ஒரே மாதத்தில் ஆர்த்ரிடிஸ் பிரச்சனையைக் குறைக்க உதவும் உணவுகள்!

Posted By:
Subscribe to Boldsky

உங்களுக்கு ஆர்த்ரிடிஸ் பிரச்சனை உள்ளதா? இப்பிரச்சனையை மருந்து மாத்திரைகளின் உதவியின்றி குறைக்க வேண்டுமா? அப்படியெனில் ஒருசில உணவுகள் உள்ளன. அந்த உணவுகள் என்னவென்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மூட்டுகளின் இணைப்புக்களில் ஏற்பட்டுள்ள பிரச்சனையால் கடுமையான வலியை உணர்வது தான் ஆர்த்ரிடிஸ். இந்த கோளாறை முழுமையாக குணப்படுத்த முடியாவிட்டாலும், கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும்.

அதுவும் ஆரோக்கியமான உணவுகளின் உதவியால் ஆர்த்ரிடிஸ் பிரச்சனையைக் குறைக்கலாம். சரி, இப்போது ஆர்த்ரிடிஸ் பிரச்சனையைக் குறைக்க உதவும் உணவுகள் குறித்து காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மீன்

மீன்

மீனில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்களுடன், நோயெதிர்ப்பு அழற்சி தன்மை, ஆர்த்ரிடிஸ் வலியைக் குறைக்க உதவும்.

சோயா பீன்ஸ்

சோயா பீன்ஸ்

சோயா பீன்ஸ் ஆர்த்ரிடிஸ் பிரச்சனையைக் குறைக்கும். இதற்கு அதில் உள்ள புரோட்டீன்களும், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் தான். இவை தான் ஆர்த்ரிடிஸ் வலி மற்றும் மூட்டுகளில் உள்ள உட்காயங்களை சரிசெய்கிறது.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

ஆர்த்ரிடிஸ் இருந்தால், சமையலில் ஆலிவ் ஆயிலை சேர்த்துக் கொள்ளுங்கள். இது தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்து, ஆர்த்ரிடிஸ் வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

அவகேடோ

அவகேடோ

அவகேடோவிலும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இது எலும்புகளின் மூட்டுகளில் உள்ள காயங்கள் மற்றும் வலியைக் குறைக்க உதவும்.

செர்ரி

செர்ரி

செர்ரியில் உள்ள ஆந்தோசையனின்கள் இயற்கையாகவே ஓர் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை கொண்டவை. ஆகவே ஆர்த்ரிடிஸ் இருப்பவர்கள், செர்ரிப் பழம் கிடைத்தால் தினமும் சிறிது வாங்கி சாப்பிடுங்கள்.

பால் பொருட்கள்

பால் பொருட்கள்

குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்களும் ஆர்த்ரிடிஸ் பிரச்சனைக்கு நிவாரணம் அளிக்கும். பால் பொருட்களில் கால்சியத்துடன் வைட்டமின் டி சத்துக்களும் உள்ளது. இவை எலும்புகள் மற்றும் மூட்டுகளை வலிமைப்படுத்த உதவுபவை.

ப்ராக்கோலி

ப்ராக்கோலி

ப்ராக்கோலியில் வைட்டமின் சி மற்றும் கே உள்ளது. இது ஆர்த்ரிடிஸ் பிரச்சனையால் ஏற்படும் வலியைக் குறைத்து, ஆர்த்ரிடிஸ் பிரச்சனையை கட்டுப்பாட்டுடன் வைக்க உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

உங்களுக்கான சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எது, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

These Foods Can Reduce Arthritis In Just A Month!

If you are looking for foods that can help reduce arthritis, then follow these natural remedies..
Subscribe Newsletter