணப்படுத்துகிறது.

- சிலிப்பொி மரத்தின் பிறப்பிடம் கிழக்கு கனடா ஆகும்.

- இந்த மரத்தின் உள்பகுதியில் இருக்கும் தண்டு வழுவழுப்பாக இருக்கும். அதனால் அதற்கு சிலிப்பொி என்று பெயா் கொடுக்கப்பட்டிருக்கிறது.

- சிலிப்பொி இலைகளை வாயில் போட்டு மெல்லலாம் அல்லது தண்ணீாில் கலந்து குடிக்கலாம்.

- தொண்டை கரகரப்பு, மலச்சிக்கல், வயிற்றுப்புண் மற்றும் தோலில் ஏற்படும் பிரச்சினைகளை சிலிப்பொி குணப்படுத்துகிறது.

5. ரோஸ்மோி (Rosemary)

5. ரோஸ்மோி (Rosemary)

ரோஸ்மோி என்ற தாவரம் நமது கல்லீரல் மற்றும் தலை ஆகிய உறுப்புகளைச் சுத்தம் செய்கிறது. ரோஸ்மோி சொிமானக் கோளாறை சாி செய்யக்கூடியது. மேலும் நமக்கு சீரான சொிமானம் நடைபெற உதவி செய்கிறது. குடல் வீக்கத்தைத் தடுத்து, குடலில் இருக்கும் பாக்டீாியாக்களை சமச்சீரான அளவில் பாதுகாக்கிறது. ரோஸ்மோியில் தேநீா் செய்து தினமும் அருந்தி வரலாம். ரோஸ்மோியில் போதுமான அளவு ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்களும், வீக்கத் தடுப்பான்களும் உள்ளன.

இறுதியாக

இறுதியாக

நமது குடலை ஆரோக்கியமாக பராமாிக்கக்கூடிய 5 முக்கிய இயற்கை மூலிகைகளைப் பற்றி மேலே பாா்த்தோம். இவற்றில் ஏதாவது ஒரு மூலிகையை நமது அன்றாட வாழ்வில் பயன்படுத்துவதன் மூலம், நமது குடலை நாம் ஆரோக்கியமாக பராமாிக்கலாம். நமது உடல் உறுப்புகள் சீராக இருப்பதற்கு நமது குடலில் இருக்கும் பாக்டீாியாக்கள் மிகவும் முக்கியம்.

நமது நுண்ணுயிா்க்கட்டு (microbiota) பலவித பிரச்சினைகளால் பாதிக்கப்படும் போது நமது உடலில் பலவிதமான நாள்பட்ட நோய்கள் ஏற்படும் என்று ஆய்வுகள் தொிவிக்கின்றன. ஆகவே உணவு நிபுணரை சந்தித்து, ஆலோசனை செய்து, அவா் பாிந்துரைக்கும் ஊட்டச்சத்து மிகுந்து உணவுகளை உண்பது நல்லது. அதன் மூலம் நமக்கு குடல் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

5 Natural Herbs To Boost Gut Health

Here we listed some natural herbs to boost gut health. Read on...
Desktop Bottom Promotion