எச்சரிக்கை! இந்த உணவுகளை மட்டும் உங்க ஃப்ரிட்ஜ்ஜில வெச்சுக்காதீங்க...

Posted By:
Subscribe to Boldsky

தற்போது மிக்ஸி, கிரைண்டர் போன்று ஃப்ரிட்ஜ் ஓர் அத்தியாவசிய பொருளாகிவிட்டது. இதற்கு ஏற்பட கடைகளிலும் விலைக் குறைவில் ஃப்ரிட்ஜ்களும் கிடைக்கின்றன. ஆனால் நம்மில் பலருக்கு ஃப்ரிட்ஜ்ஜில் எந்த பொருளை வைக்க வேண்டும், எதை வைத்து சாப்பிடக்கூடாது என்று தெரிவதில்லை.

Warning! These Are Some Of The Worst Foods In Your Refrigerator

இப்படி தெரியாமல் வாங்கும் அனைத்து உணவுப் பொருட்களையும் ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து சாப்பிடுவதாலேயே, உடல் பருமன், இதய பிரச்சனைகள், உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனைகள், உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய் போன்ற பிரச்சனைகளால் அதிகம் அவஸ்தைப்பட நேரிடுகிறது.

எனவே மக்களின் நலன் கருதி, தமிழ் போல்ட் ஸ்கை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து சாப்பிடக்கூடாத உணவுகளைப் பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து, இனிமேல் அந்த தவறை செய்யாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெள்ளை பிரட்

வெள்ளை பிரட்

ஏற்கனவே வெள்ளை பிரட் ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஏனெனில் இதில் நார்ச்சத்துக்கள் சுத்தமாக இல்லை. அத்தகைய வெள்ளை பிரட்டை பலரும் ஃப்ரிட்ஜ்ஜில் வைத்திருப்போம்.

உங்கள் வீட்டிலும் இருந்தால், உடனே அதை தூக்கி எறிந்துவிடுங்கள். மாறாக நவதானியங்களால் ஆன பிரட்டை சாப்பிடுங்கள். இது இதயத்திற்கு நல்லது மட்டுமின்றி, ஊட்டச்சத்து நிறைந்ததாக நிரூபிக்கப்பட்டதும் கூட.

கொழுப்பு குறைவான தயிர்

கொழுப்பு குறைவான தயிர்

கொழுப்பு குறைவான தயிர், பால் போன்றவை ஆரோக்கியமானது என்று நினைக்காதீர்கள். இவற்றில் உள்ள கொழுப்புக்களை நீக்கும் முறையின் போது, அத்தியாவசிய சத்துக்களும் நீக்கப்படுவதால், இது சத்துக்கள் இல்லாத ஆரோக்கியமற்ற உணவுப் பொருளாக மாறிவிடுகிறது. இதை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து சாப்பிடும் போது, அது மேலும் தீங்கு விளைவிக்கக்கூடியதாகி விடுகிறது.

மயோனைஸ்

மயோனைஸ்

சிலரது வீட்டு ஃப்ரிட்ஜ்ஜில் மயோனைஸ் பாட்டில் இருக்கும். இது முழுமையாக ஆரோக்கியமற்றது மட்டுமின்றி, கலோரிகளும் அதிகம் நிறைந்தது. எனவே மயோனைஸிற்கு பதிலாக, கடுகு சாஸ் வாங்கிப் பயன்படுத்துங்கள்.

சோடா

சோடா

நிச்சயம் அனைவரது வீட்டு ஃப்ரிட்ஜ்ஜிலும் சோடா பான பாட்டில்கள் இருக்கும். சாதாணமாகவே சோடா ஆரோக்கியமற்றது, அதிலும் ஃப்ரிட்ஜ்ஜில் வைத்தால், அது இன்னும் நச்சுமிக்கதாகிவிடும். எனவே இப்படிப்பட்ட பானங்களை வாங்குவதற்கு பதிலாக, பழச்சாறுகளை தயாரித்து சர்க்கரை சேர்க்காமல் குடித்துப் பழகுங்கள்.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி

பதப்படுத்தப்பட்ட இறைச்சி

பதப்படுத்தப்பட்ட இறைச்சி வீட்டு ஃப்ரிட்ஜ்ஜில் இருந்தால், அதை உடனே தூக்கி எறியுங்கள். ஏனெனில் இந்த உணவுப் பொருளில் கார்சினோஜெனிக் என்னும் புற்றுநோய் உண்டாக்கும் பொருள் இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே நற்பதமான இறைச்சியை வாங்கி சமைத்து சாப்பிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Warning! These Are Some Of The Worst Foods In Your Refrigerator

There are certain foods that should not be put in a refrigerator, it will lose its nutrients. Read on to know more.
Story first published: Monday, February 20, 2017, 12:40 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter