For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த உணவுலாம் பொட்டாசியம் நிறைய இருக்காம்... தினமும் கொஞ்சமாவது சா்பபிடுங்க...

|

பொட்டாசியம் என்பது ஒரு கனிமம் ஆகும். இதனை நல்ல உப்பு என்று சில நேரம் கூறலாம். உங்கள் உடலின் இரத்த அழுத்த ஆரோக்கியத்தில் இந்த பொட்டாசியம் பெரும் பங்கு வகிக்கிறது. உங்கள் உணவில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள பொருட்களை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

Potassium

உயர்ந்த பொட்டாசியம் உணவுகளை எடுத்துக் கொள்கிற மனிதர்களுக்கு இரத்த சர்க்கரை அளவு குறைவாக இருக்கும் என்பது நீண்ட காலமாக அறிந்த ஒரு செய்தியாகும். ஆனால் சமீபத்திய ஆய்வு ஒன்று இதன் பெரும் நன்மைகள் குறித்து விளக்கியுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பொட்டாசியம் ஊட்டச்சத்து

பொட்டாசியம் ஊட்டச்சத்து

ஒரு நாளின் பொட்டாசியம் உட்கொள்ளல் அளவை அதிகரித்து, பரிந்துரைக்கப்பட்ட அளவான 4.7 கிராம் எடுத்துக் கொள்வதால் சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் 1.7 மற்றும் 3.2மிமீ Hg அளவிற்கு குறைவதாக கூறப்படுகிறது. இந்த குறைப்பு, மேற்கத்தியர்கள் ஒரு நாளில் 4 கிராம் அளவிற்கு உப்பின் அளவை குறைத்துக் கொள்வதால் ஏற்படும் பலன்களை ஒத்து இருப்பதாக அறியப்படுகிறது.

MOST READ: விஷ்ணு இரணியனை கொல்வதற்காக ஏன் நரசிம்ம அவதாரம் எடுக்க வேண்டும்? அதான் டுவிஸ்ட்...

உணவுகள் பட்டியல்

உணவுகள் பட்டியல்

பொட்டாசியம் என்றதும் நம்மில் பலரின் நினைவுக்கு வருவது வாழைப்பழம். ஆனால் வாழைப்பழம் ஒரு சிறந்த தீர்வாக இருக்க முடியாது. இதற்குக் காரணம், வாழைப்பழத்தில் சர்க்கரை அதிகம் இருப்பதால், ஒரே நேரத்தில் அதிக அளவு வாழைப்பழம் சாப்பிடுவது அவ்வளவு நன்மையைத் தருவதில்லை.

வாழைப்பழம்

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் பொட்டாசியம் உள்ளது. ஆனால் அதே அளவிற்கு மற்ற பழம் மற்றும் காய்கறிகளில் கூட பொட்டாசியம் சத்து உள்ளது. எல்லா வகை பழங்கள் மற்றும் காய்கறிகளில் முதன்மையானதாகக் காணப்படும் ஒரு சத்தாக பொட்டாசியம் சத்து உள்ளது. ஆனால் சில குறிப்பிட்ட உணவுகளில் பொட்டாசியம் சத்து சற்று அதிக அளவில் உள்ளது.

அவகேடோ

அவகேடோ

உதாரணத்திற்கு, அவகாடோவில் வாழைப் பழத்தை விட இரண்டு மடங்கு அளவு பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. மேலும் இந்த பழத்தில் அடைபடாக் கொழுப்பு சத்து அதிகம் இருப்பதால் சிறந்த நன்மையைத் தருகிறது. அவகாடோ மற்றும் சுவிஸ் சார்ட் என்று அழைக்கப்படும் செஞ்சீரை போன்றவை ஒரு நல்ல தீர்வாகும்.

MOST READ: குபேரனின் ஆசி பெற்று பணமழையால் நனையப் போகும் ராசிக்காரர் இவர்தான்...

என்னென்ன உணவுகள்?

என்னென்ன உணவுகள்?

வெள்ளை பீன்ஸ் - 1004 மிகி / கப்

சுவிஸ் சார்ட் - 960 மிகி / கப்

அவகாடோ - 874 மிகி / கப்

பசலைக் கீரை - 838 மிக்கி / கப்

பீட் கீரை - 644 மிகி / அரை கப்

க்ரிமினி காளான் - 635மிகி / 5 அவுன்ஸ்

சால்மன் - 534 மிக்கி / 3 அவுன்ஸ்

ப்ரோகோலி - 505 மிக்கி / கப்

ப்ரசில்ஸ் ஸ்ப்ரௌட் - 494 மிகி / கப்

செலெரி - 344 / கப்

நீங்கள் உயர் இரத்த அழுத்த பாதிப்புடன் போராடினால், பொட்டாசியம் உட்கொள்ளல் அளவு குறித்து கவனம் வேண்டும். பெரியவர்கள் உட்கொள்ள வேண்டி பரிந்துரைக்கும் தினசரி அளவு 4700 மிகி அளவு ஆகும்.

பொட்டாசியம் - இரத்த அழுத்தம் தொடர்பு

பொட்டாசியம் - இரத்த அழுத்தம் தொடர்பு

உங்கள் உடலில் உள்ள அணுக்களின் உள்ளேயும் வெளியிலும் சமச்சீரான அளவு பொட்டாசியம் இருப்பதால் உங்கள் உடல் சீரான முறையில் செயல்படுகிறது. ஒரு எலெக்ட்ரோலைட் என்ற முறையில் பொட்டாசியம் என்பது ஒரு நேர்மின் அயனி ஆகும்.

அதனால் ஒரு குறிபிட்ட அளவு அடர்த்தியை நிர்வகிக்க வேண்டிய அவசியம் உள்ளது. சோடியத்துடன் சேர்ந்து நரம்பு தூண்டல் பரப்பு, தசை சுருக்கம் மற்றும் இதய செயல்பாடு போன்றவற்றில் பொட்டசியத்தின் அவசியம் உள்ளது.

MOST READ: ஓம் நமசிவாய - ஓம் சிவாய நமஹ ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்? எதை எப்போ சொல்லணும்?

உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம் மற்றும் குறைந்த பொட்டாசியம் அளவு ஆகியவற்றிற்கு ஒரு நெருங்கிய தொடர்பு இருப்பதாக நிறைய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. எனவே, இரத்த அழுத்த நிர்வகிப்பில் உப்பின் அளவைக் குறைப்பதில் எந்த அளவுக்கு கவனம் செலுத்தப்படுகிறதோ அதே அளவற்கு பொட்டாசியம் அளவு அதிகரிப்பதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

List Of Foods High In Potassium

Potassium is an essential mineral that the body requires for a variety of processes. Since the body can’t produce potassium, it has to come from food. Unfortunately, the majority of Americans don’t get enough potassium from their diets.
Story first published: Saturday, June 15, 2019, 12:55 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more