For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரவில் தூங்குவதற்கு முன் பழங்கள் சாப்பிட்டால், உங்களின் சர்க்கரை அளவு உயருமாம்...!

|

நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கு பின்னாலும் ஒரு காரணம் இருக்கத்தான் செய்கிறது. அதே போன்று நாம் செய்கின்ற தவறுதலான செயலுக்கும் வேறு வித விளைவுகள் ஏற்படுகின்றன. அந்த வகையில் நாம் சாப்பிடுகின்ற முறையும் அப்படித்தான். உணவை சாப்பிடுவதற்கு மூன்று வேலைகள் என பிரித்து வைத்துள்ளதற்கு பின்னர் எப்படி ஒரு அறிவியல் இருக்கிறதோ, அதே போன்று குறிப்பிட்ட சில உணவுகளை தவறான நேரத்தில் சாப்பிட கூடாது என்பதற்கு பின்னும் அறிவியல் இருக்கிறது.

When to Eat Fruits? Best Time and The Worst

குறிப்பாக பழங்களை தவறான நேரத்தில் சாப்பிடுவதால் எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். மேலும், பழங்களை சாப்பிடுவதற்கான சரியான நேரத்தையும் அறிவோம் நண்பர்களே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உணவு விஷம் ஆகுமா..?

உணவு விஷம் ஆகுமா..?

தலைப்பில் சொல்லப்பட்ட தகவல் உண்மையே. நாம் சரியான நேரத்தில் உணவை சாப்பிடாவிட்டால் அது விஷமாக கூட மாறலாம். அதாவது, உண்ணும் உணவின் தன்மையை நம் உடல் முதலில் எடுத்து கொள்ள வேண்டும். இல்லையெனில் அது உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி விடும்.

பழங்கள் எப்படி..?

பழங்கள் எப்படி..?

உணவு வகைகளில் பழங்கள் சற்றே வித்தியாசமானவை. இவற்றை உகந்த காலத்தில் சாப்பிடா விட்டால் நமது உடலின் ஆரோக்கியம் தான் சீர்கேடு அடையும். பொதுவாகவே, பழங்களில் எண்ணற்ற வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், நார்சத்துகள் உள்ளன. இத்தகைய சத்துக்கள் உள்ள பழங்களை செரிமானம் ஆக கூடிய நேரத்திலே உண்டால் நலம் தரும். இல்லையேல், விபரீதம் ஆகி விடும்.

உகந்த நேரம் எது..?

உகந்த நேரம் எது..?

பழங்களை காலை நேரத்தில் சாப்பிடுவதே சிறந்தது என மருத்துவர்கள் கூறுகின்றனர். அப்போது தான், உடலில் உள்ள உறுப்புகளும் சீராக தனது வேலைபாட்டை ஆரம்பித்திருக்கும். அந்த நேரத்தில் உண்டால் விரைவிலே செரிமானம் ஆகும்.

சர்க்கரையை உடைத்தெறியும் நேரம்..!

சர்க்கரையை உடைத்தெறியும் நேரம்..!

நாம் உண்ணும் ஒவ்வொரு உணவும் தனி தனியாக பிரிக்க படும். அதாவது, திட பொருட்கள் தனியாகவும், திரவ பொருட்கள் தனியாகவும் பிரித்தெடுக்கப்படும். அந்த வகையில் காலை வேளையில் பழங்களை சாப்பிட்டு வந்தால் சர்க்கரையை விரைவிலே உடைத்தெறிந்து விடும். எனவே, எல்லா வகையான ஊட்டசத்துக்களும் வீணாக்காமல் நம் உடலிலே இருக்கும்.

MOST READ: ஆண்களின் பிறப்புறுப்பை சேதப்படுத்தும் உறவு நிலை எது என்று நீங்கள் அறிவீரா?

தவறான நேரம் எது..?

தவறான நேரம் எது..?

எந்த ஒரு உணவையும் கண்ட நேரத்திலும் உண்ண கூடாது. அவ்வாறு சாப்பிட்டால் உடலின் நலனை கெடுத்து விடும். குறிப்பாக பழங்களை இரவு நேரங்களில் சாப்பிடுவது தவறே. அதாவது, தூங்க போகும் முன் பழங்களை சாப்பிடுவது தூக்கத்தை முற்றிலுமாக கெடுத்து விடும்.

சர்க்கரையை உயர்த்தும் நேரம் எது..?

சர்க்கரையை உயர்த்தும் நேரம் எது..?

உடலில் உள்ள சர்க்கரையின் அளவு உயர்ந்தால், நமது உடலுக்கு தான் அது விளைவை தரும். குறிப்பாக தூங்குவதற்கு முன் பழங்களை சாப்பிட்டால் அவை சர்க்கரையின் அளவை உயர்த்தி விடும். எனவே, இரவு உணவு உண்ணுவதற்கு முன்பே சாப்பிடுவது நல்லது.

சர்க்கரை நோயாளிகளுக்கு எப்படி...?

சர்க்கரை நோயாளிகளுக்கு எப்படி...?

எப்போதும் பழங்களை தனியாகவே சாப்பிடுங்கள். இல்லையெனில் அவை சர்க்கரை நோயை கூட ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் சொல்கின்றனர். அதிக புரதசத்து, கொழுப்புகள், நார்சத்து கொண்ட உணவுகளுடன் பழங்களை சேர்த்து சாப்பிட்டால் சர்க்கரையின் அளவை உயர்த்துமாம்.

30 நிமிட இடைவெளி..!

30 நிமிட இடைவெளி..!

நீங்கள் பழத்தை உணவிற்கு முன் அல்லது பின் எடுத்து கொள்ள விரும்பினால், கட்டயம் 30 நிமிடம் இடைவெளி விட்டு தான் சாப்பிட வேண்டும். அவ்வாறு செய்யாவிடில் அது உங்களின் வயிற்று மண்டலத்தை பாதிக்க கூடும். மேலும், அஜீரண கோளாறுகளையும் தருமாம்.

MOST READ: சிறுநீரக கோளாறு உள்ளவரா நீங்கள்..? உங்களின் சாவை தள்ளி போடுகிறது காஃபி..!

உணவுடனே பழங்களை சாப்பிடலாமா..?

உணவுடனே பழங்களை சாப்பிடலாமா..?

காலை அல்லது மதிய உணவுடன் பழங்களை சாப்பிட்டால் அவற்றின் செரிமான நேரம் மாறுபடும். இது போன்று ஒரே நேரத்தில் இரண்டையும் எடுத்து கொண்டால் ஜீரணம் ஆவதை மெதுவாக்கி விடும். ஏனெனில் பழங்களில் ஏராளமான நார்ச்சத்துக்கள் உள்ளன. எனவே, அவை செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்து கொள்ளும்.

மருத்துவரின் ஆலோசனை

மருத்துவரின் ஆலோசனை

எந்த வித பழமாக இருந்தாலும் அவற்றின் சர்க்கரையின் அளவு மிக முக்கியமாகவும். சரியான நேரத்தில் சரியான பழங்களை தேர்ந்து எடுத்து சாப்பிட விடும். இல்லையேல், உடலில் பல்வேறு விதமான கோளாறுகள் ஏற்படும். நீரிழிவு நோயாளிகள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பின்னர் உகந்த பழங்களை எடுத்து கொள்ளலாம்.

இது போன்ற பயனுள்ள புதிய குறிப்புகளை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

When to Eat Fruits? Best Time and The Worst

One of the healthiest foods for our body is fruits. Along with being the healthiest, they are surrounded by many myths like when and how to eat them.
Desktop Bottom Promotion