முட்டை சைவமா? அசைவமா? நீண்ட நாள் கேள்விக்கான விடையை கண்டுபிடிச்சாச்சு!

Written By:
Subscribe to Boldsky

இந்த உலகில் காலம் காலமாக இருக்கும் பல கேள்விகளுக்கு நம்மால் விடை கண்டறிய முடியாது. அவை என்ன தான் ஒரு எளிமையான விஷயங்களாய் தெரிந்தாலும் கூட, அதற்கான உண்மையை நம்மால் திட்டவட்டமாக சொல்லிவிட முடியாது. அது போன்ற ஒரு கேள்வி தான் முட்டை என்பது சைவமா அசைவமா என்ற ஒரு கேள்வி...!!

நமக்கு தெரிந்து முட்டையில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. வளரும் குழந்தைகளுக்கு முட்டை ஒரு ஆரோக்கியமான உணவாக உள்ளது. இது பலவகையான மேற்கத்திய உணவுகளிலும் சுவையை கூட்டுவதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Is egg vegetarian or non vegetarian

சிலர் முட்டையை அசைவம் என்று வெறுத்து ஒதுக்கிவிடுகின்றனர். அதே சமயம் சிலர் முட்டையை சைவம் தான் என்று உணவில் சேர்த்துக் கொள்கின்றனர்... உண்மையில் முட்டை என்பது சைவமா அல்லது அசைவமா என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் அனைவரும் இருக்கும். இந்த பகுதியில் முட்டை சைவமா அல்லது அசைவமா என்பது பற்றி விரிவாக காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தெரியாத உண்மை

தெரியாத உண்மை

முட்டையை பற்றிய பல தெரியாத கருத்துக்கள் பரவி வருகின்றன. முட்டை சைவமா அல்லது அசைவமா என்ற ஒரு கேள்வி பலரிடையே உள்ளது. முட்டை ஒரு அசைவ உணவு என்று பலரும் கூறுகின்றனர். இந்த கருத்தை பலரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஏனென்றால் அசைவு உணவு என்று சதை அல்லது உயிர் உள்ள உணவுகளை தான் கூறுகின்றனர். ஆனால் முட்டையில் எந்த ஒரு உயிரோ அல்லது சதைப்பகுதியோ இல்லாத காரணத்தால் இது சைவ உணவு தான் என்ற ஒரு கருத்து உள்ளது.

கோழியில் இருந்து தானே வருகிறது?

கோழியில் இருந்து தானே வருகிறது?

கோழியில் இருந்து தான் முட்டை வருகிறது. ஆனால் இது கோழியை கொன்று வருவதில்லை. மிருகங்களிடம் இருந்து பெறப்படும் அனைத்து பொருட்களுமே அசைவ உணவு கிடையாது. உதாரணமாக பால் என்பது பசுவிடம் இருந்து தான் பெறப்படுகிறது. அதற்காக பாலை நாம் அசைவம் என்று சொல்வது கிடையாது.

முட்டையின் வெள்ளை கரு

முட்டையின் வெள்ளை கரு

முட்டையின் வெள்ளை கருவில் புரோட்டின் நிறைந்துள்ளது. ஆனால் இதில் விலங்கு செல்கள் என்பது சிறிதளவு கூட கிடையாது. இதனால் தான் முட்டையின் வெள்ளைக்கரு ஒரு சைவ உணவாகும். மேலும் முட்டையின் வெள்ளைக்கருவை கொண்டு சமைக்கப்படும் அனைத்து உணவுகளுமே அறிவியல் ரீதியாக சைவ உணவுகள் தான்.

மஞ்சள் கருவும் தான்.. ஆனால்?

மஞ்சள் கருவும் தான்.. ஆனால்?

மஞ்சள் கருவின் பெரும்பகுதி கொழுப்பு, கொழுப்பு மற்றும் புரதம் ஆகியவற்றின் கலவை ஆகும், ஆனால் கியூம செல்களை முழுமையாக மஞ்சள் கருவில் இருந்து பிரித்தெடுக்க முடியாது என்பதால் மஞ்சள் கரு ஒரு அசைவம் ஆகும்.

கோழிக்குஞ்சு?

கோழிக்குஞ்சு?

சந்தைகளில் கிடைக்கும் பெரும்பாலன முட்டைகள் குஞ்சு பொரிக்காத தன்மை உடையவை. எனவே இதில் இருந்து கோழிக்குஞ்சுகள் வெளிவருவதற்கான சாத்தியக் கூறுகள் கிடையாது.

ஆரோக்கியம்

ஆரோக்கியம்

முட்டை சைவமோ அசைவமோ ஆனால் அது ஆரோக்கியத்திற்கு மிக மிக சிறந்தது என்பதில் எந்த விதமான குழப்பமும் வேண்டாம். தொடர்ந்து முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை காணலாம்.

கண்களுக்கு...

கண்களுக்கு...

லுடீன் மற்றும் ஸீக்ஸாக்தைன் ஆகிய கரோட்டினாய்டு பொருட்களை கொண்டிருக்கும் முட்டை கருவிழி செயலிழப்பை தடுப்பதால், உங்களுடைய கண்களுக்கு பாதுகாப்பும், ஆரோக்கியமும் கிடைக்கின்றன. இவற்றின் மூலம் கண்புரைகள் உருவாவதையும் தவிர்க்க முடியும்.

புரத சத்து

புரத சத்து

உடல் உறுப்புகள் வளரவும், திசுக்களை சீரமைக்கவும் தேவையான புரதங்கள் முட்டையில் பெருமளவு நிரம்பியுள்ளன.

கால்சிய தேவை...

கால்சிய தேவை...

நமது உடலின் எலும்புகள் மற்றும் பற்களின் உறுதிக்குத் தேவையான வைட்டமின் டி வேக வைத்த முட்டையில் அதிகளவு உள்ளது. இந்த வைட்டமின் கால்சியத்தை அதிகளவில் கிரகித்துக் கொள்வதால், உடலின் உறுதியும் அதிகரிக்கிறது.

தினமும் ஒரு முட்டை

தினமும் ஒரு முட்டை

முட்டையிலுள்ள ஒற்றை செறிவூட்டப்படாத மற்றும் பல்படி செறிவூட்டப்படாத கொழுப்புகள், செறிவூட்டப்பட்ட கொழுப்புகளால் வரும் இதய நோய்கள், மாரடைப்பு மற்றும் இரத்தம் உறைதல் தொடர்பான பிரச்சனைகளை குறைப்பதால், தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது நல்லது என்று ஒரு ஆய்வு முடிவில் சொல்லப்பட்டுள்ளது.

கோலைன்

கோலைன்

முட்டையில் உள்ள கோலைன் என்ற பொருள் நரம்பு மண்டலம் மற்றும் இதய நரம்பு மண்டலம் ஆகியவற்றின் பிரச்சனைகளைக் குறைக்கிறது. மேலும், மூளையைக் கட்டுப்படுத்தி, அது சிறப்பாக இயங்கவும் உதவுகிறது.

நல்ல கொழுப்பு

நல்ல கொழுப்பு

முட்டையில் நிரம்பியிருக்கும் நல்ல கொழுப்புகள், பிரச்சனைகளை உண்டாக்கும் மோசமான கொழுப்புகளை குறைக்கின்றன. மேலும், ஒன்றுக்கும் அதிகமாக சாப்பிட்டாலும் வேறெந்த விளைவுகளையும் முட்டை ஏற்படுத்துவதில்லை.

வைட்டமின் டி

வைட்டமின் டி

வைட்டமின் டி என்பது நமது உடலுக்கு தேவையான இன்றியமையாத சத்துக்களில் ஒன்றாகும். இயற்கையான முறையில் வைட்டமின் டி நிரம்பியுள்ள உணவுப் பொருளாக முட்டை உள்ளது.

மார்பக புற்றுநோய்

மார்பக புற்றுநோய்

முட்டையை தினமும் சாப்பிட்டு வந்தால் மார்பக புற்றுநோய் வருவதற்கான வாயப்புகளை குறைக்க முடியும். இது மட்டுமல்லாமல், பல்வேறு பிரச்சனைகளையும் துரத்தியடிக்கும் முட்டையை உணவின் ஒரு பகுதியாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.

அழகு பராமரிப்பு

அழகு பராமரிப்பு

முடி மற்றும் நகத்தின் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கான முக்கிய ஊட்டச்சத்துக்களான கந்தகம் மற்றும் வைட்டமின் பி12 நிரம்பியுள்ள உணவாக முட்டை உள்ளது. உங்களுக்கு முடி உதிர்வடையும் பிரச்சனை அதிகமாக இருந்தால், கந்தகம் அதிகளவு உள்ள முட்டையை சாப்பிடுங்கள் பிரச்சனை தீர்ந்துவிடும்.

உடல் எடை குறைய..

உடல் எடை குறைய..

உடல் எடை குறைய சாப்பிடாமல் இருப்பது என்பது ஒரு தீர்வாக அமையாது. அதே சமயம் வழக்கத்தை விட குறைந்த கலோரிகளையே சாப்பிட வேண்டும். காலையில் ஒரு முட்டையை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கின்றன. முட்டை உடல் எடையை அதிகரிக்கும். ஆனால் காலை நேரத்தில் ஒரு முட்டையை மட்டும் சாப்பிடுவது என்பது உங்களது மற்ற உணவு தேவைகளை குறைப்பதால், உடல் எடை குறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Is egg vegetarian or non vegetarian

Is egg vegetarian or non vegetarian
Please Wait while comments are loading...
Subscribe Newsletter