For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இனிமே மலச்சிக்கல் பிரச்சனையே வரக்கூடாதா? அப்ப இந்த உணவுகளை கொஞ்சம் அதிகமா சாப்பிடுங்க...

சரியான உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஒருவரது செரிமானம் சரியாக நடைபெற்றால், உடல் சரியாக வேலை செய்யும்.

|

நாம் உண்ணும் உணவுகளை செரிமான மண்டலம் தான் உடைக்கிறது. எனவே இது உடலின் செயல்பாட்டிற்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் தேவையில்லாத சேதத்தை தவிர்க்க நினைத்தால், சரியான உணவுகளைத் தேர்ந்தேடுத்து உட்கொள்ள வேண்டும். நாம் அனைவரும் வாழ்நாளில் ஒருமுறையாவது வாய்வு தொல்லை, வயிற்று உப்புசம், வயிற்றுப் போக்கு, வாந்தி மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றை அனுபவித்திருப்போம். இந்த அறிகுறிகள் அடிக்கடி ஏற்பட்டால், உடலில் பெரும் சேதம் ஏற்படலாம். ஆகவே செரிமான பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்க வேண்டுமானால், உண்ணும் உணவு மற்றும் வாழ்க்கை முறையில் மிகுந்த கவனத்தை செலுத்த வேண்டும்.

Foods That Will Aid Your Digestion Process

சரியான உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஒருவரது செரிமானம் சரியாக நடைபெற்றால், உடல் சரியாக வேலை செய்யும். நிறைய தண்ணீர் குடிப்பது, மன அழுத்தத்தை நிர்வகிப்பது, நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் உணவுகளை உண்பது, உடற்பயிற்சி செய்வது மற்றும் புகை, மது பழக்கங்களை கைவிடுவது போன்றவை ஒருவரது ஆரோக்கியமான செரிமான செயல்பாட்டிற்கு உதவும். அதோடு கீழே கொடுக்கப்பட்டுள்ள சில உணவுகளை தினமும் சாப்பிட்டு வந்தாலோ அல்லது அடிக்கடி உணவில் சேர்த்து வந்தாலோ, செரிமானம் சீராக செயல்பட்டு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனையை சந்திக்க வேண்டிய அவசியமே இருக்காது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முழு தானியங்கள்

முழு தானியங்கள்

முழு தானியங்களில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது மற்றும் இது செரிமான மண்டலத்திற்கு மிகவும் பயனுள்ளதும் கூட. இவை மலச்சிக்கல், நெஞ்செரிச்சல், வாய்வு தொல்லை மற்றும் குமட்டல் போன்ற செரிமான அறிகுறிகளை குணப்படுத்தும். முக்கியமாக முழு தானியங்கள் குடலியக்கத்தை மென்மையாக வைத்துக் கொள்ளும்.

தயிர்

தயிர்

தயிரில் செரிமானத்திற்கு மிகவும் அவசியமான நல்ல பாக்டீரியாக்கள் அதிகம் உள்ன. அன்றாடம் தயிரை ஒரு கப் சாப்பிட்டு வந்தால், செரிமான மண்டலத்தின் செயல்பாடு சிறப்பாக இருக்கும் மற்றும் எவ்வித செரிமான பிரச்சனையும் இருக்காது.

இஞ்சி

இஞ்சி

பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுக்கு பிரபலமான மருத்துவ குணம் அதிகம் நிறைந்த பொருள் தான் இஞ்சி. இஞ்சியை ஒருவர் தினமும் ஒரு துண்டு பச்சையாக சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும். இஞ்சியில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், செரிமானத்திற்கு மிகவும் நல்லது.

வாழைப்பழம்

வாழைப்பழம்

வாழைப்பழம் இரைப்பை நோய்கள் மற்றும் செரிமான பிரச்சனைகளை சரிசெய்யக்கூடிய அற்புதமான பழம். இது மென்மையான குடல் இயக்கத்திற்கு உதவி புரிகிறது. நீங்கள் தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், செரிமான அமைப்பு சரியாக செயல்படும்.

பப்பாளி

பப்பாளி

பப்பாளியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், வயிற்று உப்புசத்தை சரிசெய்யக்கூடியது. மேலும் இந்த பழம் உண்ணும் உணவை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது. செரிமானத்தை எளிதாக்குகிறது மற்றும் நெஞ்செரிச்சல், வாய்வு தொல்லை போன்ற அறிகுறிகளை குணப்படுத்துகிறது.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து மட்டுமின்றி, நார்ச்சத்தும் அதிகமாக உள்ளதால், இது செரிமான மண்டலத்திற்கு மிகவும் நல்லது. இது வயிற்றை குளிர்ச்சியுடன் வைத்திருக்கிறது மற்றும் செரிமான அறிகுறிகளிடம் இருந்து நிவாரணத்தை வழங்குகிறது.

தக்காளி

தக்காளி

தக்காளி வயிற்றின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் உள்ள லைகோபைன் சிறப்பான செரிமான செயல்பாட்டிற்கு உதவுகிறது. மேலும் தக்காளியில் மக்னீசியம், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளதால், அன்றாட உணவில் தக்காளியை சேர்த்து வாருங்கள்.

கிவி

கிவி

கிவி பழத்தில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள், செரிமான ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் வைட்டமின் சி, மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் பெப்சின் போன்ற சத்துக்கள் ஏடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிளை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், குடல் செயல்பாடுகள் சிறப்பாகவும் சரியாகவும் நடைபெறும். ஏனெனில் இதில் குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உள்ளன. எனவே ஆப்பிளை தினமும் சாப்பிட்டு, செரிமான செயல்பாட்டை சிறப்பாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

கேரட்

கேரட்

கேரட் செரிமானத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில் இதில் நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை செரிமான ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அதோடு கேரட் கண்களுக்கு மிகவும் நல்லது. எனவே இதை அடிக்கடி உங்கள் உணவில் சேர்க்க முயற்சி செய்யுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods That Will Aid Your Digestion Process

Digestion helps in converting your food into nutrients to use it for growth, repair and energy. A healthy digestive system is important for a healthy body. Here are some foods that will aid your digestive process.
Desktop Bottom Promotion