உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் சில சக்தி வாய்ந்த உணவுகள்!

Posted By:
Subscribe to Boldsky

உயர் இரத்த அழுத்தம் என்பது ஒருவரை மெதுவாக கொல்லும் மிகவும் மோசமானது. ஒருவருக்கு இரத்த அழுத்தம் இருந்தால், அதனால் பல்வேறு உடல்நல பிரச்சனைகளான பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு மற்றும் மாரடைப்பு போன்றவை ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது.

பலர் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த மருந்து மாத்திரைகளை எடுத்து வருவார்கள். ஆனால் அளவுக்கு அதிகமாக எடுத்தால், அதன் காரணமாக தூக்கமின்மை, தலைச்சுற்றல், தசைப்பிடிப்புக்கள் போன்ற பக்க விளைவுகளை சந்திக்கக்கூடும்.

ஆனால் அளவான மருந்து மாத்திரைகளுடன், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் நிறைந்த உணவுகளை உட்கொண்டு வந்தால் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம். கீழே அந்த உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து உணவில் சேர்த்து நன்மைப் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கிவி

கிவி

ஒரு கிவி பழத்தில் 9% பொட்டாசியமும், 7% மக்னீசியமும், 2% கால்சியமும் உள்ளது. இவை ஒரு நாளைக்கு ஒருவரது உடலுக்கு வேண்டிய அளவிலான சத்துக்களாகும். எனவே உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், இப்பழத்தை உட்கொண்டு வந்தால், இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம்

குடைமிளகாய்

குடைமிளகாய்

ஒரு கப் குடைமிளகாயில் ஒரு நாளைக்கு வேண்டிய பொட்டாசியமும், 4% மக்னீசியமும், 1% கால்சியமும் அடங்கியுள்ளது. எனவே அடிக்கடி இந்த காய்கறியை உணவில் சேர்த்து வாருங்கள்.

அவகேடோ

அவகேடோ

ஒரு அவகேடோ பழத்தில் 20% பொட்டாசியமும், 10% மக்னீசியமும், 1% கால்சியமும் உள்ளது. இப்பழம் சுவையானது மட்டுமின்றி, உடலின் இதர பகுதிகளுக்கும் மிகுந்த நன்மைகளை வாரி வழங்கக்கூடியது.

கேல்

கேல்

ஒரு கப் கேல் கீரையில் 9% பொட்டாசியம், 6% மக்னீசியம் மற்றும் 9% கால்சியம் நிறைந்துள்ளது. எனவே உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், இந்த கீரை கிடைத்தால், தவறாமல் வாங்கி சாப்பிடுங்கள்.

பீச்

பீச்

சிறிய அளவிலான பீச் பழத்தில் 8% பொட்டாசியம், 3% மக்னீசியம் மற்றும் 1% கால்சியம் உள்ளது.

வாழைப்பழம்

வாழைப்பழம்

ஒரு சிறிய வாழைப்பழத்தில் 12% பொட்டாசியம், 8% மக்னீசியம் மற்றும் 1% கால்சியம் உள்ளது. குறிப்பாக இது அனைத்து காலங்களிலும் விலை மலிவில் கிடைக்கக்கூடியது என்பதால், தவறாமல் வாங்கி சாப்பிட்டு பயன் பெறுங்கள்.

ப்ராக்கோலி

ப்ராக்கோலி

ஒரு கப் ப்ராக்கோலியில் 14% பொட்டாசியமும், 8% மக்னீசியமும், 6% கால்சியம் அடங்கியுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Seven Powerful Foods That Reduce BP

High blood pressure is a passive killer as it worsens many other health conditions. Here are some powerful foods that reduce blood pressure. Read on to know more...
Story first published: Sunday, July 17, 2016, 6:54 [IST]
Subscribe Newsletter