பெண்களின் பிறப்புறுப்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள்!

Posted By:
Subscribe to Boldsky

பலரும் உடல் ஆரோக்கியம் மேம்படவும், உடலை நோயின்றி வைத்துக் கொள்ளவும் ஏராளமான விஷயங்களைச் செய்வோம். அதில் நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்பது, அதிகளவு நீரைப் பருகுவது, ஜங்க் உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை. உடல் ஆரோக்கியம் என்பது உடலின் சில பாகங்களின் ஆரோக்கியத்தைப் பொறுத்தது.

பிறப்புறுப்பில் துர்நாற்றம் வீசுவதற்கான காரணம் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

அதில் ஆண்கள் தங்கள் ஆண் உறுப்பின் ஆரோக்கியத்தின் மீது காட்டும் அக்கறையை, பெண்கள் அவர்களது யோனி ஆரோக்கியத்தின் மீது காட்டுவதில்லை. இப்படி ஒரு பெண் யோனி ஆரோக்கியத்தின் மீது அக்கறை காட்டாமல் இருந்தால், அதனால் பல நோய்த்தொற்றுகள் யோனியில் ஏற்பட்டு, கடுமையான விளைவை சந்திக்க வேண்டியிருக்கும்.

பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடியை ஏன் ஷேவிங் செய்யக்கூடாது என்று தெரியுமா?

எனவே தமிழ் போல்ட் ஸ்கை பெண்களின் பிறப்புறுப்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில உணவுகளைப் பட்டியலிட்டுள்ளது. அதை ஒவ்வொரு பெண்ணும் உட்கொண்டு வர வேண்டியது அவசியம்.

பெண்களே... 'அந்த' இடத்தில் துர்நாற்றமா? இதோ 15 சூப்பர் டிப்ஸ்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
க்ரீன் டீ

க்ரீன் டீ

க்ரீன் டீயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுக்ள, யோனியில் உள்ள செல்களை வலிமையாக்கி, நோய்த்தொற்றுக்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடி, சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கும்.

மீன்

மீன்

பெண்கள் மீனை அதிகம் சாப்பிட வேண்டும். ஏனெனில் மீனில் உள்ள வைட்டமின்கள் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை, மாதவிடாய் கால வலிகள் மற்றும் பிடிப்புக்களைக் குறைத்து, மாதவிடாய் சுழற்சி காலத்தில் யோனியின் அசௌகரியத்தைக் குறைக்கும்.

தயிர்

தயிர்

தினமும் தயிரை பெண்கள் உட்கொண்டு வந்தால், அதில் உள்ள புரோபயோடிக்குகள் யோனியைத் தாக்கும் ஈஸ்ட் தொற்றுகளில் இருந்து நல்ல பாதுகாப்பை வழங்கி, யோனியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

சோயா பொருட்கள்

சோயா பொருட்கள்

சோயா பொருட்களை பெண்கள் உட்கொண்டால், உடலுறவு கொள்ளும் போது நல்ல இன்பத்தை உணர உதவும். ஏனெனில் சோயா யோனியில் உள்ள சளி சுரப்பிகளை எப்போதும் செயல்பாட்டுடன் இருக்கச் செய்து, யோனி வறட்சியடைவதைத் தடுக்கும்.

ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிள் கூட பெண்களின் பிறப்புறுக்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குறிப்பாக ஆப்பிளை பெண்கள் அதிகம் சாப்பிட்டால், உடலுறவு கொள்ளும் போது பிறப்புறுப்பில் வறட்சி ஏற்படுவதைத் தடுத்து, நல்ல இன்பத்தைக் காண உதவும்.

க்ரான்பெர்ரி ஜூஸ்

க்ரான்பெர்ரி ஜூஸ்

க்ரான்பெர்ரி ஜூஸ் சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்றுகளில் இருந்து விரைவில் நிவாரணம் வழங்கும் என்பது பெரும்பாலானோருக்குத் தெரியும். இதற்கு க்ரான்பெர்ரியில் இயற்கையாகவே உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை தான் காரணம்.

பூண்டு

பூண்டு

ஆண்களுக்கு மட்டும் தான் பூண்டு நல்லதல்ல. பெண்களும் பூண்டு சாப்பிட வேண்டும். பெண்கள் பூண்டு சாப்பிடுவதால் ஈஸ்ட் தொற்றுகள் ஏற்படுவது குறையும். மேலும் பூண்டு பாலுணர்ச்சியைத் தூண்டி, உச்சக்கட்ட இன்பத்தைக் காண பெரிதும் உதவியாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Ultimate Foods For A Healthy Vagina!

Yes, most of us do not realise that vaginal health is equally important to remain disorder free!
Please Wait while comments are loading...
Subscribe Newsletter