Just In
Don't Miss
- Sports
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள்... 50% ரசிகர்களை அனுமதிக்க திட்டம் போடும் பிசிசிஐ!
- Movies
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- Finance
சென்செக்ஸ் 1000 முதல் 50,000 வரை.. 30 வருட பயணம்.. இதோ ஒரு பார்வை..!
- News
கடுங்குளிரில் இறக்கிவிடப்பட்ட தாய்.. விஸ்வரூபம் எடுத்த மக்கள் போராட்டம்.. மங்கோலிய பிரதமர் ராஜினாமா
- Automobiles
சீனாவில் தீப்பற்றி எரிந்த டெஸ்லா மாடல் 3... இந்தியாவிற்கு வரவுள்ள எலெக்ட்ரிக் கார் என்பதால் கடும் அதிர்ச்சி...
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
காற்று மாசுபாடு சர்க்கரை நோயை ஏற்படுத்துமா? இந்த உணவை சாப்பிட்டா அதுல இருந்து தப்பிச்சுடலாம்…
நீரிழிவு நோய்க்கு காற்று மாசுபாடு ஒரு முக்கிய காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. பல ஆய்வுகளின் முடிவுகள், அதிகப்படியான காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படுபவர்களுக்கு டைப் 2 நீரிழிவு, டைப் 1 நீரிழிவு, கர்ப்ப கால நீரிழிவு மற்றும் உடல் பருமன் போன்றவற்றை உருவாக்க அதிக ஆபத்து இருப்பதாகக் காட்டுகின்றன. உலகளவில் இது மதிப்பிடப்பட்டது. அதாவது உலக அளவில், 3.2 மில்லியன் பேருக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு காற்று மாசுபாடு தான் காரணம். பணக்கார நாடுகளை விட காற்று மாசுபாட்டிற்கு எதிராக கடுமையான கொள்கைகள் இல்லாத, குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் இந்த பிரச்சனைகள் அதிகமாக காணப்படுகின்றன.
போக்குவரத்து தொடர்பான காற்று மாசுபாட்டில் நீண்ட காலத்திற்கு வெளிப்படுவது, உடலில் இன்சுலின் சார்ந்த குளுக்கோஸ் அதிகரிப்பைக் குறைத்து, இன்சுலின் எதிர்ப்பிற்கு வழிவகுக்கும். மேலும், பீட்டா செல் செயல்பாட்டைக் குறைத்து, அதன் விளைவாக இன்சுலின் சுரப்பையும் குறைக்கிறது மற்றும் கொழுப்பு சேர்வதையும் ஊக்குவிக்கக்கூடும்.
MOST READ: செரிமான மண்டலம் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப தினமும் காலையில இதுல ஒன்ன குடிங்க போதும்...
நீரிழிவு நோயை காற்று மாசுபாட்டுடன் தொடர்புபடுத்துவதை தீர்மானிக்க மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான ஆய்வுகள் கார்கள், லாரிகள் மற்றும் டீசல் வாகனங்களிலிருந்து வெளியேறும் மாசுபடுதல் குறித்தே காட்டுகின்றன. நைட்ரஜன் மோனாக்சைடு (NO) மற்றும் நைட்ரஜன் டை ஆக்சைடு (NO2), கார்பன் மோனாக்சைடு (CO), தரைமட்ட ஓசோன் (O3), பாலிசைக்ளிக் நறுமண ஹைட்ரோகார்பன்கள் (PAH) உள்ளிட்ட சல்பர் டை ஆக்சைடு (SO2), சல்பேட் (SO4), நைட்ரஜன் ஆக்சைடுகள் (NOx) ஆகியவை இதில் அடங்கும். ( டீசல் வெளியேற்ற துகள்கள் (DEP), மற்றும் துகள் பொருள் (PM10 மற்றும் PM2.5).
MOST READ: இதெல்லாம் உள்ளுறுப்பில் உள்ள பிரச்சனையைத் தான் சுட்டிக் காட்டுதுன்னு தெரியுமா?
கீழே உங்கள் உணவில் சேர்க்க வேண்டிய சில முக்கிய உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்
ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன்களை கொண்ட உணவு இரத்தத்தில் சர்க்கரை அளவையும் லிப்பிட்களையும் மேம்படுத்த உதவுகிறது. நீரிழிவு நோயாளிகள் சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி, ஹெர்ரிங், ட்ரௌட் போன்ற சில மீன்களை உட்கொள்ள வேண்டும். அவை ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த மூலமாகும். சைவ உணவு உண்பவர்களுக்கு, கெல்ப் மற்றும் ஸ்பைருலினா போன்ற தாவர அடிப்படையிலான மூலங்கள் நல்ல வழியாக இருக்கும்.

முழு தானியங்கள்
முழு தானியங்கள் போன்ற உணவுகளில் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதுமட்டுமின்றி, அவை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகுந்த நன்மை பயக்கும். இந்த உணவில் உள்ள நார்ச்சத்து செரிமான செயல்முறையை குறைக்கிறது. இதன் விளைவாக ஊட்டச்சத்துக்கள் மெதுவாக உறிஞ்சப்படுவதால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

அவகேடோ
அவகேடோ என்னும் வெண்ணெய் பழங்களில் அதிக அளவிலான நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவிலான சர்க்கரை உள்ளது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது. இது ஆரோக்கியமான கொழுப்பையும் கொண்டுள்ளதால், எடை மற்றும் உடல் நிறை குறியீட்டை (பிஎம்ஐ) பராமரிக்க உதவுகிறது.

பெர்ரி பழங்கள்
அதிக அளவு ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நார்ச்சத்துக்கள் கொண்ட பழங்கள் தான் பெர்ரி பழங்கள். அதாவது, புளூபெர்ரி, ப்ளாக்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் ராஸ்பெர்ரி போன்றவை அனைத்து பெர்ரி பழங்களும், நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.

சியா விதைகள்
சியா விதைகளில் நம்பமுடியாத அளவிற்கு நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது நீரிழிவு நோயின் கிளைசெமிக் கட்டுப்பாட்டை பராமரிக்க உதவுகிறது. மேலும், இது உடலில் உணவு உறிஞ்சப்படும் வீதத்தையும் குறைக்கிறது.

பச்சை இலை காய்கறிகள்
தாவர அடிப்படையிலான புரதச்சத்து நிறைந்த பீன்ஸ் நீரிழிவு நோயாளிகளுக்கு கார்போஹைட்ரேட் உட்கொள்ளலைக் குறைக்க உதவும் ஒரு சிறந்த உணவாக விளங்குகிறது. கீரை போன்ற பச்சை இலை காய்கறிகளில் நீரிழிவு நோய்க்கு ஏற்ற ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கம் மற்றும் ஸ்டார்ச்-ஜீரணிக்கும் என்சைம்கள் உள்ளன.

ஸ்குவாஷ்
ஸ்குவாஷ் குறைந்த கிளைசெமிக் குறியீட்டு மற்றும் சரியான அளவு ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இது நீரிழிவு நோய்க்கு மிகுந்த நன்மை பயக்கும்.

ப்ரோக்கோலி
நீரிழிவு நோயில் இரத்த குளுக்கோஸைக் குறைக்க உதவக்கூடிய காய்கறிகளில் ப்ரோக்கோலியும் ஒன்று. இதில் அதிகப்படியான நார்ச்சத்து உள்ளது.

முட்டை மற்றும் நட்ஸ்
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் முட்டை மற்றும் நட்ஸ்களை தவறாமல் தினந்தோறும் உட்கொள்ள வேண்டியது அவசியம். ஏனென்றால், இது இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுகிறது.

சர்க்கரை வள்ளி கிழங்கு
நீரிழிவு நோயாளிகள் வெள்ளை உருளைக்கிழங்கிற்கு பதிலாக இனிப்பு உருளைக்கிழங்கு என்றழைக்கப்படும் சர்க்கரை வள்ளி கிழங்கை உட்கொள்ளலாம்.

பழங்கள்
ஆரஞ்சு, திராட்சைப்பழம் மற்றும் எலுமிச்சை ஆகியவை பழங்கள் ஆன்டி-டயாபெடிக் விளைவுகளைக் கொண்டுள்ளன. எனவே, நீரிழிவு நோயாளிகள் இந்த பழங்களை அதிகம் சேர்த்து கொள்வது சிறந்தது.

உதவிக்குறிப்புகள்
நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் பின்வரும் உணவை மறவாமல் சேர்க்க வேண்டும்.
* பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
* குறைந்த அளவில் புரதத்தை கொண்ட உணவுகளை சாப்பிடுங்கள்.
* குறைந்த சர்க்கரை கொண்ட உணவுகளை மட்டும் தேர்ந்தெடுத்து உண்ணவும்.
* டிரான்ஸ் கொழுப்புகளை முற்றிலுமாக தவிர்க்கவும்.