சொன்னா நம்பமாட்டீங்க... இந்த உணவுகள் உங்க மூட்டுக்களில் அழற்சியை உண்டாக்கும்!

Posted By:
Subscribe to Boldsky

மூட்டுக்களில் ஏற்படும் அழற்சி தான் ஆர்த்ரிடிஸ் என்று அழைக்கப்படுகிறது. தற்போது பெரும்பாலான மக்கள் இந்த பிரச்சனையால் அதிகம் கஷ்டப்படுகிறார்கள். இதனால் அன்றாட செயல்பாடுகளைக் கூட செய்ய முடியாமல் பலர் கஷ்டப்படுகிறார்கள். எலும்பு மூட்டுக்களில் அழற்சி ஏற்பட்டால், அது மூட்டுப் பகுதியில் வீக்கம், கடுமையான மூட்டு வலி, நகர்வதில் சிரமம் போன்றவற்றை சந்திக்க நேரிடும்.

List Of 11 Foods That Cause Inflammation Of The Joints

இந்த மூட்டு அழற்சி பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்க மருந்துகள், உடற்பயிற்சிகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் போன்ற பல வழிகள் உள்ளன. இருப்பினும் வருமுன் காப்பதே நல்லது என்பதால், மூட்டுக்களில் அழற்சியை உண்டாக்குவதற்கான காரணங்கள் எவையென்று தெரிந்து, அவற்றைத் தவிர்த்து வருவதன் மூலம் மூட்டு அழற்சி ஏற்படாமல் தடுக்கலாம்.

ஒருவரது மூட்டுக்களில் அழற்சி ஏற்படுவதற்கு குறிப்பிட்ட சில உணவுப் பொருட்களும் காரணம். அந்த உணவுப் பொருட்கள் எவையென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு மூட்டு அழற்சியை உண்டாக்கும் உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து , அவற்றை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தக்காளி

தக்காளி

அன்றாட சமையலில் தவறாமல் சேர்க்கும் ஓர் உணவுப் பொருள் தான் தக்காளி. இந்த தக்காளியில் ஏராளமான நன்மைகள் அடங்கியிருப்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம். ஆனால் இந்த தக்காளியை ஒருவர் அளவுக்கு அதிகமாக உணவில் சேர்த்து சாப்பிட்டால், அது மூட்டுக்களில் அழற்சியை உண்டாக்கும் என்பது தெரியுமா? சமீபத்திய ஆய்வு ஒன்றில் தக்காளியில் உள்ள குறிப்பிட்ட சில உட்பொருட்கள், மூட்டு அழற்சியை உண்டாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே ஏற்கனவே மூட்டு அழற்சி உள்ளவர்கள், தக்காளியை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

சோடா

சோடா

சோடா மற்றும் எனர்ஜி பானங்களும் மூட்டுக்களில் அழற்சியை உண்டாக்கும். இதற்கு அதில் உள்ள செயற்கை இனிப்புக்கள் தான் காரணம். ஃபுருக்டோஸ் உள்ள பானங்கள், இரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவை அதிகரித்து, மூட்டுக்களில் அழற்சியை உண்டாக்கும். எனவே ஃபுருக்டோஸ் நிறைந்த குளிர் பானங்களை தினந்தோறும் குடிப்பதைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால், மூட்டு அழற்சி பிரச்சனையால் அவஸ்தைப்படக்கூடும்.

சர்க்கரை

சர்க்கரை

சர்க்கரை பல வடிவங்களில், பல உணவுப் பொருட்களில் உள்ளது. செயற்கை இனிப்புகள், மிட்டாய், பேக்கரி பொருட்கள் போன்றவை ஒருவரது உடல் எடையை அதிகரிப்பதோடு, முழங்காலில் வலி ஏற்படுவதைத் தடுத்து, முழங்காலில் அழுத்தம் கொடுப்பதை அதிகரிக்கும். ஆகவே முடிந்தளவு பானங்கள் மற்றும் உணவுப் பொருட்களில் சர்க்கரை சேர்ப்பதைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால், மூட்டு வலியால் அதிக கஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும்.

சுத்திகரிக்கப்பட்ட மாவு

சுத்திகரிக்கப்பட்ட மாவு

சுத்திகரிக்கப்பட்ட மாவு பொருட்களும் முழங்கால் இணைப்புக்களைப் பாதிக்கும். ஏனெனில் இது இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து, உடலில் சைட்டோகீன் என்னும் கெமிக்கலின் உற்பத்தியை அதிகரித்து, மூட்டு இணைப்புக்களில் அழற்சியை உண்டாக்கும். ஆகவே வெள்ளை பிரட், பாஸ்தா மற்றும் இதர பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்திடுங்கள். இல்லையெனில் மூட்டுகள் கடுமையாக பாதிக்கப்படும்.

வறுத்த உணவுகள்

வறுத்த உணவுகள்

வறுத்த உணவுகளில் உள்ள ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் இருக்கும். இவை மூட்டுகளில் அழற்சியை உண்டாக்கும். அதிலும் ஒருவர் தினமும் எண்ணெயில் வறுத்த உணவுகளை உட்கொண்டு வந்தால், அது நாள்பட்ட மூட்டு அழற்சியை உண்டாக்கி, மூட்டு பிரச்சனையை தீவிரமாக்கி மோசமாக்கிவிடும்.

பால் பொருட்கள்

பால் பொருட்கள்

பால் பொருட்களில் உள்ள புரோட்டீன்கள், மூட்டுக்களில் அழற்சியைத் தூண்டும். ஒருவருக்கு மூட்டுக்களில் அழற்சி ஏற்படுவதற்கு பால் பொருட்களும் முக்கிய காரணியாகும். எனவே ஏற்கனவே மூட்டு பிரச்சனை இருப்பவர்கள், பால் பொருட்களைத் தவிர்க்குமாறு மருத்துவர்கள் பரிந்துப்பார்கள். மாறாக தாவர வகை புரோட்டீன்களை எடுக்க அறிவுறுத்துவார்கள்.

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் மூட்டுக்களில் அழற்சியை உண்டாக்கும். இதில் உள்ள கொழுப்பு மற்றும் கலோரிகள் தான், மூட்டுக்களில் அழற்சியை உண்டாக்குவதற்கான காரணம். எனவே உங்களுக்கு மூட்டு வலி அல்லது அழற்சி இருந்து, அசைவ உணவாளராக இருந்தால், இப்பிரச்சனையைத் தவிர்க்க சைவ உணவாளராக மாறுவதே ஒரே வழி.

 ஆல்கஹால்

ஆல்கஹால்

ஆல்கஹால் பல நோய்களைத் தூண்டும். அதில் மூட்டு அழற்சியும் ஒன்று. அதிலும் ஒருவர் அடிக்கடி அல்லது பல வருடங்களாக ஆல்கஹால் அருந்தி வந்தால், அவர்களது உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு, முட்டுக்களில் ஏற்பட்ட அழற்சி தீவிரமாகி, நிலைமை மோசமாகும். எனவே இந்த கெட்ட பழக்கத்தை உடனே கைவிடுங்கள்.

சோள எண்ணெய்

சோள எண்ணெய்

சோளம் மற்றும் சோள பொருட்கள் அனைத்துமே மூட்டுக்களில் அழற்சியை உண்டாக்கும். அதிலும் சோள எண்ணெயில் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இந்த எண்ணெயை ஒருவர் அன்றாட உணவில் தவறாமல் எடுத்து வந்தால், அதன் விளைவாக மூட்டு அழற்சியால் தான் அவஸ்தைப்படக்கூடும். ஆகவே உங்களுக்கு ஏற்கனவே மூட்டு பிரச்சனை இருப்பின், இந்த எண்ணெய் மற்றும் சோள பொருட்களைப் பயன்படுத்தாதீர்கள்.

எம்.எஸ்.ஜி

எம்.எஸ்.ஜி

எம்.எஸ்.ஜி என்பது ஓர் உணவு சுவையூட்டி. இப்பொருள் உணவின் சுவையை மேம்படுத்துவதோடு, அதற்கு அடிமையாக்கவும் செய்யும். இத்தகைய எம்.எஸ்.ஜி இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்களில் அதிகம் இருக்கும். மேலும் இந்த எம்.எஸ்.ஜி ஹோட்டல்களில் கொடுக்கப்படும் சூப் மற்றும் செரில்களில் சுவைக்காக சேர்க்கப்படும். இது மூட்டு அழற்சியைக் கொண்டவர்களுக்கு மிகவும் மோசமானது. இதனை ஒருவேளை மூட்டு பிரச்சனை இருப்பவர்கள் எடுத்தால், நிலைமை மேலும் மோசமாகும்.

காபி

காபி

யாருக்கு தான் சூடாக ஒரு கப் காபி குடிக்கப் பிடிக்காது? ஆனால் ஓர் கெட்ட செய்தி என்னவெனில், அளவுக்கு அதிகமாக காபி குடித்தால், அதுவும் ஒரு நாளைக்கு 3 கப்பிற்கும் அதிகமாக காபி குடித்தால், அது முழங்காலுக்கு நல்லதல்ல. எனவே காபிக்கு பதிலாக, க்ரீன் டீ அல்லது ப்ளாக் டீயை தேர்ந்தெடுத்து குடியுங்கள்.

ஒருவர் தாங்கள் சாப்பிடும் உணவு என்ன என்பதை நன்கு தெரிந்து, தேர்ந்தெடுத்து உட்கொண்டால், அது மூட்டுக்களில் ஏற்படும் பிரச்சனையைத் தவிர்க்க உதவும். அதிலும் மேலே கொடுக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களை ஒருவர் தவிர்த்தால், உடல் ஆரோக்கியமாகவும், எலும்பு மூட்டுகள் பாதுகாப்பாகவும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

List Of 11 Foods That Cause Inflammation Of The Joints

Inflammation of the joints is associated with joint swelling, joint pain, and joint stiffness. Know about the list of foods that cause inflammation of the joints.
Story first published: Monday, February 12, 2018, 16:12 [IST]
Subscribe Newsletter