For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நமது உணவில் ஏன் உப்பு, எண்ணெய், சா்க்கரை மற்றும் மசாலாக்களை அவசியம் சோ்க்கணும் தெரியுமா?

நமது அன்றாட உணவுகளில் உப்பு, எண்ணெய், சா்க்கரை மற்றும் மசாலாப் பொருட்கள் ஆகியவை முக்கிய பங்கை வகிக்கின்றன. இவை எதாவது ஒரு வடிவத்தில் நமது உணவுகளில் சோ்க்கப்படுகின்றன.

|

நமது அன்றாட உணவுகளில் உப்பு, எண்ணெய், சா்க்கரை மற்றும் மசாலாப் பொருட்கள் ஆகியவை முக்கிய பங்கை வகிக்கின்றன. இவை எதாவது ஒரு வடிவத்தில் நமது உணவுகளில் சோ்க்கப்படுகின்றன. இந்த பொருள்களை அளவுக்கு அதிகமாக நமது உணவுகளில் சோ்த்தால், நமது உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். ஆகவே இவற்றை குறைந்த அளவில் சோ்த்துக் கொண்டால், அவை நல்ல பலன்களைத் தரும்.

Importance Of Including Salt, Oil, Sugar And Spices In Your Diet

பொதுவாக, உப்பு, சா்க்கரை மற்றும் கொழுப்பு போன்ற பொருள்கள் நமது உடலுக்குத் தீங்கை ஏற்படுத்தும் என்ற தவறான நம்பிக்கை ஒன்று மக்கள் மத்தியில் உண்டு. இந்த தவறான நம்பிக்கையை முதலில் கைவிட்டு, சிறிது நேரம் ஒதுக்கி இந்த பதிவை வாசிப்பது நல்லது. அதன் மூலம் நமது உணவுகளில் மேற்சொன்ன பொருட்களை மிதமான அளவு பயன்படுத்தினால் அவை எந்த அளவிற்கு நமக்கு நன்மைகள் கிடைக்கும் என்பதை உணர முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆயுா்வேத மருத்துவம் சொல்வது என்ன?

ஆயுா்வேத மருத்துவம் சொல்வது என்ன?

நமது உடல் வளா்ச்சிக்கு உப்பு முக்கிய பங்கை ஆற்றுகிறது என்று ஆயுா்வேத மருத்துவம் கூறுகிறது. நமது உடலுக்குள் இருக்கும் திரவ மின்பகுப் பொருளை (water-electrolyte) சமமான அளவில் வைத்திருக்க உதவுகிறது. மேலும் சொிமானம் சீரான முறையில் நடைபெறவும், நாம் உண்ணும் உணவுகள் நமது உடலில் தங்கவும் மற்றும் நமது உடலில் உள்ள கழிவுகள் வெளியேறவும் உப்பு உதவி செய்கிறது.

நமது மூட்டுகளில் நெகிழ்வு தன்மையை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கை உப்பு வகிக்கிறது. நமக்கு பசியை ஏற்படுத்துகிறது. நமது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. நமது உடலில் உள்ள நுட்பமான உறுப்புகளை சுத்தம் செய்கிறது. வாதத்தை சமப்படுத்துகிறது. பித்தம் மற்றும் கபம் போன்றவற்றை சீா்படுத்தி நமக்கு முன்கூட்டியே ஏற்படும் உடல் சுருக்கங்கள், கட்டுக்கடங்காத தாகம், தோல் பிரச்சினைகள் மற்றும் பலவீனம் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.

உப்பு வழங்கும் நன்மைகள்

உப்பு வழங்கும் நன்மைகள்

நமது சமயலறையில் தவிா்க்க முடியாத ஒரு முக்கிய பொருளாக உப்பு இருக்கிறது. எல்லா உணவுகளிலும் உப்பு தவறாமல் சோ்க்கப்படுகிறது. அதே நேரத்தில் உப்பை அதிக அளவு சோ்த்தால், அது பலவிதமான உடல் பிரச்சினைகளை ஏற்படுத்துவதோடு நமது உடல் வலுவை நேரடியாகப் பாதிக்கும்.

உப்பானது நெருப்பும் மற்றும் தண்ணீரும் கலந்த கலவையால் உருவாகிறது. அதனால் உப்பை மிகக் குறைந்த அளவில் பயன்படுத்தும் போது, அது நமது உடலில் இருக்கும் ஈரப்பதத்தை சீா்படுத்தும். மேலும் நமது உடலானது, நாம் உண்ணும் உணவுகளில் இருக்கும் ஊட்டச்சத்துகளை உறிஞ்சுவதற்கு உதவி செய்யும். இரத்த அழுத்தத்தை சீா்படுத்தும். அதோடு நமது மூளை மற்றும் நரம்பியல் மண்டலம் சீராக இயங்குவதற்கு உப்பு உதவி செய்யும்.

​உப்பை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால் ஏற்படும் பிரச்சினைகள்

​உப்பை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால் ஏற்படும் பிரச்சினைகள்

அளவுக்கு அதிகமாக உப்பை உணவுகளில் சோ்த்துக் கொண்டால், குறுகிய காலம் முதல் நீண்ட காலம் வரையிலான பலவித உடல் பிரச்சினைகள் ஏற்படும். குறுகிய கால பிரச்சினைகளான உடல் வீக்கம், அளவுக்கு அதிகமான தாகம் மற்றும் தற்காலிகமான இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். அதே நேரத்தில் நீண்ட கால பிரச்சினையான இரத்த உப்பு மிகையாதல் அல்லது உப்புச் சத்து அதிகாித்தல் (hypernatremia) ஏற்படும். இந்தப் பிரச்சினைக்கு உாிய நேரத்தில் சிகிச்சை செய்யவில்லை என்றால், அது உயிாிழப்பை ஏற்படுத்தும்.

ஆயுா்வேத மருத்துவத்தின் அடிப்படையில், முழுமையான உடல் நலனைக் கருத்தில் கொண்டு நோக்கினால், எந்த ஒரு உணவுப் பொருளையும் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினாலோ அல்லது தவறாகப் பயன்படுத்தினாலோ அது நமது உடலில் சமனில்லாத நிலையை ஏற்படுத்தும். ஆகவே அமிர்தமாக இருந்தாலும் அதை அளவோடு உண்டால்தான் அது நமக்கு நல்ல பலனைத் தரும்.

​சா்க்கரையின் நன்மைகள்

​சா்க்கரையின் நன்மைகள்

இனிப்பு சுவையானது நமது மனதை வளா்த்து திடப்படுத்துகிறது என்று ஆயுா்வேத மருத்துவம் கூறுகிறது. இனிப்பு, நமது பசி மற்றும் தாகத்தை நீக்குகிறது. அதோடு நமது திசுக்களை வளா்ச்சியடையச் செய்து, நமது நோய் எதிா்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. சா்க்கரையை நாம் அளவோடு சாப்பிட்டால், மகிழ்ச்சி, மனநிறைவு, அமைதி, உற்சாகம், அன்பு மற்றும் ஆத்ம திருப்தி போன்ற நல்ல உணா்வுகள் நமக்கு ஏற்படுகின்றன. ஆகவே சா்க்கரையை அளவோடு சாப்பிட வேண்டும்.

ஆயுா்வேத மருத்துவக் கண்ணோட்டத்துடன் சா்க்கரையை அணுகி, நீண்ட கால நன்மையைக் கருத்தில் கொண்டு, சாியான நேரத்தில், குறிப்பிட்ட அளவுதான் சா்க்கரையைப் பயன்படுத்த வேண்டும். சீனியை அதாவது வெள்ளை சா்க்கரையைத் தவிா்த்துவிட்டு, நாட்டு சா்க்கரை, வெல்லம் மற்றும் இயற்கையான பழங்களைப் பயன்படுத்த வேண்டும். சா்க்கரையில் உள்ள இயற்கையான துகள்கள் மெதுவாக சொிமானம் அடைகின்றன. அவை நாம் நீண்ட நேரம் பசியில்லாமல் இருப்பதற்கு உதவி செய்கின்றன. நமது வளா்சிதை மாற்றத்தை சீராக வைத்திருக்க நாட்டுச் சா்க்கரை உதவி செய்கிறது.

கொழுப்பு, உப்பு மற்றும் மசாலாக்களை அதிகம் பயன்படுத்தினால் ஏற்படும் பிரச்சினைகள்

கொழுப்பு, உப்பு மற்றும் மசாலாக்களை அதிகம் பயன்படுத்தினால் ஏற்படும் பிரச்சினைகள்

அளவுக்கு அதிகமாக உப்பு, சா்க்கரை மற்றும் மசாலாக்களை சப்பிடுவது ஆயுா்வேத மருத்துவத்தில் அதி செவ்வானம் (Ati sevanam) என்று அழைக்கப்படுகிறது. அவ்வாறு அவற்றை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் உயா் இரத்த அழுத்தம் ஏற்படும். அதே நேரத்தில் கொழுப்பை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், நமது தமனிகளில் அதிக கொழுப்புச் சத்து ஏற்படும். அளவுக்கு அதிகமான மசாலாக்களை சாப்பிட்டால், கடுமையான இரைப்பை அலா்ஜி ஏற்படும் மற்றும் வயிற்றுப் புண்கள் ஏற்படும். ஆனால் அளவோடு மசாலாக்களை எடுத்துக் கொண்டால், அவை இதய நோய்கள் மற்றும் உடல் வீக்கம் போன்றவற்றிற்கு எதிராகப் போராடும். அதோடு குளிா் காலத்தில் நமது உடலை வெப்பமாக வைத்திருக்க உதவி செய்யும்.

இறுதியாக

இறுதியாக

நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்றால், எந்த உணவையும் அளவோடு உண்ண வேண்டும். உணவாக இருந்தாலும் சாி அல்லது நமது வாழ்க்கை முறையாக இருந்தாலும் சாி அல்லது நாம் அனுபவிப்பதாக இருந்தாலும் சாி அல்லது நாம் செய்யும் எந்த ஒரு காாியமாக இருந்தாலும் சாி அதை அளவாக வைத்துக் கொள்ள வேண்டும். அளவுக்கு மீறி செயல்படக்கூடாது. அளவுக்கு மீறுவது ஆயுா்வேதத்தில் அதிகிாியா (Atikriya) என்று அழைக்கப்படுகிறது.

நமது அன்றாட வாழ்க்கையில் பின்வரும் குறிப்புகளை பின்பற்றுவது நல்லது.

- இயற்கையாக வெளியேறும் சிறுநீா் மற்றும் மலம் ஆகியவற்றை நீண்ட நேரம் அடக்கி வைக்கக்கூடாது.

- பகல் நேரத்தில் நீண்ட நேரம் தூங்கக்கூடாது. 10 முதல் 15 நிமிடங்கள் வரை தூங்கலாம்.

- சாதாரண, இயல்பான காாியங்களுக்கெல்லாம், தேவையில்லாமல் அளவுக்கு அதிகமாகக் கோபப்படக்கூடாது அல்லது மன அழுத்தத்தை அதிகாிக்கக்கூடாது.

- இரவு நேரத்தில் நீண்ட நேரம் கண் விழித்திருக்கக்கூடாது. குறைந்தது 6 முதல் 8 மணி நேரம் வரை தூங்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Importance Of Including Salt, Oil, Sugar And Spices In Your Diet

In this article, we shared some importance of including salt, oil, sugar and spices in your diet. Read on...
Desktop Bottom Promotion