For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படக்கூடாதா? அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...

இரத்தக்குழாய் அடைப்பு பிரச்சனை ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், தமனிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஒருசில உணவுகளை அன்றாடம் சாப்பிட்டால், நிச்சயம் இதைத் தவிர்க்கலாம்

|

மனித உடலில் இதயத்தில் இருந்து உடல் முழுவதும் ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தத்தை வெவ்வேறு திசுக்களுக்கு வழங்குவது தமனிகள். இந்த தமனிகளின் உட்புற சுவர்களில் ப்ளேக்குகள் உருவாக ஆரம்பிக்கும் போது, இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. ப்ளேக்குகள் என்பது கொழுப்பு, செல்லுலார் கழிவுகள், கால்சியம் மற்றும் ஃபைப்ரின் ஆகியவற்றால் ஆனது.

Foods That Can Help To Prevent Hardening Of Blood Vessels

தற்போது நிறைய பேருக்கு இதயத்திற்கு செல்லும் தமனியில் அடைப்பு உள்ளது. இந்த பிரச்சனைக்கு அறுவை சிகிச்சைகள் இருந்தாலும், மாத்திரைகளின் மூலமும் சரிசெய்திட முடியும். ஆனால் இன்று ஏராளமான மக்கள் இம்மாதிரியான பிரச்சனையை சந்திப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, மோசமான உணவுப் பழக்கங்கள் போன்றவையும் தான்.

MOST READ: உடம்பில் உள்ள அழுக்கை வெளியேற்றி, தொப்பையைக் குறைக்கும் பப்பாளி டயட் பற்றி தெரியுமா?

ஆனால் இப்பிரச்சனை ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், தமனிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஒருசில உணவுகளை அன்றாடம் சாப்பிட்டால், நிச்சயம் இதைத் தவிர்க்கலாம். இப்போது தமனியில் ஏற்படும் அடைப்பைத் தடுக்க உதவும் சில உணவுகளைக் காண்போம். அவற்றைப் படித்து அன்றாட உணவில் சேர்த்து உங்கள் தமனிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

MOST READ: உங்க அந்தரங்க பகுதி கருப்பா இருக்கா? இதோ வெள்ளையாக்கும் சில எளிய வழிகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
யாருக்கு இதன் அபாயம் அதிகம் உள்ளது?

யாருக்கு இதன் அபாயம் அதிகம் உள்ளது?

யாருடைய உடலில் குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன் (LDL அல்லது கெட்ட கொழுப்பு) அதிகமாகவும், அதிக அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன் (HDL அல்லது நல்ல கொழுப்பு) குறைவாகவும் உள்ளவர்களுக்கு தமனிகளில் அடைப்பு ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. அதோடு உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு தமனிகளில் அடைப்பு ஏற்படுவதற்கான ஆபத்து அதிகம் உள்ளது.

தமனி அடைப்பு எம்மாதிரியான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்?

தமனி அடைப்பு எம்மாதிரியான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்?

தமனி அடைப்புக்கள் கரோனரி தமனி நோய், கரோடிட் தமனி நோய், புற தமனி நோய், மாரடைப்பு மற்றும் பெருமூளை விபத்து என்னும் பக்கவாதம் போன்றவற்றிற்கு வழிவகுக்கும்.

இந்த பிரச்சனைகளைத் தடுக்க வேண்டுமானால், தமனிகளில் அடைப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம். ஆனால் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதும், ஆரோக்கியமான உணவுகளை உண்பதும் தமனிகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான சிறந்த வழியாகும். இப்போது தமனிகளை ஆரோக்கியமாக பராமரிக்க உதவும் சில உணவுகளைக் காண்போம்.

பூண்டு

பூண்டு

ஒருவர் அன்றாடம் பூண்டு சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறையும் மற்றும் தமனிகளின் ஆரோக்கியம் மேம்படும். ஆய்வு ஒன்றில் அன்றாட உணவில் பூண்டு சேர்த்தால், முதுமையில் இதய ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என தெரிய வந்துள்ளது. எனவே தினமும் பூண்டு சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

மாதுளை

மாதுளை

மாதுளையில் வைட்டமின் சி மற்றும் பாலிஃபீனால்கள் போன்ற சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இது நைட்ரிக் ஆக்ஸைடு உற்பத்தியைத் தூண்ட உதவி புரிந்து, இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் மற்றும் தமனிகளில் ப்ளேக் உருவாக்கத்தின் அபாயத்தையும் குறைக்கும். ஆகவே அடிக்கடி மாதுளையை சாப்பிடுங்கள்.

சால்மன் மீன்

சால்மன் மீன்

சால்மன் மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது. இது நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க உதவுகிறது, இரத்த நாளங்களில் வீக்கத்தைக் குறைக்கிறது மற்றும் தமனிகளில் இரத்த உறைவைக் குறைக்கிறது. மேலும் அடிக்கடி சால்மன் மீனை சாப்பிட்டால், இரத்த அழுத்தமும் குறையும்.

மஞ்சள்

மஞ்சள்

மஞ்சளில் உள்ள குர்குமின் என்னும் பொருள், தமனிகளில் கொழுப்பு படிவதைத் குறைக்க உதவுவதோடு, வீக்கத்தைக் குறைக்கும் மற்றும் தமனிகள் தடிமனாவதைத் தடுக்கும். அதோடு மஞ்சளில் இருக்கும் வைட்டமின் பி6 ஹோமோசிஸ்டைன் அளவை சீராக்க உதவி புரிந்து, ப்ளேக்குகளின் உருவாக்கத்தைத் தடுத்து, இரத்த நாளங்கள் சேதமடைவதைத் தடுக்கிறது. மேலும் மஞ்சள் கொழுப்பு ஆக்ஸிஜனேற்றம் மற்றும் கெட்ட கொழுப்புக்களின் அளவைக் குறைக்க உதவுகிறது. எனவே தமனிகள் ஆரோக்கியமாக இருக்க தினமும் ஒரு டம்ளர் மஞ்சள் கலந்த பாலைக் குடியுங்கள்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலில் பாலிஃபீனால்கள் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளன. இவை உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களைக் குறைத்து, நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கச் செய்கின்றன. அதே சமயம் இதயத்திற்கு செல்லும் தமனிகளில் ப்ளேக்குகளின் உருவாக்கத்தை குறைக்கவும் உதவுகிறது. ஆகவே அன்றாட சமையலில் ஆலிவ் ஆயிலை சேர்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods That Can Help To Prevent Hardening Of Blood Vessels

Here are some foods that can help to prevent hardening of blood vessels. Read on...
Desktop Bottom Promotion