For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாலுணர்ச்சியைக் குறைத்து செக்ஸ் வாழ்க்கைக்கு 'ஆப்பு' வைக்கும் உணவுகள்!

ஒருவரது ஹார்மோன்கள் சிறப்பாக இருக்க வேண்டுமானால் சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்பதோடு, ஒருசில தவறான உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

|

நமது வாழ்வில் உணவுகள் மிகவும் முக்கிய பங்காற்றுகின்றன. உணவுகள் தான் ஒருவரது உடல் ஆரோக்கியம் சிறப்பாகவும், மோசமாகவும் இருக்க காரணம். ஒருவர் தவறான உணவுகளை உட்கொண்டால், அது ஆரோக்கியத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், பாலுணர்ச்சியையும் குறைக்கும். ஒருவரது பாலியல் வாழ்க்கையானது பாலினத்தில் உள்ள ஹார்மோன்களின் ஆரோக்கியத்தைப் பொறுத்தது. அதில் பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜென் என்னும் ஹார்மோனும், ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் என்னும் ஹார்மோனும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

Foods That Kill Your Libido

இந்த ஹார்மோன்களில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், அது ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிப்பதோடு, பாலுணர்ச்சியையும் குறைக்கும். ஒரு பெண்ணுக்கு முகத்தில் அதிகமாக முடி வளர்வது அல்லது ஒரு ஆணுக்கு மார்பகங்கள் அசிங்கமாக இருப்பது போன்றவை எல்லாம் இந்த ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகளால் தான். ஆகவே ஒருவரது ஹார்மோன்கள் சிறப்பாக இருக்க வேண்டுமானால் சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்பதோடு, ஒருசில தவறான உணவுகளைத் தவிர்க்க வேண்டும். கீழே ஒருவரது பாலியல் வாழ்க்கை அல்லது பாலுணர்ச்சியைப் பாதிக்கும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆல்கஹால்

ஆல்கஹால்

ஒரு டம்ளர் உங்களுக்கு விருப்பமான ஒயின் குடிப்பதால் எவ்வித சேதமும் ஏற்படாது. ஆனால் அளவுக்கு அதிகமாக குடிக்கும் போது, அது சில தீவிரமான சேதத்தை ஏற்படுத்தும். பெரும்பாலான மக்கள் மது அருந்தினால் உடலுறவில் சிறப்பாக செயல்படலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் மது ஒருவரது பாலுணர்ச்சியைத் தான் பாதிக்கும். அளவுக்கு அதிகமாக மது அருந்தும் போது, உறவில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட முடியாமல் போவதோடு, விறைப்புத்தன்மை பிரச்சனையையும் சந்திக்க நேரிடும். மேலும் மது டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியையும் குறைக்கும்.

வறுத்த அல்லது பொரித்த உணவுகள்

வறுத்த அல்லது பொரித்த உணவுகள்

எண்ணெயில் பொரித்த அல்லது வறுத்த உணவுகள் ஆரோக்கியமற்றது என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் இந்த வகை உணவுகள் பாலுணர்ச்சியை பாதிக்கும் என்பது தெரியுமா? ஆம், இந்த உணவுகளை அதிகமாக சாப்பிட்டால், படுக்கையில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட முடியாமல் போகும். மேலும் பொரித்த உணவுகளில் ட்ரான்ஸ் கொழுப்புக்கள் உள்ளதால், இது ஆண்களில் அசாதாரண விந்து உற்பத்தியை அதிகரிக்கும் மற்றும் பெண்களில் கர்ப்பத்தை பாதிக்கிறது.

காபி

காபி

உங்களுக்கு காபி பிடிக்குமா? மிகவும் பிரபலமான காபி, உடலின் ஆற்றலை அதிகரிக்க உதவுவதோடு, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மோசமாக பாதிக்கக்கூடியது. அதுவும் காபியை ஒருவர் அதிகமாக குடித்தால், அதில் உள்ள காப்ஃபைன் பாலியல் வாழ்க்கையை நேரடியாக பாதிக்கும். ஆகவே காபியை அளவுக்கு அதிகமாக குடிப்பதைத் தவிர்த்திடுங்கள்.

கேன் உணவுகள்

கேன் உணவுகள்

கேன்களில் அடைக்கப்பட்ட உணவுகளை அதிகமாக சாப்பிடுவது என்பதை நல்லதல்ல. இதில் உள்ள BPA என்னும் கெமிக்கல் இதய நோய் மற்றும் டைப்-2 சர்க்கரை நோய் போன்ற ஆரோக்கிய பிரச்சனைகளுடன் தொடர்புடையது. அதோடு பல கேன் உணவுகளில் அதிகளவு சோடியம் உள்ளது. உடலில் சோடியம் அதிகமாக இருந்தால், அது உடலுறவின் போது அதிகரித்த இரத்த ஓட்டத்தைப் பொறுத்து உடலின் சில பகுதிகளில் இரத்த ஓட்டத்தைக் குறைக்கும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

மைதா மாவால் தயாரிக்கப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாலியல் ஆரோக்கியத்திற்கு தேவையான அத்தியாவசிய சத்துக்களை வழங்குவதற்கு பதிலாக, உடலில் உள்ள சத்துக்கள் இழக்கச் செய்கின்றன. போதுமான புரோட்டீன் இல்லாத மற்றும் கொழுப்புக்கள் அதிகம் நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக சா சாப்பிடும் போது, அது விறைப்புத்தன்மை பிரச்சனை உள்ளிட்ட பல பாலியல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே உங்களின் பாலியல் வாழ்க்கை ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இருந்து விலகி, ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods That Kill Your Libido

Eating the wrong foods can not only affect your health but cause low libido. Here we listed some foods that kill your libido. Read on...
Desktop Bottom Promotion