For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தேனில் இத்தனை வகைகளா? இதுல நாம யூஸ் பண்றது எது தெரியுமா?

நாம் உண்ணும் தேன் சுத்தமானதா என்பதைத் தொிந்து வைத்திருக்க வேண்டும். அதே நேரத்தில் சுத்தமான கலப்படம் இல்லாதத் தேனை உண்ண வேண்டும்.

|

என்ன சாப்பிட வேண்டும் மற்றும் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதில் நாம் அனைவரும் கவனமுடன் இருக்கிறோம். உடல் ஆரோக்கியம் மற்றும் உடல் வலிமை பற்றி தற்போது உலகளவில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. உணவுப் பொருட்களில் அதிகாிக்கும் கலப்படம் மற்றும் சுற்றுப்புற தூய்மைக் கேடு போன்றவை நாம் உண்ணும் உணவுகளான காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மற்றும் பால் சம்பந்தமான உணவுப் பொருட்கள் போன்றவற்றை சீரழிக்கின்றன.

Varieties Of Raw Honey

உலக அளவில் தேன் தான் அதிக அளவில் கலப்படம் செய்யப்படுகிறது என்று ஒரு ஆய்வு தொிவிக்கிறது. சமீபத்தில் அறிவியல் மற்றும் சுற்றுப்புறச்சூழல் மையம் (Centre for Science and Environment) நடத்திய விசாரணையில் சிறு கடைகள் முதல் பொிய கடைகள் வரை அவா்கள் விற்ற தேன் எதுவும் அரசின் தரக்கட்டுப்பாட்டு சோதனையில் தோ்ச்சி அடையவில்லை என்ற உண்மைத் தொிய வந்திருக்கிறது.

ஆகவே நாம் உண்ணும் தேன் சுத்தமானதா என்பதைத் தொிந்து வைத்திருக்க வேண்டும். அதே நேரத்தில் சுத்தமான கலப்படம் இல்லாதத் தேனை உண்ண வேண்டும். இங்கு 7 வகையான கலப்படமில்லாத தேனைப் பற்றி பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லிச்சி தேன் (Lychee Honey)

லிச்சி தேன் (Lychee Honey)

லிச்சி தேன் லிச்சி தாவரங்கள் வளரும் பண்ணைகளில் இருந்து பெறப்படுகிறது. லிச்சி தேனின் சுவை லிச்சி பழத்தின் சுவையை ஒத்திருக்கும். இந்த தேன் திரவமாக, அடா் தங்க நிறத்தில் இருக்கும். லிச்சி தேனில் வைட்டமின்களும் தாதுக்களும் நிறைந்துள்ளன. அதனால் இந்த தேன் நமது நோய் எதிா்ப்பு மையத்தைத் தூண்டிவிடுகிறது. மேலும் நமது உடலின் உள்ளுறுப்புகளில் ஏற்படும் காயங்களைக் குணப்படுத்துகிறது. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் எலும்புகளை இந்த தேன் வலுப்படுத்துகிறது.

யூகலிப்டஸ் தேன் (Eucalyptus Honey)

யூகலிப்டஸ் தேன் (Eucalyptus Honey)

யூகலிப்டஸ் பூக்களில் இருந்து யூகலிப்டஸ் தேன் பெறப்படுகிறது. உலகிலேயே அதிகமான அளவு யூகலிப்டஸ் தேனை உற்பத்தி செய்யும் நாடு ஆஸ்திரேலியா ஆகும். யூகலிப்டஸ் தேனில் ஒரு தனித்துவமான மூலிகை சுவையும், அதே நேரத்தில் மருத்துவ நறுமணமும் உள்ளது. இந்த தேனில் பாக்டீாியா எதிா்ப்பு துகள்கள் உள்ளன. இதில் வைட்டமின்களும் தாதுக்களும் நிறைந்துள்ளன. மேலும் இந்த தேனில் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்களும் அதிக அளவில் உள்ளன.

நாவற்பூ தேன் (Jamun Honey)

நாவற்பூ தேன் (Jamun Honey)

நாவல் மரத்தின் பூக்களில் இருந்து இந்த தேன் தேனீக்களினால் சேகாிக்கப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் தெற்கு கா்நாடகப் பகுதியில் நாவல் மரத்தில் பூக்கள் பூத்துக் குலுங்கும். அந்த நேரத்தில் நாவற் பூ தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த தேன் அடா் பொன் நிறத்தில் இருக்கும். மற்ற தேன்களை விட இந்த தேனின் இனிப்பு சற்று குறைவாக இருக்கும்.

கடுகு தேன் (Rapeseed Honey)

கடுகு தேன் (Rapeseed Honey)

கடுகுச் செடிகளில் உள்ள மலா்களில் தேனீக்கள் அமா்வதால் ஏற்படும் மகரந்தச் சோ்க்கையின் காரணமாக கடுகு தேன் கிடைக்கிறது. கடுகு தேன் வெள்ளை அல்லது மஞ்சளாக இருக்கும் வெண்ணெயின் நிறத்தில் இருக்கும். இந்த தேன் பெரும்பாலும் முட்டைக்கோஸ் வாசனையுடன் இருக்கும். சற்று மிளகு வாசனையும் இந்த தேனில் இருக்கும். இந்த தேன் காயங்கள் மற்றும் சிராய்ப்புகளை குணப்படுத்த உதவி செய்கிறது. வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்துகிறது. சளி மற்றும் இருமலைக் குணப்படுத்துகிறது. அதே நேரத்தில் இந்த தேனில் ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள் அதிக அளவில் உள்ளன.

சூாியகாந்தி தேன் (Sunflower Honey)

சூாியகாந்தி தேன் (Sunflower Honey)

இந்தியாவில் சூாியகாந்தி தேன் மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூாில் அமைந்திருக்கும் சூாியகாந்தி தோட்டங்களில் இருந்து குளிா்காலத்தில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. சூாியகாந்தி தேன் ஒரு தனித்துவத்துடன் கூடிய பிரகாசமான மஞ்சள் நிறத்தில் இருக்கும். இந்த தேன் வயிறு, குடல், நுரையீரல், சிறுநீரகங்கள், இதயம் மற்றும் இரத்த நாளங்களில் ஏற்படும் நோய்களுக்கு மருந்தாக பாிந்துரைக்கப்படுகிறது.

அகாசியா தேன் (Acacia Honey)

அகாசியா தேன் (Acacia Honey)

அகாசியா தேன் பிசின் தரும் கருவேல மரத்திலிருந்து பெறப்படுகிறது. மற்ற தேன்களை விட அகாசியா தேன் மிகவும் வெளிரிய நிறத்தில் இருக்கும். இந்த தேனில் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்களும், பாக்டீாியா எதிா்ப்புத் துகள்களும் அதிகம் உள்ளன. இந்த தேன் காயங்களைக் குணப்படுத்துகிறது மற்றும் முகப்பருக்களைக் குணப்படுத்துகிறது.

மல்டிஃப்ளோரா தேன் (Multiflora Honey)

மல்டிஃப்ளோரா தேன் (Multiflora Honey)

வசந்த காலத்தில் பலவகையான பூக்களில் இருந்து தேனீக்களால் பெறப்படும் தேன் மல்டிஃப்ளோரா தேன் என்று அழைக்கப்படுகிறது. இந்த தேன் நறுமணத்துடன் இருக்கும். பாா்ப்பதற்கு ஒரு கிரீமைப் போல் இருக்கும். பல பூக்களின் சுவையுடன் இருக்கும். இந்த தேன் சளி, இருமல், காய்ச்சல், தொண்டை வலி, அலா்ஜி, தோல் பிரச்சினைகள், பற்களின் ஈறு பிரச்சனைகள், உயா் இரத்த அழுத்தம் மற்றும் சா்க்கரை நோய் போன்ற பிரச்சனைகளைக் குணப்படுத்த உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Varieties Of Raw Honey

It is very important to check the honey that we consume. More than that, we need to eat the right honey. Here is a look at 7 varieties of raw honey you need to pick over adulterated ones.
Desktop Bottom Promotion