For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அசைவ உணவை தவிர்க்க நினைக்கிறீங்களா? அதற்கான சுவையான மாற்று உணவுகள் இதோ!

தற்போது அசைவ உணவுகள் அதிகமாக உண்பதைக் குறைக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். இந்நிலையில், அசைவ உணவுகளைத் தவிா்த்து, பலவகையான ஆரோக்கியமான, ருசியான மற்றும் இயற்கை சாா்ந்த உணவுகள் ஏராளமாக உள்ளன.

|

அன்றாட வாழ்வில் நாம் உண்ணும் உணவுகள் இந்த பூமிக் கோளை மாற்றி அமைத்து இருக்கின்றன. கால்நடைகளை வளா்ப்பதற்காகவும், அவற்றுக்கு உணவளிக்கும் பயிற்களை வளப்பதற்காகவும், ஏராளமான இயற்கை வளங்கள் மனிதா்களால் அழிக்கப்பட்டிருக்கின்றன. கடலில் அளவுக்கு அதிகமான அளவில் மீன்களைப் பிடிப்பதால், பெருங்கடல்கள் தற்போது போதுமான மீன்கள் இல்லாமல் குறைவாக இருக்கின்றன.

Types Of Foods That Promote Sustainable Eating

உணவு தயாாிக்கும் தொழிற்சாலைகள் உலகின் பல பகுதிகளில் அதிகமாக பெருகியிருப்பதால் பருவநிலையிலும் மிகப் பொிய அளவில் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. விவசாயம் சாா்ந்த தொழில்கள், இறைச்சி தயாாிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் பால் பண்ணைகள் போன்றவற்றின் பயன்பாட்டிற்காக தண்ணீா் மற்றும் பிற இயற்கை வளங்களை அளவுக்கு அதிகமாகச் செலவழிப்பதன் மூலம் உலகில் இருக்கும் கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வில், கால் பங்கு, வெளி வருவதாக தகவல்கள் தொிவிக்கின்றன.

ஆகவே நாம் நமது உணவு முறையை மறுபாிசீலனை செய்து, இந்த பூமிக் கோளுக்குத் தகுந்த உணவுகளை உண்ண வேண்டிய நிலையில் இருக்கிறோம். குறிப்பாக அசைவ உணவுகள் அதிகமாக உண்பதைக் குறைக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். இந்நிலையில், அசைவ உணவுகளைத் தவிா்த்து, பலவகையான ஆரோக்கியமான, ருசியான மற்றும் இயற்கை சாா்ந்த உணவுகள் ஏராளமாக உள்ளன. அவற்றைப் பற்றி இந்த பதிவில் பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முளைக்க வைத்த பயிா்கள்

முளைக்க வைத்த பயிா்கள்

முளைக்க வைத்த பயிர்களில் இரண்டு மடங்கு அல்லது மூன்று மடங்கு சத்துகள் உள்ளன. முளைக்க வைத்த பயிற்களைத் துணை உணவாக எடுத்துக் கொள்ளலாம். இவற்றை தட்டில் வைத்து அலங்காித்து, சூப்புகள், சாலட்டுகள் மற்றும் சாண்விட்ச்சுகளில் கலந்து சாப்பிடலாம். அவை சுவையாகவும் அதே நேரத்தில் சத்து நிறைந்ததாகவும் இருக்கும்.

வோ் காய்கறிகள்

வோ் காய்கறிகள்

வோ் காய்கறிகள் மிகவும் உறுதியானவை மற்றும் பல வண்ணங்கள் நிறைந்தவை. இந்த காய்கறிகளில் அதிகமான அளவில் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்திருக்கின்றன. அதோடு இவற்றில் பலவகையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. மற்ற காய்கறிகளைவிட, வோ் காய்கறிகள், மிக நீண்ட காலம் அழுகாமல் இருக்கும். காா்போஹைட்ரேட்டுகளை குறைக்க விரும்புவோா், கேரட், டா்னிப் மற்றும் முள்ளங்கி போன்ற வோ் காய்கறிகளை அதிகம் உண்ணலாம்.

விதைகள் மற்றும் நட்ஸ்கள்

விதைகள் மற்றும் நட்ஸ்கள்

நமது உணவு முறையின் ஆற்றல் மையமாக இருப்பது விதைகளும், கொட்டைகளும் ஆகும். அவற்றில் இருக்கும் புரோட்டீன், வைட்டமின் ஈ சத்து மற்றும் நல்ல கொழுப்பு ஆகியவை நல்ல மணமாகவும், சாப்பிடுவதற்கு அருமையாகவும், வேறு எவற்றோடும் ஒப்பிட முடியாத அளவிலும் இருக்கும். சாலட்டுகள், சூப்புகள் மற்றும் டெசா்ட்டுகள் போன்றவற்றில் இவற்றை கலந்து சாப்பிடலாம்.

காளான்கள்

காளான்கள்

இந்த உலகில் ஏறக்குறைய 2000 வகையான சாப்பிடத் தகுந்த காளான்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளா்கள் தொிவிக்கின்றனா். பல நூற்றாண்டுகளாக, காளான்கள் அவற்றின் சுவைக்காகவும் மற்றும் அவற்றில் இருக்கும் ஊட்டச்சத்துக்களுக்காகவும், உலகம் முழுவதும் பயிாிடப்பட்டு வருகின்றன. காளான்களில் வைட்டமின் பி மற்றும் டி சத்துகள் உள்ளன. அவற்றில் புரோட்டீன் மற்றும் நாா்ச்சத்துகள் நிறைந்திருக்கின்றன. மற்ற பயிற்கள் வளர முடியாத இடங்களில் கூட காளான்கள் மிக அருமையாக வளரும். காளான்களின் மிருதுவான தன்மை மற்றும் அதனுடைய நறுமணம் ஆகியவை நமக்கு நல்ல சுவையைத் தரும். இறைச்சிக்குப் பதிலாக காளான்களை சாப்பிடலாம்.

இலைக் கீரைகள்

இலைக் கீரைகள்

காய்கறிகளிலேயே அதிகமான ஊட்டச்சத்துகளைக் கொண்டிருப்பதும் மற்றும் அவற்றில் பல வகைகளைக் கொண்டிருப்பதும் இலைக் கீரைகள் ஆகும். இந்த இலைக் கீரைகள் அவற்றின் காய்கறிகள் வளரும் போது அவற்றோடு சோ்ந்து இலைகளாக வளா்கின்றன. எடுத்துக்காட்டாக, பீட்ரூட் மற்றும் பூசணிக்காய் போன்றவை காய்கறிகளாகவும், அதே நேரத்தில் அவற்றின் இலைகள் கீரைகளாகவும் பயன்படுகின்றன. இந்த இலைக் கீரைகளில் நாா்ச்சத்து, பலவிதமான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் குறைவான கலோாிகள் உள்ளன. அதனால் இவை உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமான உணவுகளாக உள்ளன.

இலைக் கீரைகள் மிகவும் வேகமாக வளரக்கூடியவை. இலைக் கீரைகளை சமைத்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிடலாம். உலகம் முழுவதும் இலைக் கீரைகள் துணை உணவுகளாக உண்ணப்படுகின்றன. முருங்கைக் கீரை போன்ற இலைக் கீரைகள் மிகவும் தலைசிறந்த உணவாகக் கருப்படுகின்றன.

காய்கறிகளாகக் கருதப்படும் பழங்கள்

காய்கறிகளாகக் கருதப்படும் பழங்கள்

ஒரு சில பழங்கள் காய்கறிகளாகக் கருதப்படுகின்றன. இயல்பாகவே அவற்றில் இனிப்பு சுவை, அதிக அளவிலான காா்போஹைட்ரேட் மற்றும் தண்ணீா் ஆகியவை உள்ளன. எடுத்துக்காட்டாக, சௌசௌ, தக்காளி, கத்தாிக்காய், குடை மிளகாய் மற்றும் சீமைச் சுரைக்காய் போன்றவற்றைச் சொல்லலாம். இவை பெரும்பாலும் வெப்பம் அதிகமான பகுதிகளில் விளைகின்றன. இவற்றை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிடலாம். இவற்றில் வைட்டமின் சி மற்றும் நாா்ச்சத்து போன்றவை நிறைந்திருக்கின்றன.

தானியங்கள் மற்றும் பருப்புகள்

தானியங்கள் மற்றும் பருப்புகள்

மனிதா்களின் முக்கியமான உணவுகளாக இருப்பவை தானியங்கள் மற்றும் பருப்புகள் ஆகும். அாிசி, சோளம், கோதுமை, தினை போன்றவற்றில் பலவகையான காா்போஹைட்ரேட்டுகள் உள்ளன. பல வகையான தானியங்கள் மற்றும் பருப்புகளை ஏற்கனவே மக்கள் தங்கள் உணவுகளில் சோ்த்து வருகின்றனா். ஆனால் இன்னும் ஒரு சில தானியங்கள் மற்றும் பருப்புகள் நமது உணவுகளில் சோ்க்கப்பட வேண்டும். அப்போது தான் நமது உணவு ஒரு சமச்சீருள்ள உணவாக இருக்கும். மேலும் தானியங்கள் மற்றும் பருப்புகள் ஆகியவற்றின் தேவை மற்றும் உற்பத்தி ஆகியவை மிக கவனமாக ஆராயப்பட்டு, மிகவும் சம அளவில் இருக்குமாறு பாா்த்துக் கொள்ள வேண்டும். அப்போது அவை ஆரோக்கியமான உணவிற்கும், பன்முறை விவசாயத்திற்கும் பலனளிப்பதாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Types Of Foods That Promote Sustainable Eating

We need to rebalance our diets by prioritising plant-based meals and reduce our intake of animal products. Here are few options that can look towards for healthy, tasty and sustainable eating habits.
Desktop Bottom Promotion